ரஜினி கொடுத்த அழுத்தம்… சினிமா வாழ்க்கையை இழந்து தத்தளிக்கும் AR முருகதாஸ்..

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது, மேலும் இந்த படத்தில் இருந்து தான் நடிகர் அஜித்குமார் தல என்று அடைமொழியுடன் சினிமா ரசிகர்கள் அழைக்க தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் ரமணா, சூர்யா நடிப்பில் கஜினி என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இயக்குனர் முருகதாஸ், இந்தி சினிமாவிலும் கால் பதித்தார்.

மிக பெரிய உச்சத்தில் இருந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி படம் மூலம் விஜய்யுடன் முதல் முதலில் இணைந்தார், நடிகர் விஜய் நடிப்பில் முதல் முதலில் 100 கோடி வசூல் சாதனை படைத்த படம் துப்பாக்கி என்பது குறிப்பிடதக்கது, துப்பாக்கி படம் அணைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட படம். ரஜினிகாந்துக்கு எப்படி பாட்ஷா படம் பெயரும் புகழும் வாங்கி தந்தது, அதே போன்று துப்பாக்கி படம் நடிகர் விஜய்க்கு பெயரும் புகழும் வாங்கி தந்தது.

இதன் பின்பு மீண்டும் விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டனியில் கத்தி, சர்க்கார் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார் முருகதாஸ். இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வந்த தர்பார் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஏற்கனவே தர்பார் படம் முடிந்த பின்பு, அடுத்து விஜய் நடிப்பில் ஒரு படம் முருகதாஸ் இயக்குவதாக இருந்தது, ஆனால், தர்பார் படத்துக்கு பின்பு முருகதாஸை கண்டுகொள்ளவில்லை விஜய்.

இந்நிலையில் தர்பார் படத்தில் அடைந்த தோல்விக்கு பின்பு மீண்டும் தன்னை சினிமாவில் நிலைநாட்ட ஏ.ஆர்.முருகதாஸ் சில வருடங்களாகவே போராடி வருகிறார். இந்த நிலையில் தர்பார் படம் தோல்விக்கான காரணம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில்.தர்பார் படத்தை மார்ச் மாதம் தொடங்க வேண்டும் என ரஜினிகாந்த் சொன்னார், ஏனென்றால் அப்போது ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதாக இருந்தது.

ரஜினிகாந்த் மிக பெரிய ரசிகனான நான், இந்த பட வாய்ப்பை இழக்க விரும்பவில்லை, ரஜினிகாந்த்
அரசியலுக்கு வரவிருந்த காரணத்தால் அந்த நேரத்தில் அதுதான் ரஜினிகாந்த்தின் கடைசி படம் என்று பேசப்பட்டது. ஆனால் என்னிடம் என்னிடம் படம் பண்ணலாம் என்று சொன்னது பிப்ரவரியில். நான் மார்ச்சில் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன். ஜுன் மாதத்திற்கு படப்பிடிப்பு முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு .

இருந்தும் இந்தப் படத்தை மிஸ் பண்ணக்கூடாது. அதே நேரத்தில் இந்தப் படத்தை ஹிட்டாக்கவும் விரும்பினேன். அதுதான் என்னுடைய தவறான முடிவு. சரியான திட்டமிடல் இல்லையென்றால் தவறாக முடியும் என புரிந்தது என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறி, மிக குறுகிய காலத்துக்குள் தர்பார் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என ஏ.ஆர்.முருகதாஸ்க்கு அழுத்தம் கொடுத்தது தான் தர்பார் படம் தோல்விக்கு காரணம் என ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் எந்த ஒரு பெரிய நடிகராக இருந்தாலும், அந்த நடிகருக்காக படம் பண்ணாமல், தன்னுடைய விருப்பத்திற்கு படம் இயக்கினால் மட்டுமே வெற்றி அடைய முடியும், அந்த விதத்தில் ரஜினிகாந்த் படத்தை மிஸ் பண்ண கூடாது என ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த தவறான முடிவு தான் அவரை சினிமாவில் மிக பெரிய வீழ்ச்சி பாதைக்கு அழைத்து சென்றது, இதே என்னால் நீங்கள் சொல்வது போன்று படம் எடுக்க முடியாது என தர்பார் படத்தை உதறி தள்ளியிருந்தால் தற்பொழுது வரை வெற்றி இயக்குனராவே ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்திருப்பர் என்கிறது சினிமா வட்டாரங்கள்.