நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் 80, 90களில் அவருடைய படங்கள் பூஜை போட்ட உடனேயே தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து ஏரியாக்கள் விற்பனை செய்யப்பட்டு விடும், அந்த அளவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக 90 காலகட்டங்களில் வலம் வந்தவர், பல தயாரிப்பாளர்களும் இயக்குனரும் ரஜினியின் கால் சீட்டுக்காக காத்திருந்த அந்த காலத்தில், ஒரு மிகப்பெரிய சர்ச்சை வெடிக்கிறது.
ரஜினிகாந்த் அதிக சம்பளம் வாங்குகிறார், அவர் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவில்லை என்றால், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை விநியோகம் செய்ய மாட்டோம், என சென்னை, செங்கல்பட்டு ஏரியாவின் விநியோகஸ்தர் தலைவராக இருந்த சிந்தாமணி முருகேசன் என்பவர் 1993 ஆம் ஆண்டு ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து, ரஜினிக்கு ரெட் கார்டு விதிப்பதாக தெரிவித்து ஒட்டு மொத்த சினிமா துறையையும் பரபரப்பில் ஆழ்த்துகிறார்.
இது நடிகர் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய ஒரு பயத்தை உருவாக்கியது என்று சொல்லலாம். அந்த காலத்தில் விநியோகஸ்தர் சங்கம் மிக வலுவாக இருந்த காரணத்தினால். ரஜினியின் கால் சீட்டுக்கு போட்டி போட்ட தயாரிப்பளர்கள் அனைவரும் ரஜினியை வைத்து படம் தயாரிப்பதில் இருந்து பின் வாங்குகிறார்கள், இப்படி ஒரு பரபரப்பான சூழலில் என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன் என ரஜினியை வைத்து படம் தயாரிப்பதற்கு முன் வருகிறார் விஜய வாகினி ப்ரொடக்ஷன் நிறுவனத்தை சேர்ந்த நகரெட்டி.
ஒரு கட்டத்தில் விநியோகஸ்தர்கள் துணை இல்லாமல் உன்னால் எப்படி படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என தயாரிப்பாளர் நாகரெட்டிக்கு எச்சரிக்கை வருகிறது, அதற்கு நானே நேரடியாக அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸ் செய்கிறேன் என துணித்து படத்தின் அடுத்தகட்ட வேலைகளில் தீவிரம் காட்டுகிறார் தயாரிப்பாளர் நாகரெட்டி.
இதற்கு முன்பு நடிகர் ரஜினியை வைத்து பணக்காரன், மன்னன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசுவுக்கு மீண்டும் ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை கொடுக்கபடுகிறது, இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வழியெங்கும் கட் அவுட்டு, தோரணை, என மிக பிரமாண்டமாக விநியோகஸ்தர்கள் எதிர்ப்பை மீறி நடைபெறுகிறது ரஜினியின் உழைப்பாளி படத்தின் பூஜை.
படப்பிடிப்பு நடந்து முடிந்து, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது, நடிகர் ரஜினிகாந்துக்கு சம்பளத்திற்கு பதில், உழைப்பாளி படத்தின் வட ஆற்காடு,தென் ஆற்காடு , செங்கல்பட்டு பகுதிகளின் ஏரியாக்கள் ரஜினிக்கு கொடுக்கிறார் தயாரிப்பாளர் நாகரெட்டி, இது ரஜினி வாங்கும் சம்பளத்தை விட மிக அதிகமான தொகை. தயாரிப்பாளரின் இந்த செயல் மேலும் விநியோகஸ்தர்களை கோபம் அடைய செய்கிறது.
ஆனாலும் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பை மீறி படம் ரிலீஸ் செய்யமுடியாத சூழல் நீடிக்கிறது. உடனே ரஜினிகாந்த் வினியகஸ்தர் சங்க தலைவர் சிந்தாமணி முருகேசன் இருக்கும் இடத்திற்கு சென்று சமாதானம் செய்ய காரில் செல்கிறார், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பின்பு கார், அந்த பகுதியில் செல்ல முடியவில்லை, நீண்ட தூரத்தில் இருந்து காரில் இறங்கி நடந்தே வந்து சிந்தாமணி முருகேசனை சந்தித்து சமாதானம் பேசுகிறார் ரஜினி.
ஒரு கட்டத்தில் மனது இறங்கி சிந்தாமணி முருகேசன் சமாதனம் ஆக, ரஜினி நடித்த உழைப்பாளி படம் திரைக்கு வருகிறது, அந்த வகையில் அன்றைய காலத்தில் மிக பெரிய உச்சத்தில் இருந்த நடிகர் ரஜினிகாந்தை, தனி ஒருவனாக இருந்து கதற விட்டவர் சிந்தாமணி முருகேசன் என்கின்றனர் சினிமா துறையினர்.