விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்கின்ற காமெடி நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்தவர் சந்தானம். தமிழ் சினிமாவில் மிக பெரிய அளவில் ஹிட்டான படங்களை கேலி கிண்டலும் நகைச்சுவையாக சந்தானம் நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட லொள்ளு சபா நிகழ்ச்சி அப்போதைய இளைஞர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து கொண்டிருந்த போதே சந்தானத்திற்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவானது.
நடிகர் சிம்பு நடித்து இயக்கிய மன்மதன் படத்தில் நடிகர் சந்தானத்தை வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகம் செய்து வைத்தவர் நடிகர் சிலம்பரசன். ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமாக அறியப்பட்ட சந்தானம், மன்மதன் படத்தில் சந்தானம் என்ட்ரி கொடுக்கும் முதல் சீனுக்கு திரையரங்கில் ரசிகர்கள் பெருமளவில் விசில் அடித்து வரவேற்கும் அளவிற்கு தொலைக்காட்சியிலேயே புகழ்பெற்றவர் சந்தானம்.
மிக குறுகிய காலத்தில் தன்னுடையை நக்கலாக காமெடியால் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் காமெடியனாக நடித்த சந்தானம் காமெடிக்காகவே சிவ மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றது. இது போன்று பல படங்கள் படத்தின் கதை சொதப்பலாக இருந்தாலும் சந்தானம் காமெடிக்காக வெற்றி பெற்ற படங்கள் ஏராளம்.
தொடர்ந்து காமெடியில் பிஸி நடிகராக இருந்த சந்தானம், தன்னை போல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமாக அறியப்பட்ட சிவகார்த்திகேயன் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஹீரோவாக நடித்த பின்பு, தானும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கின்ற ஆசையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்தார், பெரும்பாலும் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களை அவர் சொந்தமாக தயாரித்த படங்கள் தான்.
ஆரம்பத்தில் சந்தானம் சொந்த தயாரிப்பில் ஹீரோவாக அவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்து நல்ல லாபத்தையும் பெற்று தந்தது. ஆனால் அடுத்தடுத்து சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து, அவருக்கு மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி தந்தது, இதனால் கடன் வாங்கி படம் எடுக்கும் சூழலுக்கு தள்ள பட்ட சந்தானம் தயாரிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வந்ததால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பெரும் கடனாளியானார் சந்தானம்.
மேலும் காமெடியனாக நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க்க மறுத்து, நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்து வரும் சந்தானம் தற்பொழுது வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தத்தளித்து வருகிறார். இந்த நிலையில் சந்தானம் ஒரு படத்திற்கு தற்பொழுது 5 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் கால் சீட் வாங்க வேண்டும் என்றால் தற்பொழுது அட்வான்ஸ் தொகை கொடுத்து அதன் பின்பு சுமார் இரண்டு வருடங்கள் அவருக்கான கால் சீட்டுக்காக காத்திருக்கும் நிலை தயாரிப்பாளர்களுக்கு உள்ளது.
அந்த வகையில் தற்பொழுது சந்தானம் வாங்கும் 5 கோடி சம்பளத்தில், 50 லட்சம் குறித்து நாலரை கோடி முழு பணத்தையும் ஒரே பேமண்டில் கொடுத்தால் அவர்களுக்கு உடனே கால் சீட் கொடுத்து வருகிறார் சந்தானம். இப்படி ஒரே பேமெண்ட்ல் கிடைக்கும் பணத்தில் வாங்கிய கடனை சந்தானம் அடைத்து வருவதாக கூறப்படுகிறது.