மதுபோதையில் ரஜினி எடுத்த சபதம்.. சென்னையில் மது பாரில் நடந்த சம்பவம்…

0
Follow on Google News

தொடர்ந்து ரஜினிகாந்தை கேலி கிண்டலுடன் விமர்சனம் செய்து வரும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ஜெயிலர் பட ஆடியோ வெளியிட்டு விழாவில் மது அடிக்க கூடாது என ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு, தலைநகரில் உள்ள நுங்குபாக்கம் பகுதியில் உள்ள பிரபல ‘பனை தோப்பு’ ஹோட்டலுக்கு அருகே பருந்திற்கு சொந்தமாக ஒரு ஹோட்டல் இருந்தது. அதற்கு 97 இல் வெளியான தனது படத்தின் பெயரை சூட்டியிருந்தது பருந்து.

தற்போது அதை மெயின்டெயின் செய்ய இயலாத காரணத்தால் இன்னொரு க்ரூப்பிற்கு கைமாற்றி உள்ளது. அங்கே தற்போது இருப்பது நூலகமோ, இலவச மருத்துவமனையோ இல்லை. பல மதுப்பிரியர்கள் வந்து செல்லும் Bar என்பதுதான் ஹைலைட். ஊருக்கு உபதேசம். ஆனால் தன் இடத்தில் பாருக்கு அனுமதி. பார்த்தீர்களா பருந்தின் இரட்டை வேடத்தை என ரஜினிக்கு பருந்து என பெயரிட்டு மோண்ட் ரோட்டில் இருக்கும் ரஜினிக்கு சொந்தமான கெஸ்ட் அவுஸ் பற்றியும் அதில் இருக்கும் மது பார் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

இந்நிலையில் ரஜினிக்கு சொந்தமான அந்த அருணாசலா கெஸ்ட் அவுஸ் பற்றி சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில், அந்த கெஸ்ட் அவுஸ் பற்றி பல பின்னணி நம்பமுடியாத தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி சினிமாவில் ஆரம்பக்கட்டத்தில் நடித்து கொண்டிருந்தபோது தொடர்ந்து மவுண்ட் ரோடு அருகில் இருக்கும், ஜெமினி ஸ்டுடியோவில் அவர் நடிக்கும் படப்பிடிப்பு நடந்து வருகிறது, அப்போது ஜெமினி ஸ்டூடியோ அருகிலே ஒரு இடம் வாங்க வேண்டும் என ரஜினி விரும்புகிறார்.

ரஜினி அவருடைய ஆரம்ப கட்ட சினிமா வாழ்க்கையில் சிகரெட் மற்றும் மது பழக்கத்திற்கு இல்லாமல் அவர் ஒரு நாளும் இருந்ததும் இல்லை, அப்படி ஒரு நாள் தன்னுடைய நண்பர்களிடம் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தபோது நண்பர்களிடம் மவுண்ட் ரோட் ஜெமினி ஸ்டுடியோ பக்கத்தில் ஒரு இடம் வாங்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை ரஜினி தெரிவித்த போது, அவருடன் தண்ணி அடித்துக் கொண்டிருந்த சக நண்பர்கள் கிண்டல் செய்து சிரிக்கிறார்கள்.

நீ வாங்குற சம்பளத்திற்கு மவுண்ட்ரோடு பக்கத்தில் அதுவும் ஜெமினி ஸ்டுடியோ பக்கத்தில் இடம் வாங்க போகிறாயா.? எதற்காக உனக்கு இந்த பேராசை என என்று கிண்டல் செய்து சிரிக்கிறார்கள் அவருடைய நண்பர்கள். உடனே மது போதையில் இருந்த ரஜினிகாந்த் கோபத்தில் மது பாட்டில் எடுத்து டேபிளில் உடைத்து விட்டு, நண்பர்கள் மத்தியில் மதுபோதையில் சபதம் விடுகிறார் ரஜினிகாந்த்.

