நீண்ட காலமாக அரசியலுக்கு வருகிறேன் என்று வாய் சொல்லாக சொல்லிக் கொண்டிருந்த ரஜினிகாந்த் ஒரு கட்டத்திற்கு மேல் உடல் நலத்தை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அரசியல் கட்சி குறித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஆனால் உடல் நிலை சரியில்லை என சொன்ன ரஜினி சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் ரெம்ப பிசியாக நடித்து வருகிறார். மேலும் தவறாமல் அனைத்து அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பல்வேறு விருது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இப்படி பல்வேறு பட விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் ரஜினிகாந்த் மேடையில் ஏறி சற்றும் யோசிக்காமல் பேசி விடுகிறார். இதுவே அவருக்கு பல பிரச்சனைகளையும் உண்டாக்கி விடுகிறது. சமீப காலமாக, ரஜினிகாந்தின் பேச்சு இணையம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் மீண்டும் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டி உள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் நீண்ட காலமாக கலைஞரின் நினைவிடம் கட்டப்பட்டு வந்து நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுகவினரும் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்தும் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக காலையிலேயே காரில் வந்திறங்கினார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓடோடி வந்து ரஜினிகாந்தை வரவேற்றார்.
அதன் பின்னர் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் அருகே அமர்ந்து உரையாடிய ரஜினிகாந்த், திரும்பி வரும்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “இதை கலைஞர் நினைவு மண்டபம் என்று கூறுவதை விட கலைஞரோட தாஜ்மஹால்னு சொல்லலாம்” என்று பூரித்துப் போய் பேசி இருந்தார். ரஜினிகாந்த் இப்படி பேசியது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது.
இதே ரஜினிகாந்த் சமீபத்தில் சசிகலா கட்டிய புது வீட்டின் புதுமனை புகு விழா நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அங்கு சென்றது மட்டுமின்றி, “வீட்டைக் கோயில் மாதிரி கட்டி இருக்கீங்க” என்று சொல்லியிருந்தார். ஏற்கனவே, சசிகலாவின் வீட்டை பார்த்துவிட்டு கோவில் மாதிரி இருக்கு என தெரிவித்த ரஜினிகாந்த தற்போது கலைஞர் நினைவிடத்தை பார்த்து தாஜ்மஹால் என்று பேசியுள்ளது கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றாலும் அரசியலில் இருந்து விலகி இருந்தாலும் ஒரு அரசியல்வாதியே தொற்று போகும் அளவுக்கு இடத்திற்கு ஏற்றார் போல், சம்பந்தப்பட்டவர்கள் மனம் குளிர பேசி வருகிறார் ரஜினி. அதாவது வடிவேலு நகை சுவை காட்சிகளில் வருவது போன்று, உன்கிட்ட வாங்குன காசுக்கு ஏணி சின்னத்தில் ஒரு குத்து, அவன் கிட்ட வாங்குன காசுக்கு தென்னை மரம் சின்னத்தில் ஒரு குத்து என்பது போன்று.
சசிகலா மனம் குளிர உங்கள் வீடு கோவில் மாதிரி இருக்கு என புகழ்வது, திமுகவினர் மனம் குளிர கலைஞர் நினைவிடம் இல்லை இது தாஜ்மகால் என்று ரஜினி பேசி வருவதாக ரஜினிகாந்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும் லால் சலாம் படத்தில் மதம்வாதத்திற்கு எதிராக நரம்பு புடைக்க வசனம் பேசிய அதே ரஜினி தான் ராமர் கோவில் திறப்பு விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தார் என்பதும் இதற்கு முன்பு விமர்சனத்துக்கு உள்ளனாது குறிப்பிடத்தக்கது.