கே. எஸ். ரவிக்குமாரை நம்பவைத்து ஏமாற்றிய ரஜினிகாந்த்… கை கொடுத்து உதவிய விஜய்.. !

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இவர்கள் இருவரின் கூட்டணியில் முதன் முதலில் வெளியான படம் முத்து. இந்த படம் நடிகர் ரஜினிகாந்தை உலக அளவில் புகழ் பெற்று தந்தது. முத்து படம் ஜப்பானில் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உருவாகும் அளவுக்கு உலக அளவில் வெற்றி பெற்றது. இதற்கு முன்பு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை படத்தை பார்த்த ரஜினிகாந்த் தானாக நேரில் கே எஸ் ரவிக்குமாரை அழைத்து முத்து படத்தின் வாய்ப்பை கொடுத்தார்.

இதன் பின்பு மீண்டும் கே.எஸ். ரவிக்குமார் – ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான படையப்பா படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. படையப்பா படத்திற்கு பின்பு கே.எஸ்.ரவிக்குமார் – ரஜினிகாந்த் கூட்டணி வெற்றி கூட்டணி என்று அறிவிக்கப்பட்டது. இதுபோன்று ரஜினிகாந்துக்கு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் கே எஸ் ரவிக்குமார். 2011 ஆம் ஆண்டு மீண்டும் ரஜினியை நடிப்பில் வரலாற்று கதையை மையமாக வைத்து ராணா படத்தை தொடங்கினர் கே.எஸ்.ரவிக்குமார்.

ஆனால் ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு. ராணா படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்று வந்த ரஜினிகாந்த், தன்னுடைய வெற்றி இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்திருந்தாலும். இந்த படத்தில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் காட்சி ஒட்டுமொத்த படத்தையும் டேமேஜ் செய்து விட்டது.

வசூல் ரீதியாக லிங்கா படம் வெற்றி பெறவில்லை, இருந்தும் ரஜினிகாந்தை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்கி தான் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க கடந்த 10 வருடங்களாக ரஜினிகாந்திடம் வாய்ப்பு கேட்டு போராடி வருகின்றவர் கே எஸ் ரவிக்குமார். அதற்காக பல கதைகளை தயார் செய்து தொடர்ந்து பலமுறை ரஜினிகாந்த்தை சந்தித்து வாய்ப்பு கேட்டு வருகின்றவர் கேஎஸ் ரவிக்குமார்.

ரஜினிகாந்த் ஒவ்வொரு படமும் நடித்துக் கொண்டிருக்கும் போது, இந்த படம் முடியட்டும் பார்க்கலாம் என்று கே.எஸ்.ரவிகுமாரிடம் தெரிவித்து வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் கே எஸ் ரவிக்குமார் நம்பிக்கையுடன் காத்திருந்து வந்துள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு கல்தா கொடுத்துவிட்டு வேறு ஒரு இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த் கமிட்டாவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது.

இப்படி ஒவ்வொரு முறையும் ரஜினிகாந்துக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்து வந்த கே எஸ் ரவிக்குமார் கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்தே படத்தின் போது புதிய படத்திற்கான கதையை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். மேலும் புதிய படம் தொடர்பாக அடிக்கடி போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியும் வந்துள்ளார் கே எஸ் ரவிக்குமார்.

அண்ணாத்தே படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் கண்டிப்பாக தனக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார். இந்த நிலையில் அண்ணாத்தே படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்குவது என்கின்ற போட்டியில் கே எஸ் ரவிக்குமார், சிபிசக்கரவர்த்தி, நெல்சன் திலீப்குமார், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் பெயர் பரிசீலனையில் இருந்தது.

இறுதியில் நெல்சன் திலீப் குமாரை தேர்வு செய்து இம்முறையும் கே எஸ் ரவிக்குமார் ஏமாற்றி விட்டார் ரஜினிகாந்த். இருந்தும் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த கேஎஸ் ரவிக்குமாருக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தற்பொழுது ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு சிபிசக்கரவர்த்தி இயக்கும் அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், ரஜினிகாந்தை நம்பி ஏமாற்றம் அடைந்தது போதும் என முடிவு செய்த கே.எஸ்.ரவிக்குமார். கடந்த 2011ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட ராணா படத்தின் கதையை சமீபத்தில் நடிகர் விஜய் சந்தித்து தெரிவித்துள்ளார். இது ஒரு வரலாற்று கதை என்பதால் மேலும் கதை ரசிகர்கள் கொண்டாடும் மாஸாக இருத்துள்ளதால், விஜய் பாசிட்டிவான பதிலை கே.எஸ்.ரவிகுமாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வாரிசு படத்தை முடித்துவிட்டு, அடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் விஜய், அதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தை முடித்துவிட்டு கே எஸ் ரவிக்குமாருடன் ராணா படத்தில் விஜய் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரை காக்க வைத்து ரஜினிகாந்த் ஏமாற்றிய நிலையில், ஒரு மிகப்பெரிய இயக்குனருக்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வரையில் உதவி செய்துள்ளார் விஜய் என்று கூறப்படுகிறது.