கோடி கோடியா வசூல் செய்து என்ன.? இதெல்லாம் ஒரு படமா.? பிரபல இயக்குனர் ஆவேசம்…

0
Follow on Google News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி மாஸாக வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் திரைப்பயணத்தில் இப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ரூ. 200 முதல் ரூ. 240 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

பெரிய நடிகரின் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கான வசூல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வசூலை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் இயக்குனர் தங்கர்பச்சான். தமிழில் அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான்.

இயக்குனர் தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் தங்கர் பச்சான் பேசுகையில், “மக்கள் நல்ல சினிமாவை விரும்பிப் பார்க்க வேண்டும், ஆதரிக்க வேண்டும்.

200, 300, 500 கோடி என அதிகப் பொருட்செலவில், முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் ஒன்றுமேயில்லை என்றாலும் எளிதில் அப்படம் மக்களிடம் சென்று சேர்ந்துவிடுகிறது. மக்களும் அதைப் பார்க்கத் தயாராக இருக்கின்றனர். இன்று எடுக்கப்படும் பல படங்களில் துப்பாக்கிகள், கத்தி, கொலை, ரத்தம் என வன்முறைகள் அதிகமாக இருக்கின்றன. உயிரைக் கொல்வது என்பது சாதாரணமாகிவிட்டது.

இதைப் பார்த்து வளரும் குழந்தைகள் எந்த மனநிலையில் இருக்கும். இன்றைய படங்களில் அன்பு, பாசம், உயிர்கள் மேல் நேசம் போன்றவை குறைவாகவே இருக்கின்றன. இன்றைய மக்களுக்கும், குழந்தைகளுக்கும் அன்பை அதிகம் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. படத்திற்கு வசூலாகும் பணத்தை மட்டும் வைத்து என்ன செய்வது. இப்படங்கள் சில மாதங்களில் காணாமல் போய்விடும்.” என பேசிய தங்கர் பச்சான்.

மேலும், “படத்தில் நடிப்பவர்களுக்கு இந்த அறிவு இருக்காதா? கலைஞனுக்கு பொறுப்பும், கடமையும் உண்டு. நான் ஒரு நல்ல படத்தை செய்திருக்கிறேன். வந்து பாருங்கள் என கெஞ்சிக்கொண்டே இருக்க வேண்டுமா? 10 மசாலா சினிமாவை காட்டினால் ஒரு குழந்தை அழிந்தேவிடுவான். அதில் ஒன்றுமேயில்லை. தீபாவளி போன்ற விழாக்களின்போது எவ்வளவு மது விற்பனையாகிறது என செய்தி வெளியிடுவது போலத்தான் மசாலா படங்களுக்கான வசூலை வெளிப்படுத்துவதும். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?” என ஆவேசத்தை வெளிப்படுத்திய தங்கர் பச்சான்

மேலும், தீபாவளிக்கு சரக்கு விற்பனை அமோகம் என்பது போல இருக்கு, உங்கள் படம் 500 கோடி வசூல் என்கிற தங்கர் பச்சானின் பேச்சு‌ ரஜினிகாந்தின் ஜெயிலரை துவைத்து தொங்கப்போட்டு விட்டது.
அதுமட்டுமின்றி எம்ஜிஆர் படங்களை பார்த்து வளர்ந்தவன் தான் நான், அவர் திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது, தப்பு செஞ்சாலும் மன்னிச்சு விட்றுனும், உழைச்சி சாப்பிடணும், அப்பா அம்மாவை மதிக்கணும், இப்படி ஒவ்வொரு படத்திலும் நல்ல கருத்துக்களை சொல்லியே நடித்து வந்தார்.

ஆனால், இப்போதைக்கு முன்னணி நடிகர்கள் என சொல்லிக் கொண்டு திரியும் ஒருத்தருக்காவது சமூக அக்கறை இருக்கா என ரஜினியை மட்டுமின்றி விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களையும் வச்சு விளாசி விட்டார் இயக்குனர் தங்கர் பச்சான்.