நடிகர் ரஜினிகாந்த மூத்த மகள் ஐஸ்வர்யா அவருடைய கணவர் தனுஷை விவாகரத்து செய்த பின்பு, மீண்டும் இயக்குனராக களம் இறங்க முடிவு செய்து, புதிய படத்திற்கான கதையை தயார் செய்து, அந்த படத்திற்கான தயாரிப்பாளரை தேடி பல தயாரிப்பு நிறுவனத்தை அணுகியுள்ளார். ஆனால் ஏற்கனவே ஐஸ்வர்யா இயக்கிய இரண்டு படங்களும் தோல்வியை தழுவியதை தொடர்ந்து மீண்டும் ஐஸ்வர்யா இயக்கும் படத்தை தயாரிக்க யாரும் முன் வரவில்லை.
மேலும் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் முன்னணி நடிகர்கள் கமிட்டானால், போட்டி போட்டு கொண்டு இந்த படத்தை தயாரிக்க பல நிறுவனங்கள் முன் வரும், ஆனால் ஐஸ்வர்யாவிடம் கதை கேட்க கூட எந்த ஒரு முன்னணி நடிகரும் தயாராக இல்லை. இப்படி ஒரு சூழலில் தற்பொழுது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு அடுத்து அவரை வைத்து படம் இயக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருந்தது.
அதில் லைக்கா நிறுவனமும் முயற்சித்து வந்த நிலையில், ஏற்கனவே கதையை வைத்து கொண்டு தயாரிப்பாளர் கிடைக்காமல் அழைந்து கொண்டிருந்த ஐஸ்வர்யா, லைக்கா நிறுவனத்திடம் தன்னுடைய தந்தை படத்தை தயாரிக்க உங்களுக்கு கால்ஷீட் வாங்கித் தருகிறேன். ஆனால் அதற்காக தான் இயக்கும் படத்தையும் நீங்கள் தயாரிக்க வேண்டும். இந்த டீல் ஓகே என்றால் என்னுடைய தந்தையை உங்களுடைய தயாரிப்பில் நடிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு என்று ஐஸ்வர்யா டீல் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த டீலுக்கு லைக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு லைக்கா நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. அதே போன்று சொன்ன டீல் படி ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்தாலும் சிறிது தயக்கம் காட்டிய போது, தந்தை ரஜினியிடம் பேசி தன்னுடைய படத்தில் கெஸ்ட் ரோல் நடிக்க சம்மதம் வாக்கியுள்ளார் ஐஸ்வர்யா.
இதன் பின்பு மிக்க மகிழ்ச்சியில் ரஜினி சார் கெஸ்ட் ரோல்ல நடிக்கிறார் என ஐஸ்வர்யா படத்தை தயாரிக்க முன் வந்தது லைக்கா நிறுவனம் என கூறப்டுகிறது. மேலும் ஐஸ்வர்யா இயக்கும் படத்திற்கு ரஜினிகாந்த்தினால் விளம்பரமும் கிடைத்தது. இருந்தாலும் படம் தொடங்கியதில் இருந்தே பல சொதப்பல்களை செய்து வருகிறாராம் ஐஸ்வர்யா.
படம் குறித்த டிஸ்கேஷன் நடக்கும் பொழுது, ஐஸ்வர்யா ஏற்கனவே 10 வெற்றி படம் கொடுத்து பல விருதுகளை அள்ளி குவித்துள்ளது போன்று, பல முன்னனி நடிகர்கள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு காத்திருப்பது போன்று ஆணவத்தில் நடந்து கொள்வதால், ரஜினிகாந்த் மகள் என்கிற மரியாதைக்கு தான் இந்த படத்தில் காமிட்டானோம்,ஆரம்பத்திலே ஒவ்வொருவராக லால் சலாம் படத்தில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறினார்கள்.
அந்த வகையில் படம் தொடங்குவதர்க்கு முன்பே அந்த படத்தில் இருந்து காஸ்ட்யூம் டிசைனர் வெளியேறியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரிடம் மரியாதை இல்லாமல் ஐஸ்வர்யா நடந்து கொள்வதால் விஷ்ணு விஷாலும் லால் சலாம் படத்தில் இருந்து வெளியேறும் முடிவில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பின்பு விஷ்ணு விஷால் சமாதனம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் லால் சலாம் ஷூட்டிங்காக ரஜினி மும்பை சென்றுள்ளார். அங்கு அவர் மூன்று நாட்கள் மட்டுமே ஷூட்டிங் சென்றவர் மற்ற நேரம் சும்மாவே இருந்துள்ளாராம். இதற்கு முக்கிய காரணம் ஐஸ்வர்யாவின் குளறுபடி தான் என கூறப்படுகிறது. சரியான திட்டமிடல் இல்லாமல் இது போன்று பல குளறுபடியை ஏற்படுத்தி வருகிறாராம் ஐஸ்வர்யா.
இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் நம்மை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பளர்கள், கால் சீட் கொடுக்கும் நடிகர்களிடம் திட்டமிடாமல் வேலை செய்தால், தயாரிப்பாளருக்கும் வீண் செலவு, கால் சீட் கொடுக்கும் நடிகர்களின் கால் சீட்டும் வேஸ்ட் என ஐஸ்வர்யாவிடம் கரராக பேசிவிட்டு மும்பையில் இருந்து திரும்பி சென்னை வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.