தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்களில் இரண்டாவது மகள் முதல் கணவனை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் தற்போது முதல் மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் பிரிவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.
இந்நிலையில் ரஜினிகாந்த் சிறுவயதிலேயே தனது தாய் தந்தையை இழந்த பிறகு அவரை வளர்த்து ஆளாக்கியதில் மிகப்பெரிய பங்கு அவரது அண்ணன் சத்திய நாராயண ராவ் மற்றும் அவரது அண்ணி இருவரும் தான். அந்த வகையில் தனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தனது அண்ணனையும் அன்னியையும் பெருமை அடைய செய்து வருகின்றவர் ரஜினிகாந்த்,
அவர் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது பெற்ற போதும் கூட அவருடைய அண்ணன் பெயரை குறிப்பிட்டு நன்றி சொன்னார் ரஜினிகாந்த். இப்போது வரை தனது தாய் தந்தையர் ஸ்தானத்திலேயே அவர்களை பூஜித்து வரும் ரஜினிகாந்த் கடந்த மாதம் பெங்களூரில் நடைபெற்ற அவரது அண்ணனின் 80வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.
அண்ணன் பிறந்த அதே தினத்தில் அண்ணன் மகனுக்கும் அறுபதாவது பிறந்த நாள் என்பதால் இருவருடைய பிறந்த தினத்தில் ஒரே நாளில் கொண்டாடி மகிழ்ந்த ரஜினிகாந்த். தனது அண்ணனுக்கு தங்க காசுகளால் அபிஷேகம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை இந்த அளவு ஆளாக்கிய இந்த தங்க இதயத்திற்கு தங்க காசுகளால் காணிக்கை செலுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் அவருடைய அண்ணன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தாலும், ரஜினி தான் பெங்களூர் சென்று பெரும்பாலும் அவருடைய அண்ணன் சத்திய நாராயணனை பார்ப்பார், ரஜினிகாந்தை பார்க்க அவரது அண்ணன் சென்னை போயஸ் கார்டன் வீட்டிற்கு பெரும்பாலும் வராததற்கு பின்னணி குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது. லதாவை நடிகர் ரஜினிகாந்த் திருமணம் செய்த ஆரம்பக்கட்டத்தில், ரஜினியின் அண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் யாராவது கர்நாடகாவில் இருந்து வந்தால் அவர்களுக்கு தகுந்த மரியாதை கூட கொடுக்க மாட்டாராம் லதா.
தன்னை சார்ந்த குடும்ப உறுப்பினர்களை தனது கணவர் ரஜினிகாந்த் செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள் வளர்ச்சிக்கு உதவிய லதா, ரஜினிகாந்த் உறவினர்களை ஆரம்பத்தில் இருந்தே கட் செய்து விட்டார் என கூறபடுகிறது, ஆனால் இதனால் மனம் வருந்தாமல் தனது தம்பி ரஜினிகாந்த் நன்றாக இருந்தால் போதும் என கர்நாடகாவில் இருந்து கொண்டே தனது தம்பியின் வளர்ச்சியை ரசித்து வந்துள்ளார் அண்ணன் சத்யநாராயணா ராவ்.
பெரும்பாலும் ரஜினிகாந்த் தான் கர்நாடக சென்று தனது அண்ணன் மற்றும் உறவினர்களை பார்ப்பார், அவர்கள் யாரும் சென்னைக்கு வந்து ரஜினிகாந்தை பார்ப்பது மிக குறைவாம். இதற்கு காரணம் ஒரு கட்டத்தில் லதா இவர்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டது தான் என்று கூறப்படுகிறது. மேலும் எப்போதெல்லாம் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறதோ தனது அண்ணன் சத்தியநாராயணன் ராவ் அவர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த், குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை குறித்து தெரிவிப்பார் என்றும்.
இதற்கு அண்ணன் சத்தியநாராயணன் ஆறுதல் தெரிவித்து சமாதானம் செய்து உனக்கு எப்போதல்லாம் மனக்கஷ்டம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் உடனே கர்நாடக வா..ஆனால் இங்கே நிரந்தரமாக இருக்க வேண்டாம், நீ உன் குடும்பத்துடன் இருப்பது தான் சரியானது என ரஜினிகாந்த்க்கு அறிவுரை வழக்கி பல முறை சென்னைக்கு ரஜினிகாந்தை திருப்பி அனுப்பி வைத்துள்ளார் என கூறப்படுகிறது.