இயக்குனர் தாசே ஞானவேல்ராஜ் இயக்கும் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 170 வது படத்தில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக ஒரு படத்தில் அமிதாப்பச்சன் நடிக்க இருக்கிறார் என்றால் அமிதாப்பச்சன் தரப்பிலிருந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றினால் மட்டுமே அமிதாப்பச்சன் அந்த படத்தில் நடிப்பார்.
அந்த வகையில் நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதற்கு முன்பு அவருடைய குழுவினர் முதலில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து, அங்கே லைட்டிங் மற்றும் இதர அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்வார்கள். மேலும் அமிதாப்பச்சனிடம் ஏற்கனவே கொடுத்த டயலாக் மற்றும் அன்று படமாக்கப்பட இருக்கும் டயலாக்கும் சரியாக இருக்கிறதா என அந்த குழுவினர் செக் செய்பவர்கள்..
அமிதாப்பச்சன் நடிக்க இருக்கும் இடத்தில் வேறு ஒருவரை வைத்து லைட்டிங் என அனைத்தும் சரியாக இருக்கிறதா என ஒரு தடவை ரிகர்சல் பார்ப்பார்கள், காரணம் அமிதாப்பச்சன் வந்து பின்புன் லைட்டை அட்ஜஸ்ட் செய்யும் வேலை இருக்கக் கூடாது என்பதற்காக தான் அதற்கு முன்பு இந்த ரிகர்சல் பார்க்கப்படுகிறது.
இப்படி அனைத்தும் சரியாக இருந்த பின்பு அங்கிருந்து வாக்கி டாக்கி மூலம் அமிதாப்பச்னுக்கு அந்த குழுவினர் தகவல் அனுப்பிய பின்பு, உடனே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் அமிதாப்பச்சன், ஒரே ஷாட்டில் தன்னுடைய காட்சியில் நடித்து முடித்துவிட்டு. மீண்டும் தன்னுடைய இடத்திற்கு சென்று விடுவார். அவர் நடிக்கும் காட்சிகள் ஒரே ஷாட் தான், மீண்டும் ரிப்பீட் இருக்க கூடாது என்பது கட்டுப்பாடுகளில் ஓன்று.
ஆனால் இந்த கட்டுப்பாடுகளில் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்பட்டால் அமிதாபச்சன் அந்த உடன் இருக்கும் குழுவினர் கடும் டென்ஷனாகி விடுவார்கள். இது ஏற்கனவே அமிதாப்பச்சனை வைத்து உயர்ந்த மனிதன் என்கிற படத்தை நடிகர் மற்றும் இயக்குனர் எஸ் ஜே சூர்யா எடுத்தார். அப்போது முதல் நாள் படப்பிடிப்பில் அமிதாப்பச்சன் கலந்து கொண்ட போது, அமிதாப்பச்சனிடம் ஏற்கனவே சொன்ன டயலாக்கும் அப்போது படப்பிடிப்பு படமாக்கப்பட வேண்டிய டயலாக்கிலும் சில மாற்றங்கள் செய்துள்ளார்கள்.
இருந்தும் அமிதாப்பச்சன் பரவாயில்லை என நடித்து கொடுத்துவிட்டு சென்றுள்ளார், மறுநாளும் இதே பிரச்சனை வரும் பொழுது, இரண்டாம் நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் புறப்பட்டு சென்றுவிட்டார் அமிதாப்பச்சன். மேலும் அமிதாப் பச்சன் உடம்பை வாட்டி கொண்டு நடிக்க மாட்டார் என்றும், பெரும்பாலும் கிரீன் மேட்டில் தான் நடிப்பார். அதுவும் அவருடைய காட்சிகள் மும்பையில் மட்டுமே படமாக்கப்பட வேண்டும்.
இப்படி அமிதாப்பச்சன் தரப்பில் இருந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்க காரணம், அவருடைய வயது மற்றும் உடல்நிலை தான் என்றும், இதற்கு முன்பு இது போன்ற கட்டுப்பாடுகள் அமிதாப்பச்சன் தரப்பில் இருந்து விதிக்கப்படவில்லை. இவ்வளவு கட்டுப்பாடுகளையும் ஒப்பு கொண்டு அமிதாப்பச்சன் தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என ரஜினி பிடிவாதமாக இருப்பதற்க்கான பின்னனி காரணம் என்ன என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
தற்பொழுது விஜய் நடித்துவரும் லியோ படத்தின் வியாபாரம் இது வரை தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கும் நடக்காத அளவுக்கு நடந்து வருகிறது. அதேபோன்று கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் வசூல் இன்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் வசூல் ரீதியாக விஜய், கமலுக்கு அடுத்தபடியாக ரஜினி இருந்து வருகிறார்.
அந்த வகையில் கமல், மற்றும் விஜய் இருவரையும் வசூலில் வீழ்த்துவதற்காக தான் அமிதாப்பச்சனை தன்னுடைய படத்தின் உள்ளே கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளார் ரஜினி. அமிதாப்பச்சன் உள்ளே வரும்போது அந்த படத்தின் இந்திய அளவிலான வியாபாரம் படு ஜோராக வசூலை வாரி அள்ளி குவிக்கும், அந்த வகையில் லியோ மற்றும் இதற்கு முன்பு கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதால் தன்னுடைய அமிதாப்பச்சனை தன்னுடைய படத்தின் உள்ளே வருவதற்கு ரஜினி பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.