நான் எப்பொழுது மவுண்ட் ரோடு அருகில் இடம் வாங்குகிறானோ அப்போதுதான் இந்த மதுவையும் சிகரட்டையும் மீண்டும் குடிப்பேன் என்று சபதம் ஏற்ற ரஜினிகாந்த் தூக்கம் இல்லாமல் தொடர்ந்து பல படங்களுக்கு கால் சீட் கொடுத்து சுமார் ஒரு நாளைக்கு மூன்று படங்களில் கூட நடித்த ரஜினிகாந்த், யார் வந்தாலும் என்ன கதாபாத்திரம் வந்தாலும் உடனே அட்வான்ஸ் வாங்கி போட்டுக் கொண்டு கால் சீட்டை கொடுத்து பணத்தை குவித்து வந்து கொண்டிருக்கிறார்.

ரஜினிகாந்த் நண்பர்களிடம் செய்த சபதத்தின் படி மவுண்ட் ரோட்டில் தன் ஆசைப்பட்ட மாதிரி ஒரு இடத்தை வாங்குகிறார். இதுதான் ரஜினிகாந்த் வாங்குகின்ற முதல் சொத்தாகும், அதே போன்று தான் விட்ட சவாலை அடைந்ததை கொண்டாடும் வகையில் அந்த இடத்தை வாங்கிவிட்டு அங்கேயே மீண்டும் தண்ணியும் சிகரட்டும் அடிக்க ஆரம்பிக்கிறார் ரஜினிகாந்த். அந்த இடத்தை அருணாச்சலா கெஸ்ட் ஹவுஸ் என பெயரிட்டு நடத்தி வருகிறார் ரஜினிகாந்த்.

இதன் பின் இந்த சொத்துக்கு பின்பு தான் ரஜினிகாந்த் சென்னையில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவிக்க தொடங்கினார், அந்த வகையில் தான் வாங்கிய முதல் சொத்தான அருணாச்சலம் கெஸ்ட் ஹவுஸ் மீது ரஜினிக்கு எப்போதுமே ஒரு தனி காதல் உண்டு, இருந்தாலும் ஒரு கட்டத்தில் அந்த அருணாச்சலம் கெஸ்ட் ஹவுஸ் தொடர்ந்து ரன் பண்ண முடியாததால், ஹோட்டல் பிசினஸில் இருக்கும் தன்னுடைய நண்பரிடம் அந்த அருணாச்சல கெஸ்ட் ஹவுஸ் ரன் பண்ண கொடுக்கிறார் ரஜினிகாந்த்.

அதன் பின்பு அந்த அருணாச்சல கெஸ்ட் ஹோவுசில் மதுபார்கள் என அனைத்து வசதிகளும் கொண்டுவரப்படுகிறது. ரஜினிகாந்த் ஒரு முறை அருணாச்சலம் கெஸ்ட் ஹவுஸில் தன்னுடைய கன்னட நண்பர் ஒருவருடன் பாரில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தபோது, பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளி சீருடை அருணாச்சல கெஸ்ட் ஹவுஸ் வந்து வாரில் அமர்ந்து பீர் வாங்கி குடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை அங்கிருந்த பார்த்த ரஜினிகாந்த் ஒரே ஷாக், உடனே அந்த மாணவர்களிடம் சென்ற ரஜினிகாந்த் கண்ணுகளா நீங்க எல்லாம் படிக்க வேண்டிய பசங்க, இந்த வயசுல குடிப்பது தவறு என்று சொன்னதும் ரஜினிகாந்தை பார்த்ததும் அங்கிருந்த பள்ளி மாணவர்களுக்கு ஷாக். மேலும் அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் இனிமே குடிக்க கூடாது என சத்தியம் செய்ய வேண்டும் என்று சொல்லி அவர்கள் வாங்கிய மது பாட்டில்கள் எல்லாம் மீண்டும் எடுக்கச் சொல்லிவிட்டு அவர்களுக்கு சாப்பாட்டுக்கு தேவையான பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார் ரஜினிகாந்த் என்று அன்றைய காலகட்டத்தில் செய்தித்தாள்களிலும் இந்த செய்தி வந்தது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் மது குடிப்பது தவறு என்று பேசுவது புதிதல்ல, தன்னுடைய ஆரம்ப காலகட்டத்திலேயே மது குடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் மது குடிப்பது தவறு என்று சுட்டிக் காட்டியவர் ரஜினிகாந்த் இதை எல்லாம் இன்று கோபுரம் போல் இருக்கக்கூடிய நடிகர் ரஜினியை கீழே இருந்து அண்ணாந்து பார்த்து விமர்சனம் செய்யக்கூடிய ப்ளூ சட்டை மாறன் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் சினிமா துறையினர்.