நடிகர் ரஜினிகாந்த் மகள் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் லால் சலாம் படத்தில் அவருடைய தந்தை இஸ்லாமியராக நடிப்பது இந்த நாட்டிற்கு அவர் செய்யும் மிகப்பெரிய தியாகம் என்பது போன்று பேசி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மேலும் என்னுடைய தந்தை இஸலாமியராக நடிப்பதால் அவர் சங்கி இல்லை என்று ஐஸ்வர்யா தெரிவிக்க, இல்லை..இல்லை உங்கள் அப்பா சங்கீ தான் இதோ ஆதாரம் என பலரும் ரஜினி சங்கி என்பதற்கு பல சம்பவங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஒரு நடிகர் இஸ்லாமியராக, கிறிஸ்தவராக, இந்து, புத்தர் என எந்த மதத்தை தழுவிய நடித்தாலும் அது நடிப்புதான் தவிர இதில் என்ன இந்த நாட்டுக்கே பெரிய சேவை இருக்கிறது. ஒரு நடிகர் தன் படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்கும் அவருடைய நிஜ வாழ்க்கைக்கு எந்த ஒரு தொடர்புமே இருக்காது என்பதற்க்கு முதல் உதாரணம் ரஜினிகாந்த்.
லால் சலாம் படத்தில் ரஜினி பேசிய வசனத்தை பொது வாழ்க்கையில், நிஜத்தில் பேசுவதற்கு துணிவு இருக்கா என்பதை ரஜினிகாந்த் மகள் உறுதி செய்வாரா.? என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது. லால் சலாம் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தில, மதத்தையும் நம்பிக்கையும் மனதில் வை, மனிதநேயத்தை அதற்கு மேலே வை, இதுதான் இந்த நாட்டின் அடையாளம் என்று ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் பேசி இருப்பார்.
இந்த வசனம் சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் ஜெய் ஸ்ரீராம் என கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் கோஷமிட்டார்கள், அதை மறைமுகமாக கண்டிக்கும் வகையில் தான் லால் சலாம் படத்தில் இந்த வசனத்தை இடம் பெற செய்துள்ளார் ஐஸ்வர்யா என்றும், அந்த வகையில் தன்னுடைய தந்தை சங்கி இல்லை என்று சொல்லும் ஐஸ்வர்யா, இதே வசனத்தை அந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என கோசமிட்டபோது வெளிப்படையாக நிஜ வாழ்க்கையில் ரஜினி பேச தயங்கியது ஏன் என்கின்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.?
மேலும் அதே லால் சலாம் படத்தில் மற்றும் ஒரு டயலாக் வருகிறது, அதில் எந்த ஊர் சாமியா இருந்தா என்ன.? எந்த சாமியாக இருந்தால் என்ன.?சாமி சாமி தானே, அதாவது எந்த சாமியாக இருந்தாலும் அந்த சாமி அவரவர்களுக்கு முக்கியம் என்பதை தான் இந்த வசனம் குறிப்பிடுகிறது. இப்படி முழுக்க முழுக்க இந்த படம் சங்கிகளுக்கு எதிராக வசனங்களுடன் எடுக்கப்பட்டுள்ளதால், என்னுடைய தந்தை சங்கீ இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசி வந்தாலும் கூட, ர இது போன்ற வசனத்திற்கும் ரஜினியின் நிஜ வாழ்க்கைக்கும் சற்றும் சம்பந்தமில்லை.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் சங்கிகளுக்கு எதிரான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட நிஜ வாழ்க்கையில் அவர் சங்கீ தான், இதில் அவருடைய மகள் சங்கி என்றால் ஏதோ ஒரு கெட்ட வார்த்தை என்பது போன்று என் தந்தை சங்கியே இல்லை என்று நிரூபணம் செய்ய முயற்சிப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்.
மேலும் இதில் உச்சகட்ட காமெடி என்றால் லால் சலாம் படத்தில், யார் பின்னால் கூட்டம் சேர்கிறதோ அவர்கள் மிகப்பெரிய ஆபத்தானவர்கள் என்கின்ற ஒரு வசனம் இடம் பெறும், அப்படியானால் இன்று தமிழ் சினிமாவில் ரஜினி பின்னால்தான் மிகப்பெரிய கூட்டம் சேருகிறது, ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் கடைசியாக வெளியான ஜெயிலர் படத்தில் கூட குட்டிச்சுவரை எட்டிப் பார்த்தால் உசுர கொடுக்க கோடி பேர் என்கின்ற வசனம் இடம் பெற்றிருக்கும்.
அந்த வகையில் தன்னுடைய தந்தையை தான் மிகவும் ஆபத்தானவர் என்று கூறுகிறாரா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா என்பதை அவரே விளக்க வேண்டும். மேலும் ரஜினியை அவர் சங்கி இல்லை என தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்தி தேரை இழுத்து தெருவில் விட்ட கதை போல் ரஜினியின் இழுத்து தெருவில் விட்டு விட்டார் ஐஸ்வர்யா என்று சொல்லும் அளவுக்கு ரஜினி சங்கியா.? இல்லையா.? என்கிற விவாதம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.