சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த நடிகை ராமாபிரபா அவருடைய கணவர் சரத்பாபுவை விட்டு பிரிந்து, அவர் சம்பாரித்த பணம் எல்லாம் போச்சு, சினிமாவில் பட வாய்ப்பும் இல்லை, சரி இனி ஊருக்கு போய்விடலாம் என முடிவெடுக்கிறார் நடிகை ரமா பிரபா. ஆனால் சொந்த ஊரான ஆந்திராவுக்கு போவதற்கு கூட வழி செலவுக்கு பணம் இல்லாததால் யாரிடம் சென்று உதவி கேட்பது என பெரும் குழப்பத்தில் இருந்த ரமா பிரபா நினைவுக்கு வந்தது ரஜினிகாந்த்.
உடனே ரஜினி வீட்டிற்கு சென்று நான் திரும்ப ஆந்திராவுக்கு செல்ல வேண்டும் ஏதாவது உதவி செய்யுங்க என்கிறார் ரமாபிரபா, அப்போது ரமா பிரபாவின் நிலைமையை பார்த்து கண்கலங்கிய ரஜினிகாந்த், உங்களுக்காக இந்த நிலைமை என ரமாபிரபாவை அமர வைத்த ரஜினிகாந்த், அருகில் சற்று முன் ஒரு படத்தில் நடிக்க ரஜினிக்கு அட்வான்ஸ் கொடுத்த மொத்த பணத்தை எடுத்து ரமாபிரபா கையில் கொடுத்துள்ளார்.
அதற்கு ரமா எனக்கு இவ்வளவு தொகை வேண்டாம். எனக்கு ஊருக்கு போவதற்கு செலவுக்கு மட்டும் பணம் இருந்தால் போதும் என தெரிவிக்க, அதற்கு ரஜினிகாந்த் இல்லை மொத்த பணத்தையும் எடுத்துக்கொள், என சுமார் 40 ஆயிரம் ரூபாயை அன்றைய காலகட்டத்தில் கொடுத்துள்ளார். மேலும் நீ எங்கிருந்தாலும் நன்றாக இரு என ஆசீர்வதித்து அனுப்பி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.
அந்த காலத்தில் 40 ஆயிரம் என்பது மிகப்பெரிய தொகை, அந்த பணத்தை வைத்துக்கொண்டு தான் இனி சினிமாவே வேண்டாம் என ஒதுங்கிய ரமா பிரபா, ஆந்திராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வீடு கட்டி வாழ்ந்து வந்துள்ளார். சினிமாவில் புகழ்பெற்ற நடிகை ரமாபிரபா ஒரு காலகட்டத்தில் எங்கே இருக்கிறார் என பலருக்கு தெரியாமல் இருக்கையில், பிரபல தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் ரமா பிரபா தான் என்பதால் அவர் இருக்கும் இடம் தேடி அழைகிறார்.
2000 காலகட்டத்தில் ரமா பிரபா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் கிருஷ்ணவம்சி, தன்னுடைய படத்தில் நடிக்க ரமாபிரபாவை வலியுறுத்துகிறார். ஆனால் அதற்கு ரமாபிரபா எனக்கு சினிமாவே வேண்டாம். என மறுத்து விடுகிறார். இருந்தும் கதையை கேளுங்கள் என கிருஷ்ணவம்சி தெரிவிக்க, கதையைக் கேட்ட பின்பு ரமாபிரபாவுக்கு ஆர்வம் ஏற்பட்டு இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என ஒப்புக்கொள்கிறார்.
இந்த படத்தில் ரமா பிரபா நடித்த பின்பு அவருக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் மிக பெரிய ஹிட் படமாக அமைகிறது. அதன் பின்பு மீண்டும் சினிமாவில் ஜெகநாத் இயக்கத்தில் தொடர்ந்து ராமா பிரபா நடித்து வருகிறார். அப்போது பூரி ஜெகநாத்திடம் ஒரு உதவி கேட்கிறார் ராமா பிரபா. அதாவது நான் கிராமத்தில் இருந்த காலத்தில் மாத மாதம் எனக்கு மணியாடர் மூலம் பணம் வருகிறது.
ஆனால் அது யார் அனுப்புகிறார் என்கின்ற எந்த ஒரு விவரமும் இல்லை, அதனால் இதை யார் அனுப்பினார்கள் என்பதை தனக்கு கண்டுபிடித்து தர வேண்டும் என உதவி கேட்கிறார் ரமா பிரபா. உடனே அவருக்கு வந்த மணியாடர் ரசீதை வாங்கிக் கொண்டு சிலர் உதவியுடன் கண்டுபிடித்து விடுகிறார் பூரி ஜெகநாத்.
ரமா பிரபாவிடம் நீங்கள் அண்ணன் போல் நினைத்த தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஷ் ராவ் அவர்களின் மகன் நாகார்ஜுன்தான் உங்களுக்கு மாத மாதம் பணம் அனுப்புகிறார் என்று சொன்னதும், கண் கலங்கி விடுகிறார் ராமா பிரபா.. உடனே ரமாபிரபாவுக்கு தனக்கு யார் பணம் அனுப்புகிறார் என்கிற விஷயம் தெரிந்துவிட்டது என நாகர்ஜுனாவுக்கு கவனத்திற்கு செல்கிறது.
அதற்கு ஒரு காலகட்டத்தில்எங்களுடைய தந்தை இறந்த பின்பு ரமாபிரபா சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு வந்து கஷ்டப்பட்ட காலத்தில், எங்களை சந்திக்க முயற்சித்த போது., எங்களுடைய உறவினரால் அவமானப்படுத்தப்படுகிறார் ராமா பிரபா, இதை பார்த்துவிட்டு என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மேலும் ரமா பிரபாவுக்கு யார் உதவி செய்தார்கள் என்று தெரியக்கூடாது என்பதற்காக தான் தொடர்ச்சியாக மாதம் மாதம் மணியாடர் மூலம் பணம் அனுப்புனேன் என்கிற விவரத்தை தெரிவித்த நாகஅர்ஜுன். அதன் பின்பு அவர் நடிக்கும் படங்கள் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் நடிக்கும் படங்களிலும் ரமா பிரபாவுக்கு நடிக்கும் வாய்ப்பை கொடுத்து உதவி செய்து வந்துள்ளார்.