தேனி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த இயக்குனர் கஸ்தூரிராஜா, இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்பு என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கஸ்தூரிராஜா. இவருடைய படங்கள் பெரும்பாலும் கிராமிய கதை அம்ச படமாகவே இருக்கும், ஆரம்பத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர் வெற்றியை பெற்றது.
ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த கஸ்தூரிராஜா சொந்த தயாரிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது, இதனால் கடன் வாங்கி படம் எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட கஸ்தூரிராஜா ஒரு கட்டத்தில் பெரும் கடன் சுமையில் தத்தளித்தார். கஸ்தூரி ராஜா சொந்த தயாரிப்பில் அடுத்த ஒரு சில படங்கள் பண பற்றாக்குறையால் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இதன் பின்பு மகன் தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை படத்தை எடுத்து அதில் பெரும் லாபத்தை பெற்று பொருளாதார சிக்கலை தீர்த்து கொண்டார் கஸ்துரிராஜா. இந்த நிலையில் இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கஸ்தூரிராஜா. இயக்குனர் விசு ஒரு படத்தில் டப்பிங் பேசும்போது அதை கஸ்தூரிராஜா சவுண்டு இன்ஜினியருடன் அமர்ந்து கவனித்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் விசு பேசிய டப்பிங் சரியாக ஒத்து போகாததால் மீண்டும் ஒருமுறை பேச சொல்லியுள்ளார் கஸ்தூரிராஜா. உடனே டென்ஷனான இயக்குனர் விசு என்னையவே நீ ஒன் மோர் போக சொல்கிறாயா.? என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் விசு. அதற்கு கஸ்தூரிராஜா இல்ல சார் நீங்க பேசுற டப்பிங் இங்கே உதடு அசைவுக்கும் ஒத்துப் போகவில்லை, ஆனால் மீண்டும் ஒருமுறை பேசத் தொடங்கலாம் என்றதும் உனக்கு என்ன தெரியும் என கண்டபடி கஸ்தூரிராஜாவை திட்டிய இயக்குனர் விசு,
மேலும் டப்பிங் பேசிய ஸ்டூடியோவில் இருந்து வெளியே போ என கஸ்தூரிராஜாவை விரட்டியவர். இனி என் பக்கமே வராது என்றும் தெரிவித்து விட்டாராம். இதனால் உதவி இயக்குனர் வேலையும் போச்சு என்கின்ற சோகத்தில் வெளியான கஸ்திராஜா, இருந்தாலும் கண்டபடி திட்டிய விசுவிடம் மீண்டும் சென்று உதவி இயக்குனராக பணியாற்ற கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்துள்ளார் கஸ்தூரிராஜா.
அந்த காலகட்டத்தில் நடிகர் ராமராஜன், நடிகர் ரஜினி கமலுக்கு இணையாக பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருந்தார். அப்போது ராமராஜனுக்கு நெருக்கமான ஒருவர் கஸ்தூரிராஜாவின் நிலையை அறிந்து கொண்டு உதவி செய்ய முன்வந்துள்ளார். கஸ்தூரிராஜாவும் இனி தான் மீண்டும் விசுவரிடம் உதவி இயக்குனராக பணியாற்ற போவதில்லை இயக்குனர் ஆவதற்கு கதை தயார் செய்து வைத்துள்ளேன் அந்த படம் இயக்குவதற்கான தகுந்த நபரை தேடிக் கொண்டிருக்கிறேன் என்றதும்,
ராமராஜனுக்கு நெருக்கமான அந்த நபர் ராமராஜனிடம் நேரில் அழைத்துச் சென்றுள்ளார் கஸ்தூரிராஜாவை. ஏவிஎம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த ராமராஜனை சந்தித்து கஸ்தூரிராஜா சொன்ன கதை மிகவும் பிடித்து போக உடனே ரொம்ப நாளா என்னிடம் தயாரிப்பாளர் ராஜ்கிரன் கால் சீட் கேட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் அவரை நேரில் சந்தித்து நான் அனுப்பி வைத்தேன் என தெரிவித்து இந்த கதையை சொல்லுங்கள் தெரிவித்துள்ளார் ராமராஜன்.
இதனை தொடர்ந்து ராஜ்கிரனை நேரில் சந்தித்து கஸ்தூரிராஜா கதை சொல்லியதை கேட்ட உடனே ஆச்சரியப்பட்ட ராஜ்கிரன் கதை அருமையா இருக்கு, ஆனால் இதில் ராமராஜன் நடிக்க வேண்டாம். நானே கதாநாயகன் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராஜ்கிரன். அப்படி உருவான படம் தான் என் ராசாவின் மனசிலே. அந்த வகையில் தனுஷ் மற்றும் கஸ்தூரிராஜா குடும்பத்தினர் இன்று மிகப்பெரிய உயரத்திற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பதற்கு கஸ்தூரிராஜாவுக்கு ராஜ்கிரண் கொடுத்த வாய்ப்பு என்றாலும் கூட, அந்த வாய்ப்பை உருவாக்கி தந்தது ராமராஜன் தான் என்பது குறிப்பிடதக்கது.