சங்கரை காக்க வைத்து ஏமாற்றிய சரத்குமார்… அவமானத்துடன் திரும்பிய சங்கர்.. என்ன நடந்துச்சு தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பவித்ரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சங்கர். சூரியன், இந்து போன்ற படங்களில் இயக்குனர் பவித்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய போது முழு சுதந்திரத்தை தன்னுடைய படங்களில் பணியாற்றுவதற்கு கொடுத்தார் பவித்ரன். இதனால் ஒரு இயக்குனர் போன்றே பட வேலைகளை செய்து வந்தார் சங்கர்.

ஒரு முறை இளையராஜா இந்து படத்தின் இசைக்காக பவித்திரன் மற்றும் சங்கர் இருவரும் இளையராஜாவின் ஸ்டுடியோ சென்றுள்ளனர். அங்கே இளையராஜா ஒவ்வொரு ட்யூனாக போட, அதற்கு சங்கர் இது சரியில்லை, அது சரியில்லை என வேற டீம் போடுங்க…வேற டீன் போடுங்க என்று தெரிவித்துக் கொண்டே வருகிறார். ஆனால் அருகில் இருந்த அந்த படத்தின் இயக்குனர் பவித்ரன் அமைதியாக இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் டென்ஷனான இளையராஜா நீ இயக்குனரா,இல்லை அவர் இயக்குனரா.? என்பதை முடிவு செய்துவிட்டு வாருங்கள். இனி நான் உங்கள் படத்திற்கு டீன் போட மாட்டேன் என்று கோபத்துடன் தெரிவித்துவிட்டார். இதன் பின்பு இந்து படத்தில் தேவா இசையமைத்தார். உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே தயாரிப்பாளர் கே டி குஞ்சுமேனன் தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாகும் வாய்ப்பு சங்கருக்கு கிடைத்தது.

இதனை தொடர்ந்து பவித்திரனிடமிருந்து விலகி ஜென்டில்மேன் படத்தில் கே டி குஞ்சு மேனன் தயாரிப்பில் கம்மிட் ஆனார் சங்கர். இந்த படத்தில் முதலில் நடிக்க நடிகர் சரத்குமாரை தேர்வு செய்த கேடி குஞ்சுமேணன், இயக்குனர் சங்கரை கதை சொல்வதற்காக அனுப்பி வைத்துள்ளார். கதை சொல்ல காலையில் சென்ற இயக்குனர் சங்கர் மதியம் 3 மணி வரை காக்க வைத்து கதை கேட்க வரவில்லை சரத்குமார்.

இதற்கு காரணம் தொடர்ந்து பவித்திரன் இயக்கத்தில் இந்து, சூரியன், வசந்தகால பறவைகள், ஐ லவ் இந்தியா போன்ற தொடர்ந்து பவித்ரன் படங்களிலும் சரத்குமார் நடித்து வந்தார். இந்த சூழ்நிலையில் பவித்திரனை விட்டு விலகிச் சென்ற சங்கர் இயக்கும் படத்தில் தான் நடித்தால், பவித்திரனுக்கு தன் மீது மன வருத்தம் வந்துவிடும் என்பதற்காக, சங்கரை அழைத்து காக்க வைத்து அவரை சந்திக்காமல் புறக்கணித்துள்ளார்.

இந்நிலையில் காத்திருந்து சரத்குமார் கதை கேட்க வராததால், ஏமாற்றத்துடனும் அவமானத்துடன் திரும்பி சங்கர், நடந்ததை தயாரிப்பாளர் குஞ்சுமேனன் அவர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கே டி குஞ்சுமேனன் பரவாயில்லை வேறு ஒரு நடிகரை தேர்வு செய்வோம் என்று அதன் பின்பு தான் நடிகர் அர்ஜுனை தேர்வு செய்து இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என் வீட்டு பக்கமே வர கூடாது என விரட்டியடிப்பு… வடிவேலு – சுந்தர் சி இடையில் நடந்தது என்ன தெரியுமா.?