நடிகர் ரஜினிகாந்த் ஒரு நடிகர் என்பதை தாண்டி, அவர் தீவிர ஆன்மீகப்பற்று கொண்டு ஆன்மீகவாதி என்றே சொல்லலாம், கடந்த கலங்களில் அடிக்கடி ஆன்மீக பயணமாக இமயமலை செல்லும் ரஜினி அங்கே உள்ள ஆன்மீகம் குறித்த சிறப்பு அம்சங்கள், மற்றும் ஆன்மீகத்தால் கிடைக்கும் மனநிம்மதி என அனைத்தையும் மக்கள் மத்தியில் பகிர கூடியவர், அவருடைய 100வது படமும் கூட ஸ்ரீ ராகவேந்திரா என்கிற ஆன்மீக படத்தில் தான் ரஜினிகாந்த் நடித்தார்.
அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக தான் இருக்கும் என்றார், மேலும் பாபா முத்திரையை காண்பித்து தன்னுடைய அரசியலை உறுதி செய்தார் ரஜினிகாந்த், அவர் கலந்து கொண்டு பேசும் மேடைகளில் ஆன்மீகம் சார்ந்து எதாவது ஒரு கருத்து நிச்சயம் இடம் பெற்று இருக்கும், அந்த வகையில் தீவிர ஆன்மிகவாதியான ரஜினிகாந்த் பாஜக உடன் மிக நெருக்கமாக இருக்க கூடியவர் என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை.
பொதுவாக தீவிர ஆன்மீகத்தில் ஈடுபட கூடியவர்கள், பாஜகவுக்கு ஆதரவாக இருக்க கூடியவர்களை சங்கி என்று விமர்சனம் செய்வது வழக்கம், அந்த வகையில் ரஜினிகாந்த் ஒரு சங்கி என்கிற விமர்சனம் பொது தளத்தில் உண்டு. இந்நிலையில் சமீபத்தில் லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, அப்பாவை சங்கி சங்கின்னு சொல்றாங்க. எனக்கு புரியல. சங்கி என்றால் என்னன்னு கேட்டேன். அதுக்கு அரசியல் சார்ந்த சிலரை அப்படி கூப்பிடுவாங்க என்றனர்.
என் அப்பா ரஜினிகாந்த் சங்கி இல்லை. ரஜினிகாந்த் என்ற மனிதன் சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் இருக்கமாட்டார். சங்கி இந்த படத்தை பண்ண முடியாது. மனிதநேயமிக்க ஒருத்தரால் மட்டும் தான் இந்த படத்தில் நடித்திருக்க முடியும் அதனால் எங்க அப்பா சங்கி இல்லை என ஐஸ்வர்யா மேடையில் வேதனையுடன் பேசினார். இதற்கு சங்கி என்றால் என்ன கெட்ட வார்த்தையா என்கிற விமர்சனம் கூட ஐஸ்வர்யாவை நோக்கி எழுந்தது.
மேலும் ரஜினி அக்மார்க் சங்கி தான் என்றும் பலரும் ஐஸ்வர்யாவுக்கு பதிலடி கொடுத்து, ரஜினி சங்கி என்பதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய தந்தை சங்கி இல்லை என பேசிய அதே மேடையில் ரஜினிகாந்த் பேசுகையில், கடவுளை தெரிந்து வாழ்க்கையில் சந்தோஷமாக மாற மதங்கள் உருவானது. எல்லா மதங்களுக்கும் கிஸ்த்துவ மதம், இஸ்லாம் மதம் மற்றும் பவுத்த மதங்களுக்கு ஸ்தாபர்கள் இருந்தனர்.
அவர்களின் சீடர்கள் ஸ்தாபனம் செய்தனர். இந்து மதத்திற்கு மட்டும் ஸ்தாபர்கள் இல்லை. சதானம் என்றால் புராதனம். அதாவது ஆதி. ரிஷிகளின் சப்தங்களே வேதமானது. வேதங்களை எளிதாக புரிந்து கொள்ள உபநிஷதங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த உபநிஷதங்களை எளிமையாக புரிந்து கொள்ள பகவத் கீதை கொண்டு வரப்பட்டது. பரமாத்மா ஜீவாத்மாவுடன் பேசுவது தான் பகவத் கீதை.
இப்படி மதங்கள் எல்லாமே மக்களுக்கு நன்மை செய்யவே கூறுகிறது. கிஸ்துவம், இஸ்லாம், புத்தம் மற்றும் இந்து மதங்களில் உண்மை இருப்பதால் காலம் காலமாக இருந்து வருகிறது’ என முழுக்க முழுக்க ஆன்மீகம் குறித்து, அதுவும் இந்து மதம் குறித்தே அந்த மேடையில் பேசிய ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா எங்க அப்பா சங்கி இல்லை என தெரிவித்த அதே மேடையில் நான் சங்கி தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என மகள் ஐஸ்வர்யாவுக்கு அதே மேடையில் பதிலடி கொடுத்து முக்குடைத்து விட்டார் ரஜினி என்று சொல்லும் அளவுக்கு அமைத்தது ரஜினியின் ஆன்மீக உரை.