நோ டவுட்… நடிகர் சந்தானம் சங்கியே தான்… அம்பலப்படுத்திய முக்கிய பிரபலம்..

0
Follow on Google News

நடிகர் சந்தானம் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் வடக்கப்பட்டி ராமசாமி படத்தின் ட்ரைலரை பொங்கல் பண்டிகை அன்று வெளியிட்டு பலருக்கு பொங்கல் வைத்துள்ளாரா சந்தானம் அல்லது தனக்கு தானே பொங்கல் வைத்து கொண்டாரா சந்தானம் என சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு சந்தனம் வெளியிட்ட வடக்கப்பட்டி ராமசாமி படத்தின் ட்ரைலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கப்பட்டி ராமசாமி படத்தில் ட்ரைலரில், சந்தானம் சூடம் ஏற்றி சாமி கும்பிடும் போது ஒரு குரல் கேட்கிறது, அதில் ஏன்டா டேய், இந்த சாமியே இல்லனு ஊருக்குள்ள சுத்திக்கிட்டு திருஞ்சியே, அந்த ராமசாமி தானே நீ என ஒருவர் கேட்க, அதற்கு சந்தானம் நான் அந்த ராமசாமி இல்லனு சொல்லும் காட்சி பெரியாரை தான் குத்திக்காட்டி சந்தானம் இப்படி பேசியிருக்கிறார் என சர்ச்சையாக உருவெடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதே நேரத்தில் இந்த சர்ச்சைகுரிய ட்ரைலருக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பினாலும், மறுபக்கம் ஆதரவும் பாராட்டும் சந்தானத்துக்கு பெற்று தந்து வருகிறது. சந்தானம் சமூகத்தை சேர்ந்த சிலர் சர்ச்சை கூறிய வசனத்தை பேசி மிக பெரிய விவாதத்தை ஏற்படுத்திய சந்தானத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாட தொடங்கினார்கள். ஆண்ட பரம்பரைக்கு ஒரு எடுத்துக்காட்டு சந்தானம் என்பதை செய்து காட்டியுள்ளார்.

அந்த ராமசாமி நான் இல்லை, அந்த ராமசாமி வேற ஆளு, அது யார் என்பது அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும்? என சந்தானம் தைரியமா பேசியுள்ளார் என ஒரு பக்கம் அவர் சார்த்த சமூகத்தினர், இந்த தைரியம் யாருக்கு வரும் என சிலரை ஒரு பக்கம் சிதறவிட்டு கொண்டிருக்கையில், என்ன நடந்ததோ தெரியவில்லை, சந்தானம் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்த சர்ச்சை கூறிய வடக்கப்பட்டி ராமசாமி ட்ரைலரை டெலிட் செய்து விட்டார்.

சந்தானம் இந்த வீடியோவை நீக்கியதும், இவ்வளவுதான் உங்க வீரமா சந்தானம்? என ஒரு தரப்பினர் நடிகர் சந்தனத்தை கிண்டல் செய்து வருகிறார்கள், மேலும் சந்தானம் அக்மார்க்கு முத்திரை குத்திய சங்கி, அவர் தற்பொழுது வெளியுட்டுள்ள ட்ரைலர் படத்தின் பெயரை வடக்குப்பட்டி ராமசாமி என்பதற்கு பதில் வடநாட்டு ராமர்சாமி என்று மாற்றி கொண்டால் மிக பொருத்தமாக இருக்கும் என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் தற்பொழுது சந்தானம் சங்கியா.? என்கிற விவாதம் அனல் பறந்துகொண்டிருக்கையில், இரண்டு வருடத்திற்கு முன்பு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சந்தானம் பற்றி பேசிய வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது அதில், ஜக்கி வாசுதேவும் சரி, நடிகர், காமெடி நடிகர் சந்தானம் என ஒரு ஆள் இருக்கார், வழக்கறிஞர் சாய் தீபக்னு இவங்க எல்லாம் தீய சக்திகள். இவங்க எல்லாம் மத நல்லிணக்கத்தை உடைத்து, மதக்கலவரத்தை, சமுதாய கலவரத்தை உருவாக்கக்கூடிய தீய சக்திகளாக நான் கருதுகிறேன் என பி.டி.ஆர் பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி அன்றே சொன்னார் பி.டி.ஆர். என பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் தற்பொழுது சந்தானம் நடித்த படத்தில் ராமசாமி குறித்து சர்ச்சைக்குரிய வசனதிற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும், ஒரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வரும் நிலையில், இதில் உச்சகட்டமாக சந்தானம் அக்மார்க் முத்திரை குத்திய சங்கி என விமர்சனம் செய்து வருவது பற்றி, நீங்கள் சந்தானம் பேசியுள்ளார் சர்ச்சை கூறிய ராமசாமி வசனத்தை ஆதரிக்கிறீர்களா.? அல்லது எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா.? என உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.