ஏமாற்றிய ரஜினியின் பார்முலா… துணிந்து இறங்கிய விஜய்..

0
Follow on Google News

நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த நடவடிக்கைக்கு ஒவ்வொன்றும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இனி சினிமாவில் நடிக்க போவது இல்லை, முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தகவல் வெளியானது, இது குறித்து, விஜய் திடீர் முடிவுக்கு முக்கிய காரணம் என்பது பற்றிய தழுவலும் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினி நான் அரசியலுக்கு வருகிறேன், வரவில்லை என்று எப்போதுமே தெளிவு படுத்தியது கிடையாது. ரசிகர்களையும், மக்களையும் ஒரு வித குழப்பத்திலேயே வைத்திருந்தார் ரஜினிகாந்த். 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இறங்கி இருந்தால், அவருக்கு தமிழக முதல்வராகும் வாய்ப்பு மிக பிரகாசமாக இருந்தது. அப்போது இருந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டிருந்தால் அவரை ஆதரிப்பதற்கு தயாராக இருந்தன.

அதே நேரத்தில் அந்த காலகட்டத்தில் ரஜினிகாந்தின் இருந்த பெரும் ரசிகர் கூட்டம் ரஜினிகாந்த் அரசியல் வருகைக்காக ஆரவாரத்துடன் வரவேற்று காத்திருந்தார்கள். ஆனால் அந்த காலகட்டத்தில் சினிமாவில் பெரும் தொகையை சம்பளமாக வாங்கி கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டாப் 1 நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். அப்படி இருக்கையில் முழு நேர அரசியலில் ஈடுபட்டால் சினிமாவை விட்டு விலக நேரிடும்.

அந்த வகையில் சினிமாவில் பெரும் சம்பளத்தை வாங்கிக் கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு சென்றால் சினிமாவால் கிடைக்கும் பெரும் தொகையை இழக்க நேரிடும் என்பதை உணர்ந்த ரஜினிகாந்த். மேலும் அரசியலை நம்பி சென்று, அங்கே தோல்வி அடைந்தால் நாம் என்ன செய்வது என்கின்ற ஒரு பயம் ரஜினிகாந்துக்கு அப்போது இருந்து வந்தது. இதற்க்கு காரணம் நடிகர் சிவாஜி போன்ற பெரும் நடிகர்கள் அரசியலில் இறங்கி மிக பெரிய தோல்வியை சந்தித்தவர்.

அந்த வகையில் அரசியலுக்கு வர தயங்கிய நடிகர் ரஜினிகாந்த் அப்போதே வெளிப்படையாக நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அதிரடியாக அறிவித்து இருந்திருக்கலாம். ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் இருந்த எதிர்பார்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்க திட்டமிட்ட ரஜினிகாந்த், தொடர்ந்து தன்னுடைய படத்தில் அரசியல் பன்ச் பேசுவது.

மேலும் அரசியலில் வாய்ஸ் மட்டும் கொடுப்பது, என இப்படி தொடர்ந்து மக்களையும் அவருடைய ரசிகர்களையும் உசுப்பேத்தி வந்த ரஜினிகாந்த்.தன்னுடைய திரைப்படம் ஒவ்வொரு முறையும் ஓடுவதற்கு அரசியல் ஸ்டாண்ட்டை பயன்படுத்தி கொண்டார். இதனால் ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களே. இனி ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என சலிப்பு அடைந்து அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டார்கள்.

இந்நிலையில் ரஜினிகாந்த் போன்ற ஒரு முடிவை எடுத்து விடக்கூடாது என்பதில் விஜய் தற்போது தெளிவாக இருக்கிறார். அந்த வகையில் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என வைத்துக்கொண்டு சினிமா, அரசியல் என இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணிப்பது என்பது இரண்டுக்குமே அது பலனை தராது என உணர்ந்துள்ளார் நடிகர் விஜய்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கும் விஜய், அந்த படத்தை முடித்துவிட்டு சினிமாவில் தற்காலிகமாக சுமார் 3 வருடங்கள் எந்த படத்திலும் கமிட்டாகாமல், முழு நேர அரசியலில் துணிந்து இறங்குவது என நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.