யோகியின் ஆசிர்வாதம்… ரஜினியே எதிர்பார்க்காத ஜெயிலரில் அரங்கேறிய திடீர் அதிசயம்…

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி வெற்றி கரமாக வசூலை வாரி அள்ளி குவித்து கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர், அண்ணாத்தே, தர்பார் போன்ற தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த ரஜினிகாந்த், ஜெயிலர் மூலம் ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வேந்தர், இந்நிலையில் ஜெயிலர் படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக இமய மலை பயணம் மேற்கொண்டார் ரஜினிகாந்த்.

இமயமலை ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்று அங்கு ஆளுநராக உள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை ஆளுநர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்த ரஜினிகாந்த் ஜார்க்கண்டில் உள்ள புனித தளங்களில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் பாஜகவை சார்த்த ஆளுநர் ஒருவரை ரஜினிகாந்த் சந்தித்து அரசியல் ரீதியாக ரஜினிக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்து வந்தது.

இந்நிலையில் ரஜினி எப்படி முன்னால் பாஜக தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை சந்திக்கலாம் என ஒரு தரப்பினர் தமிழ்நாட்டில் கொந்தளித்து வந்த நிலையில், அவர்களை மேலும் கொந்தளிக்கும் வகையில் அமைத்தது ரஜினியின் அடுத்த சம்பவம், ஆம், ஜார்கண்ட் பயணத்தை முடித்துவிட்டு உத்திரபிரதேசம் சென்ற ரஜினிகாந்த், அங்கு யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர் படம் பார்க்க இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.

ஆனால் யோகி ஆதித்யநாத் சினிமா பார்க்க விப்பம் இல்லாதவர் என்பதால், ரஜினியின் அழைப்பை புறக்கணிக்காமல் அவருக்கு பதிலாக உபி துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்துடன் திரைப்படம் பார்த்தார்.இதன் பின்பு லக்னோவில் உள்ள யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு ரஜினிகாந்தும், லதா ரஜினிகாந்தும் சென்றார்கள்.

அப்போது காரில் இருந்து இறங்கிய ரஜினிகாந்தை வரவேற்க வாசலுக்கு வந்த யோகியின் காலில் விழுந்து ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார். இந்த வீடியோ வெளியாகி ஏற்கனவே ஏற்கனவே பாஜகவே சேர்ந்த ஆளுநர் சி.பி.ராதாகிருஷணனை எப்படி சந்திக்கலாம் என விமர்சனம் செய்து வந்தவர்கள் மேலும் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து யோகி காலில் ரஜினிகாந்த் விழுந்ததால் இனி ஜெயிலர் படம் வசூல் மலமலவென விழும் என்றும் ரஜினிக்கு எதிராக விமர்சனம் செய்து வந்ததை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் வசூல் 500 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் எதிர்பார்த்த வசூலை விட அதிகம் அள்ளி குவித்துள்ளது ஜெயிலர. இந்த நிலையில் சமீபத்தில் யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் சந்தித்த பின்பு வட இந்தியாவில் ஜெயிலர் படம் வெளியிடப்படும் தியேட்டர்கள் தற்பொழுது அதிகப்படுத்தி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை, லக்னோ , சண்டிகர் போன்ற இடங்களில் யோகி ஆதித்யநாத் ரஜினிகாந்த் சந்திப்புக்கு பின்பு ஜெயிலர் படத்தை பார்க்க மக்கள் பெரும் அளவு திரையரங்குகளுக்கு படையெடுத்து வருவதை வட இந்தியாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன, அந்த வகையில் ரஜினிகாந்த் யோகி சந்திப்புக்கு பின்பு அது செய்தி மிகப் பெரிய விவாதமாக மாறி அது ஜெயிலர் படத்திற்கான பிரமோசன மாறியுள்ளது.

தற்பொழுது ஜெயிலர் படத்திற்கான வரவேற்பு இந்திய அளவில் மிகப் பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பின்பு ஜெயிலர் படத்தின் வசூல் குறையும் என ரஜினியை கடுமையான விமர்சனம் செய்து செய்தவர்களின் முகத்தில் கறியை பூசுவது போன்று அமைந்துள்ளது . தற்பொழுது இந்தியா முழுவதும் ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு, அந்த வகையில் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த பின்பு தான் ஜெயிலர் படத்திற்கு இந்த அற்புதம் ஜெயிலர் பட குழுவுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்