இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட தற்கொலை மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது, அதில் குறிப்பாக தமிழகத்தில் அதிகப்படியான தற்கொலை மரணங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு 2021ம் ஆண்டு மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தால், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் இந்தியாவில் ஈட்டிய வருமானம் ரூபாய் 10,100 கோடி என்றும், இது இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆன்லைன் சூதாட்ட வருமானத்தில் அதிக பணத்தை இழக்கும் மாநிலம் தமிழ்நாடு என்பது புள்ளிவிவரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 60-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளனர், கடந்த 10 மாதங்களில் மட்டும் 22 பேர்ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளனர்,
அதில், தனியார் வங்கியில் வருடம் ரூ.38 இலட்சம் சம்பாதிக்கக் கூடிய ஒருவர் ரூ.75 இலட்சம் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, மனைவிக்கு விஷயம் தெரிந்தவுடன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது, அதே போன்று சென்னை மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த பவானி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி,
3 லட்சம் ரூபாய்க் கடன் வாங்கி விளையாடியுள்ளார். அதோடு, 20 சவரன் நகைகளை விற்று விளையாடியுள்ளார். கடன்சுமை அதிகரித்ததால் (05.06.22) அன்று, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த திருவான்மியூர் இரயில்வே நிலையத்தில் டிக்கெட் விற்பனையாளராக இருக்கும் டீக்காரம் என்ற ஊழியர் பணிபுரியும் இடத்தில் பணத்தை திருடி விட்டு கொள்ளை போனதாக நடித்து மனைவியுடன் சிறைக்கு சென்றார்.
இப்படி தமிழ்கத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்தது மனஉளைச்சல் காரணமாக நாளுக்கு நாள் தற்கொலை மரணம் அதிகரித்து வருகின்றது. மேலும் தற்கொலை செய்து கொண்டவர்கள் குடும்பம் கடும் சிரமத்தை சந்தித்து வரும் இந்த நிலையில், மக்கள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆன்லைன் விளையாட்டுக்கு மக்கள் அடிமையாகாமல் காக்க வேண்டிய சினிமா துறையினர் ஆன்லைன் சூதாட்டம் விளையாட மக்களை தூண்டும் விதத்தில் விளம்பரத்தில் நடித்து வருகின்றனர்.
இதில் நடிகர் சரத்குமார் ஆன்லைன் சூதாட்டம் விளம்பரத்தில் நடித்து, மக்களை ஆன்லைன் சூதாட்டம் விளையாட தூண்டுவது போன்று நடந்து கொண்டது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. சரத்குமார் உனக்கு இதெல்லாம் ஒரு பொழப்பா, காசுக்காக நீ மக்கள் உயிர் மேல் விளையாடலாமா, அட ..ச்… சீ.. என மக்கள் சரத்குமாரை காரி உமிழ்வது போன்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.