ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்… அடம் பிடித்த ரஜினிகாந்த்… இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா.?

0
Follow on Google News

தர்பார், அண்ணாத்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் நல்ல வரவேற்பைப் பெற்று 500 கோடிகளை தாண்டி வசூலித்தது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தற்போதைய தமிழின் சென்சேஷனல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கயிருப்பது இன்னொரு பூஸ்டர் செய்தி. இது ரஜினிகாந்தின் 171 வது படமாக இருக்கும். அதற்கு முன் ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

ரஜினிகாந்திற்கு ராசியான நடிகைகள் என்று சிலர் உண்டு. ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீபிரியா போன்றவர்கள் நடித்தாலே ரஜினியின் படம் ஹிட்டென அப்போதெல்லாம் ஒரு பேச்சு இருக்கும். ராசியான நடிகைகள் என்பதை தாண்டி ரஜினிக்கு ரொம்பவும் பிடித்த நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான். அவருடன் நடிப்பதற்காக பல வருடங்களாக ரஜினி முயற்சி செய்து இருக்கிறார்.

உலக அழகி பட்டத்தை வென்று ஒரே இரவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர், இயக்குநர் மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் ஆகிய படங்களில் நடித்து இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையானார். பின்னர், அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். குழந்தை பிறந்த பிறகும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் ஒரு படத்துக்கு, கதாபாத்திரத்தை பொறுத்து 10 முதல் 12 கோடி ரூபாய் வரை ஊதியமாக பெறுகிறார்.

1995ல் ரஜினியின் பாட்ஷா வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய முத்து படத்தில் நடித்தார் ரஜினி. இந்தப் படத்தில் தான் ஏஆர் ரஹ்மானும் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், அப்போது அவர் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை எனக் கூறிவிட்டதால், ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக மீனா நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி – கேஎஸ் ரவிக்குமார் – ஏஆர் ரஹ்மான் கூட்டணி படையப்பா படத்தில் மீண்டும் இணைந்தது. இந்தப் படம் 1998ல் ஷூட்டிங் தொடங்கி 1999ம் ஆண்டு வெளியானது. இதனிடையே 1997ல் மணிரத்னம் இயக்கிய இருவர் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிவிட்டார் ஐஸ்வர்யா ராய். அதனால், படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்கலாம் என ரஜினி முயற்சி செய்து பார்த்தாராம்.

ஆனால், அப்போதும் இது கை கூடாமல் போக, இறுதியாக ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக நடித்தார். படையப்பாவுக்கு பின்னர் 3 ஆண்டுகள் இடைவெளிவிட்டு வெளியானது பாபா. ரஜினி – சுரேஷ் கிருஷ்ணா – ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவான இந்தப் படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், ரஜினியின் கேரியரில் பாபா தான் மிகப் பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதிலும் ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க ரஜினி விரும்பினாராம்.

ஆனால், மனீஷா கொய்ரலாவே நடிக்கும் சூழல் உருவானது. பாபாவுக்கு பின்னர் மீண்டும் 3 வருட இடைவெளிவிட்ட ரஜினி, சந்திரமுகி திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார். பி வாசு இயக்கிய இந்தப் படம் பாபாவுக்கும் சேர்த்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து கெத்து காட்டியது. இதில் சந்திரமுகி / கங்கா என இரட்டை பாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய்யிடம் கேட்கப்பட்டதாம். ஆனால், அப்போதும் ரஜினியின் ஆசை நிறைவேறாமல் போக, ஜோதிகா சீனில் வந்தார்.

படையப்பா, சந்திரமுகி படங்களில் ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க ரொம்பவே ஆசைப்பட்டதாக ரஜினியே பலமுறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிவாஜி படத்திலும் ஸ்ரேயா கேரக்டரில் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க ரஜினி எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறார். இயக்குனர் சங்கர் கேட்டும் ஐஸ்வர்யா அதில் நடிக்கவில்லை. முத்து, படையப்பா, பாபா, சந்திரமுகி என தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மீது படையெடுத்து வந்த ரஜினிக்கு, எந்திரன், 2.O படங்களில் தான் கனவு நனவானது. இந்த இரண்டு படங்களிலும் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்தது குறிப்பிடத்தக்கது.