இந்தி சினிமாவை கட்டுக்குள் வைத்திருக்கும் மாஃபியா கும்பல், தென் இந்தியாவில் இருந்து செல்லும் நடிகர்கள் அங்கே சென்றால் பல இன்னல்களை கொடுத்து அந்த நடிகர்களை இந்தி சினிமா பக்கமே வரக்கூடாது என தெறித்து ஓட விட்டு விடுவார்கள், அந்த மாஃபியா கும்பல், அந்த வகையில் 1980 காலகட்டத்தில் கமலஹாசன் நடிப்பில் இந்தியில் வெளியான ஏக் து ஜே கேலியே திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்று இந்தி சினிமாவில் மிக பெரிய வரவேற்பை பெற்றார் கமல்ஹாசன்.
மேலும் அடுத்தடுத்து இந்தியில் கமலஹாசன் நடித்த படங்கள் அணைத்து மிக பெரிய வெற்றியை பெற்றது, இதனை தொடர்ந்து இதற்கு மேல் கமலஹாசன் இந்தியில் நடித்தால், இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வந்து விடுவார் என இந்தி சினிமா துறையை கட்டுக்குள் வைத்திருந்த மாஃபியா கும்பல், இந்தி சினிமாவில் இருக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் யாரும் கமல்ஹாசனை வைத்து படம் எடுக்க கூடாது என உத்தரவு போட்டது.
இதனால் கமல்ஹாசனை இந்தியில் வைத்து படம் எடுக்க யாரும் முன் வராத நிலையில், இந்தி சினிமாவில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி தொடர்ந்து இந்தி சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை முன்னிலை படுத்தி பட வாய்ப்புகளை தேடி வந்த கமல்ஹாசனுக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளதை பெருத்து கொள்ள முடியமால் மாஃபியா கும்பல்,
ஆட்களை செட் செய்து கமல்ஹாசன் பொது நிகழ்ச்சிக்கு வரும்போது அவர் மீது முட்டைகளை வீசி அதை ரசிகர்கள் எறிந்துள்ளதாக செய்திகளை வெளியிட்டது இந்தி சினிமாவை கட்டுக்குள் வைத்திருந்த மாஃபியா கும்பல். மேலும் இதற்கு மேல் ரிஸ்க் எடுக்க விரும்பாத கமல்ஹாசன் இந்தி சினிமாவில் பெரிய நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்கிற தனது கனவை கலைத்துவிட்டு தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பினார் கமல்ஹாசன்.
இதே போன்று நடிகர் ரஜினிகாந்த ஹிந்தி சினிமாவில் என்ட்ரி கொடுத்த போது பல இடையூறுகளை ஏற்படுத்தி அங்கே தாக்கு பிடிக்க முடியாமல் ரஜினிகாந்தை விரட்டியது மாஃபியா கும்பல். இப்படி தென் இந்தியாவில் ரஜினி – கமல் போன்ற ஜம்பவான்களுக்கு தண்ணி காட்டிய பாலிவுட் மாஃபியா கும்பலுக்கு தமிழ் சினிமாவில் இருந்து சென்ற அட்லீ தண்ணிகாட்டி தமிழன் யார் என்று நிரூபித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் சுமார் 1100 கோடி வசூல் சாதனை படைத்து யார் இந்த அட்லீ என ஒட்டு மொத்த பாலிவுட் சினிமாவையை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் அட்லீ, சமீபத்தில் முகேஷ் அம்பானி வீட்டின் விசேஷத்துக்கு சென்ற இயக்குனர் அட்லீயை, அங்கிருந்த பாலிவுட் நட்சத்திரங்கள் சூழ்ந்து கொன்டு அட்லீயிடம் நெருங்கி பேசியது, அதே நிகழ்ச்சிக்கு சென்ற ரஜினிக்கு கூட நடக்க வில்லை.
இப்படி ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்பு தொடர்ந்து பாலிவுட் சினிமா நட்சதிரங்கள் அட்லீயை தொடர்பு கொண்டு, நமக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க என்று தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருக்கிறதாம், அட்லீ தமிழில் இருந்து 6 படங்களில் உள்ள காட்சிகளையும், கதையையும் சுட்டு ஜவான் படம் எடுத்துள்ளார் என தமிழில் விமர்சனம் வந்தாலும் கூட, மேலும் ஜவான் படம் தமிழில் தோல்வியை தழுவினாலும் கூட,
இந்தி சினிமாவில் மிக பெரிய வசூல் சாதனை படைத்து அட்லீக்கு மிக பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குனர் அட்லீயை பலரும் உருவ கேலி செய்து வந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன்னுடைய 7 ஸ்வரங்கள் பார்முலாவை பின்பற்றி இன்று ஹிந்தி சினிமாவில் மிக பெரிய இயக்குனராக ஜவான் என்கிற ஒரே படத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார், மேலும் இதே போன்று அவருடைய 7 ஸ்வரங்களை பயன்படுத்தி இந்தி சினிமா ரசிகர்கள் அட்லீயின் காப்பியடிக்கும் வித்தையை கண்டுபிடிக்காதபடி அடுத்தடுத்து அட்லீ வெற்றி பெற பலரும் வாழ்த்து தெறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.