வீடு தேடி வந்த புகழ்… வேண்டாம் என மறுத்த ரஜினிகாந்த்… இப்ப தெரியுதா ஏன் அவர் சூப்பர் ஸ்டார் என்று..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய திரை உலக பயணத்தை தொடங்கி 50 வருடங்கள் நிறைவு செய்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் திரையுலகம் பாராட்டு விழா நடத்த வேண்டும் அதை தமிழ்த்துறையை சார்ந்த யாராவது முன்னெடுக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வந்த நிலையில், இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் தாணு ஏற்பாடு செய்யும் முயற்சியில் இறங்கினார்.

ரஜினிகாந்தின் மகள்களை சந்தித்து அப்பாவுக்கு பாராட்டு விழா நடத்தலாம் என்று நினைக்கிறேன், நீங்கள் தந்தையாரிடம் கேட்டு சொல்லுங்கள் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் தானு தெரிவித்து இருந்தார், ஆனால் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து என்ன பதில் வந்தது என்று தெரியவில்லை, திடீரென்று விறுவிறுப்பாக ரஜினிக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று முயற்சியில் இறங்கிய தயாரிப்பாளர் தானு அந்த முயற்சியை கைவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து ரஜினிகாந்துக்கு பாராட்டு விழா நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதாவது ரஜினிகாந்துக்கு நடத்தப்படும் பாராட்டு விழா சுமார் ஒரு அரங்கிற்குள் நான்கு மணி நேரத்தில் முடித்து விடாமல், தொடர்ந்து ஏழு நாட்கள் திருவிழா போன்று நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஆகச்சிறந்த படங்களை அந்த பாராட்டு விழாவில் தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் பாராட்டு விழாவில் திரையிடப்படுவது, மற்றும் ரஜினிகாந்தை இயக்கிய இயக்குனர்கள் மற்றும் ரஜினிகாந்தை வைத்து படம் எடுத்து தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள் ஆகியோர் உடன் ரஜினிகாந்த் கலந்துரையாடல் செய்வது, போன்ற ஒரு நிகழ்ச்சி நடத்துவது.

இப்படி பல திட்டங்களுடன் நேரு உள் விளையாட்டு அரங்குகளில் இந்த பாராட்டு விழாவை தொடர்ந்து திருவிழா போன்று நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்து, குறிப்பாக ரஜினிகாந்தை வைத்து பாராட்டு விழா நடத்துவது நாங்கள் வியாபார நோக்கத்திற்காக, ஏதோ ஒரு சேனலுக்கு விற்று வருமானம் பார்ப்பதற்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

அந்த வகையில் ராஜினியின் அனுமதியை கேட்டிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம், ஆனால் இதை கேட்ட உடனே ரஜினிகாந்த் எனக்கு பாராட்டு விழா வேண்டாம், எனக்கு வாழ்நாள் முழுவதும் நடித்துக் கொண்டே இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி, அதை தாண்டி எனக்கு வரும் புகழ் எதுவுமே வேண்டாம் என்று தெரிவித்தவர், எனக்கு பாராட்டு விழா வேண்டாம் என்று ஒரே போடாக போட்டு, தயாரிப்பாளர்கள் சங்கம் ரஜினிக்கு திருவிழா போன்று பாராட்டு நடத்த வேண்டும் என்ற கனவு கோட்டையை சுக்கு நூறாக உடைத்து விட்டார் ரஜினிகாந்த்.

அந்த வகையில் 50 ஆண்டுகளை சினிமாவில் கடந்து, இன்று சூப்பர் ஸ்டார் ஆக இன்றும் நிலைத்து நிற்கும் ரஜினிகாந்த், தனக்கு பாராட்டு விழா வேண்டாம், எனக்கு பாராட்டு விழா நடத்தி தான் நான் மக்களிடம் புகழ்பட வேண்டுமா.? மக்களின் மனதில் இருந்தாலே போதும் என்கின்ற நினைப்பில் ரஜினிகாந்த் புகழை தேடி செல்லாமல் இருப்பது தான் அவரை இன்றும் சூப்பர் ஸ்டார் ஆக மக்கள் கொண்டாட காரணம் என்கிறது சினிமா வட்டாரங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here