நீங்க வாங்க சார்.. உங்க மனைவியை அந்த பக்கம் போக சொல்லுங்க… அயோத்தியில் ரஜினிகாந்த் மனைவிக்கு வந்த சோதனை..

0
Follow on Google News

இந்தியாவே காத்திருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி தலைதாங்கி பிரான் பிரதிஷ்டை விழாவை நடத்தி மக்களின் பார்வைக்குக் கோவில் திறக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக இந்தியா முழுவதிலும் இருந்து பெரும் பிரபலங்களின் பட்டாளத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவிலில் 5 வயது பால ராமர் சிலை மக்களைக் கவர்ந்துள்ளது.

அயோத்தியிலும் மக்கள் கூட்டம் அலைமோதும் வேளையில், பிரதமர் முதல் பல்வேறு அமைச்சர்கள், அம்பானி முதல் பல தொழிலதிபர்கள், ரஜினிகாந்த் முதல் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். திரையுலக நட்சத்திரங்களில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், விவேக் ஓபராய், அனுபம் கெர், பவன் கல்யாண், கங்கணா ரணாவத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சில நாட்களுக்கு முன்னதாக ராமர் கோயில் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கலந்து கொண்ட வேண்டும் என அவருக்கு பிரத்யேகமாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் முன்தினமே சென்னையில் இருந்து அயோத்திக்கு புறப்பட்ட ரஜினிகாந்த் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு முன் வரிசையில் அமர நாற்காலி ஒதுக்கப்பட்டு இருந்தது.

ரஜினிகாந்த் உடன் லதா ரஜினிகாந்த் அயோத்திக்கு சென்றிருந்தார். மேலும், நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் அயோத்திக்கு சென்றிருந்தார். ஆனால், முன் வரிசையில் ரஜினிகாந்த் மட்டுமே அமர்ந்திருந்த காட்சிகள் வெளியாகின. மேலும், நடிகர் ரஜினிகாந்த் விழா ஏற்பாட்டாளர்களிடம் ஏதோ பேசுவது போன்ற காட்சிகளும் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இந்த வீடியோ குறித்து விசாரித்ததில், முன் வரிசை ஒதுக்கப்பட்ட ரஜினி, அங்கே நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம், தன்னுடைய குடும்பத்தினர் பின் வரிசையில் அமர்ந்துள்ளார்கள், அவர்களை தனது அருகில் முன் வரிசையில் அமர இருக்கை ஏற்பாடு செய்து தரும்படி ரஜினி கேட்டுள்ளார், ஆனால் சாரி சார், உங்களுக்கு மட்டும் தான் முன் வரிசையில் இடம், உங்கள் குடும்பத்தினருக்கு பின் வரிசையில் தான் இடம் ஒதுக்கப்பட்டுளது.

உங்களுக்கு மட்டும் இல்லை சார், அணைத்து முக்கிய பிரபலங்களுக்கும் இதே போன்று அவர்கள் குடும்பத்தினர் பின் வரிசையாயிலும் குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டும் முன் வரிசையில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என அங்கே இருந்து பொறுப்பாளர் ரஜினியிடம் தெரிவிக்க, உடனே சட்டென்று ரஜினியின் முக வாடியதை பார்க்க முடிந்தது, இருந்தும் ஓகே சார் அப்படியா என தனக்கு ஒதுக்கப்பட்ட முன் வரிசையில் ரஜினி அமர்ந்து கொண்டார்.

ரஜினிகாந்த் அமர்ந்த முன் வரிசையில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் குடும்பத்துடன் அமர்ந்திருந்தனர், ஆனால் ரஜினிக்கு தான் குடும்பத்துடன் அமர்ந்து ராமர் கோவில் நிகழ்வை பார்க்க முடியாமல், முன் வரிசையில் ரஜினியும், சற்று தள்ளி பின் வரிசையில் அவரது மனைவி உட்பட குடும்பத்தினரும் அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்தனர். இதில் நடிகர் தனுஷ்க்கு முன் வரிசையில் இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்க தினம், இந்த கொண்டாட்டத்தில் தனக்கு பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுவதாகவும், அடுத்தடுத்து மீண்டும் அயோத்திக்கு வருவேன் என்றும் ஆண்டுதோறும் வர விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.