காக்க வைத்து விரட்டப்பட்ட சமுத்திரக்கனி… இந்தியன் படப்பிடிப்பில் நடந்த உச்சகட்ட அவமானம்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் சமூக அக்கறையுடன் படம் எடுக்கும் இயக்குனர்களில் சமுத்திரகனியும் ஒருவர். இவர் தெலுங்கு கன்னடம் என பன்மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். டைரக்ஷன் மட்டும் இன்றி அவ்வப்போது சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிகராக வாழும் வந்த சமுத்திரக்கனி, தற்பொழுது மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் இந்தியன் 2 படத்தில் நடித்தது பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார். 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்ட சமுத்திரக்கனி, தனது இரண்டாவது படமான நிறைந்த மனசு என்ற படத்தை கேப்டன் விஜயகாந்தை வைத்து எடுத்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோதய சித்தம் தொண்டன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி வெற்றி கண்டார். சமுத்திரகனி இயக்கிய படங்கள் பெரும்பாலும் சமூக அக்கறை கொண்டவையாக இருப்பதால் ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்திருந்தது. இப்படி வரிசையாக நிறைய படங்களை இயக்கியிருந்தாலும் அவ்வப்போது படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி நடித்து வந்தார்.

இருப்பினும் சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நடிகராக பிரபலமடைந்தார். அந்தப் படத்தில் கிடைத்த ஆதரவை தொடர்ந்து ஈசன், சாட்டை, நீர் பறவை, வேலையில்லா பட்டதாரி, ரஜினி முருகன், விசாரணை, காலா, வடசென்னை, ஆர்ஆர்ஆர், துணிவு போன்ற பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தேர்வு செய்து நடித்து வந்தார்.

இப்போது சமுத்திரகனி யாவரும் வல்லவரே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் காக youtube சேனல் ஒன்றில் பேட்டியளித்த சமுத்திரக்கனி, இந்தியன் 2 படத்தில் நடித்தது குறித்தும் இயக்குனர் சங்கர் உடனான அனுபவம் குறித்தும் மனம் திறந்து உள்ளார். அதில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நான் நடித்துள்ளேன். அந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்க வேண்டும் என்று சங்கர் கதை எழுதும்போதே தீர்மானித்து விட்டதாக என்னிடம் கூறினார், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய நடிகர் என்பவர் தானாகவே செலக்ட் ஆகி விடுவார். நாம் எந்தவித முயற்சியும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பேசிய சமுத்திரக்கனி, மேலும் இதே இயக்குனர் சங்கர் முதன் முதலில் இந்தியன் படத்தை எடுக்கும்போது நான் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக வரிசையில் நின்றேன்.அப்போது என்னுடைய பெயரை கூட எழுதாமல் விரட்டி விட்டு விட்டார்கள்.

ஆனால் அதே ஷங்கர் இன்று ‘இந்தியன் 2’ படத்தில் எனக்காக ஒரு கதாபாத்திரத்தை எழுதி என்னை நடிக்க வைத்துள்ளார்.இதற்குப் பெயர்தான் விதி என்று சமுத்திரக்கனி பெருமிதத்தோடு வீடியோவில் தெரிவித்து இருந்தார். பொதுவாகவே சமுத்திரகனியின் படம் மட்டுமின்றி பேச்சும் மோட்டிவேஷன் அளிக்கக் கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், உதவி இயக்குனர் என பல போராட்டங்களுக்கு மத்தியில் போராடி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள சமுத்திரக்கனி, இந்தியாவின் மிக பெரிய இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் நடித்த பின்பு தற்பொழுது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி.