ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2014ஆம் மகள் வெளிவந்த படம் கோச்சடையான். இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தப் படம் சுமாரான வசூலை அள்ளியது என்று சொல்லலாம். பெரும்பொருட்செலவில் உருவான கோச்சடையான் படம் தோல்வியை சந்தித்து இருந்தது.
இந்த திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக ஆட்-ப்யூரோ நிறுவனத்திடமிருந்து மீடியா ஓன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் ரூ. 6.2 கோடி கடன் பெற்றிருந்தார். முரளி கடன் பெறுவதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்துக் கையெழுத்திட்டிருந்தார். ஆனால், அதிக செலவில் எடுக்கப்பட்ட கோச்சடையான் திரைப்படம், ரசிகர்களை பெரிதும் ஈர்க்காததால் பெரியளவில் வசூலை ஈட்டவில்லை.
இந்த நிலையில், கடனாகப் பெற்ற பணத்தை மீடியா ஓன் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி திருப்பித் தரவில்லை எனக் கூறி, ஆட்-பியூரோ நிறுவனம் பெங்களூர் முதன்மை நீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டு மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் முரளி, லதா ரஜினிகாந்த் ஆகியோர் மீது மோசடி செய்து ஏமாற்ற முயற்சி’, ஆதாரங்களைத் திரித்தல்’, தவறான அறிக்கை சமர்ப்பித்தல்’ ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் லதா ரஜினிகாந்த் மூலம் போடப்பட்ட உத்தரவை நீக்கி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. அதோடு கடந்த 2016 ஆம் ஆண்டு கர்நாடக ஹைகோர்ட் லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்து இருந்தது. இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர அனுமதி வழங்கியது.
பின் போலீசாரின் குற்றப்பத்திரிகையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என குற்றச்சாட்டுகளை ரஜனிகாந்த் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, லதா ரஜினிகாந்த்துக்கு எதிராக ஏமாற்றுதல் மற்றும் தவறான தகவல் தொடரப்பட்ட இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. கோச்சடையான் படத்திற்கு கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து லதா ரஜினிகாந்த்துக்கு விலக்கு அளித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மீது நிதியளித்த தனியார் நிறுவனமான ஆட் பியூரோ, முரளி என்பவருக்கு ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் அளித்த உத்தரவாதத்தின் பெயரில் கடன் வழங்கியதாகவும் ஆனால், கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விட்டனர் என்றும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம் லதா ரஜினிகாந்துக்கு எதிரான இந்த மோசடி வழக்கை தொடர்ந்து பெங்களூரு நீதிமன்றத்திற்கு விசாரிக்க அனுமதி வழங்கியது. அப்போது, மோசடி வழக்கில் விடுவிக்கக் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும், விசாரணைக்கு நீதிமன்றம் கேட்கும் பட்சத்தில் லதா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நான் பெயிலபிள் வாரண்டில் மீது பெயில் பெற லதா ரஜினிகாந்த் நேரில் நீதிமன்றத்தில் அடுத்த வருடம் ஜனவரி 6-ம் தேதி அல்லது அதற்கு முன்போ ஆஜராக வேண்டும் என பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.