தமிழன் என சொல்ல வெட்கப்படுகிறாரா சத்யராஜ்,.? என்ன காரணம் தெரியுமா.? காசு, பணம், துட்டு, மணி..மணி..

0
Follow on Google News

நடிகர் சத்யராஜ், நடிகர் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் தமிழ் மொழி பற்று அதிகம் உள்ளது போன்று தங்களை காட்டி கொள்ள கூடியவர்கள். இதில் தனது பெயருக்கு முன் புரட்சித்தமிழன் என அடைமொழியுடன் அழைக்கப்படும் நடிகர் சத்தியராஜ், கடந்த காலங்களில், காவேரி பிரச்சனை, இலங்கையில் நடந்த ஈழ தமிழர் பிரச்சனை போன்ற விவகாரங்களில் உணர்ச்சி போங்க பேசியவர் சத்யராஜ்.

தமிழர்கள் சாமி கும்பிட போக வேண்டும் என்றால் கூட தமிழ்நாட்டில் இருக்கும் முருகன் போன்ற மற்ற தெய்வங்களை கும்பிட வேண்டும், கேரளாவில் இருக்கும் ஐயப்பன் சாமியை, அல்லது ஆந்திராவில் இருக்கும் திருப்பதி சாமியை கும்பிட கூடாது என்று கூட பேசிய சத்யராஜ். மேலும் காவேரி நதி நீர் பிரச்சனையில் கர்நாடக மக்களை மிக கடுமையாக பேசியவர், அப்போது மேடையில் இருந்த கர்நாடகாவை சேர்ந்த ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார்.

இப்படி உணர்ச்சி போங்க பேசி வந்த நடிகர் சத்யராஜை தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட நபர்கள், புரட்சிதமிழன், தன்மான தமிழன், வீர தமிழன் என கொண்டாடி வந்தனர், மேலும் தமிழ்நாட்டுக்கு எதாவது பிரச்சனை என்றால் சத்யராஜ் என்ன பேச போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இதற்கு முன்பு சத்யராஜ் பேச்சில் உணர்ச்சி பொங்கிய இளைஞர் மத்தியில் இருந்து வந்தது. இதுவே சத்யராஜுக்கு பிரச்சனையாகவும் உருவெடுத்தது.

சத்யராஜ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் அணைத்து மொழிகளிலும் வெளியாக இருந்த போது, கர்நாடகாவில் மட்டும் இதற்கு முன்பு நடிகர் சத்யராஜ் கர்நாடக மக்களை இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டால் மட்டும் தான் படம் வெளியாகும் என கடும் எதிப்பு வழுத்ததை தொடர்ந்து, கர்நாடக மக்களிடம் வருத்தம் கேட்டு கொண்டார் சத்யராஜ். இதன் பின்பு தான் கர்நாடகாவில் பாகுபலி திரைப்படம் வெளியானது.

பாகுபலி படத்துக்கு பின்பு அதில் கட்டப்பாவாக நடித்த நடிகர் சத்யராஜ் மார்க்கெட் தெலுங்கு, கன்னடம், மலையலாம், ஹிந்தி என உயர்ந்தது. இதனை தொடர்ந்து தெலுங்கில் ஒரு படத்துக்கு சுமார் 2 கோடி வரை சம்பளம் நடிகர் சத்யராஜ் வாங்க படுவதாக கூறப்படும் நிலையில், பாகுபலி படத்துக்கு பின்பு தன்னை ஒரு தமிழன் என்று அடையாளப்படுத்தி கொள்வதை நிறுத்தி கொண்டு, தமிழ் உணர்வுடன் உணர்ச்சி பொங்கி பேசுவதை சத்யராஜ் நிறுத்தி கொண்டதாக கூறப்படும் நிலையில்.

பிற மொழிகளில் நடிகர் சத்யராஜ் நல்ல மார்க்கெட் இருப்பதால், தற்போது தன்னை ஒரு புரட்சி தமிழன் என அடையாள படுத்தி உணர்ச்சி பொங்க மொழி உணர்வில் பேசினால், பிற மொழியில் தனக்கு இருக்கும் மார்க்கெட் சரிந்து பட வாய்ப்புகள் கிடைக்காது என்பதால் தான், தற்போது தமிழன் என்று சொல்ல வெட்கப்படுகிறார் நடிகர் சத்யராஜ் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில். இவை அனைத்துக்கு காரணம் காசு, பணம், துட்டு, மணி..மணி.. என கிண்டல் செய்து பாடலும் பலர் படி வருவது கூறிப்பிடத்தக்கது.