ரஜினி மானத்த காற்றில் பறக்க விட்ட மனைவி லதா… அவமானம் தாங்க முடியாமல் முக்காடு போட்டு எஸ்கேப் ஆன லதா..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தீபிகா படுகோனை வைத்து ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் கோச்சடையான். இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. தன் அப்பா நடிக்கும் படத்தை மகள் சௌந்தர்யா இயக்கியிருந்தாலும், படத்தின் முழு கதையையும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்களே எழுதிக் கொடுத்திருந்தார். மற்ற படங்களைப் போல் அல்லாமல் படத்தின் எல்லா காட்சிகளும் 3D வடிவில் படமாக்கப்பட்டிருந்தது. தமிழ் சினிமாவில் புது முயற்சியாக இருந்தது.

சுமார் 125 கோடி பட்ஜெட் செலவில் அதிநவீன தொழில்நுட்பம் என ஏராளமான கோடிகளைக் கொட்டி எடுக்கப்பட்ட இந்த படத்தை ஈராஸ் இன்டர்நேசனல் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த சமயம், கோச்சடையான் படத்தை எடுப்பதற்கு கூடுதல் பணம் தேவைப்பட்டதால், மீடியா ஒன் நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் ஆட் பீரோ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்திடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

மேலும், இதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு எங்கெங்கோ அலைந்து திரிந்து கடனை வாங்கி ஒரு வழியாக படத்தை எடுத்து முடித்தனர். சூப்பர் ஸ்டார் படம், புது முயற்சி என்பதாலேயே படம் கோடிகளை வசூலிக்கும் என்று பல எதிர்பார்ப்புகளுடன் பட குழுவினர் படத்தை வெளியிட்டனர். ஆனால் படம் படுமோசமாக தோல்வி அடைந்தது.

125 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் ஒட்டு மொத்தமாக 50 கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை. இது தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. மேலும், படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று லதா ரஜினிகாந்த் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடந்த எட்டு வருடங்கள் ஆக பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

லதா ரஜினிகாந்த் நிபந்தனை முன்ஜாமின் பெற்றதால் கைது செய்யப்படவில்லை.இருப்பினும் வழக்கு தொடர்பாக அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். இந்நிலையில் திடீரென லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்திருக்கிறார். நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரன் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து லதா ரஜினிகாந்த் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நீதிமன்றம் வந்த லதா ரஜினிகாந்தை கேமரா மற்றும் பத்திரிக்கையாளர்கள் சுற்றி வளைத்து வீடியோ எடுக்க முயன்றதும். தலையில் முக்காடு போட்டு முகத்தை மறைந்து கொண்டு பதுங்கி பதுங்கி சென்றார். இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதனை பலரும் விமர்சனம் செய்தனர். இதற்கிடையே லதா ரஜினிகாந்த் முக்காடு போட்டு நீதிமன்றத்துக்கு சென்றது ஏன்? என்பது பற்றி லதா ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார்,

அதில், நான் செலிப்பிரிட்டியா இருப்பதாக அவர்கள் வன்மத்துடன் எனக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து நான் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தேன். நான் தலையில் முக்காடு எல்லாம் போட்டு செல்லவில்லை. வெயில் அடித்ததால் தான் துப்பட்டாவை தலையில் போட்டு சென்றேன் என குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்று விளக்கம் அளித்துள்ளது ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த்.

ஏற்கனவே ஆசிரமம் பள்ளி ஒன்றை நடத்தி வரும் லதா ரஜினிகாந்த் முறையாக வாடகை செலுத்தாமல், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று அசிங்கப்பட்ட பின்பு தான் வாடகை பாக்கியை செலுத்தினார் லதா ரஜினிகாந்த தற்பொழுது மேலும் ஒரு மோசடி வழக்கில் முக்காடு போட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..