அசைவம் சாப்பிடுவது தவறா? ரஜினிகாந்த் சர்ச்சை பேச்சுக்கு மருத்துவர்கள் விளக்கம்..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், எனக்கு 73 வயது ஆகினாலும் நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் எனது மனைவிதான். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பாஸ் கண்டக்டராக இருக்கும்போது தவறான நண்பர்களின் சகவாசத்தால் பல கெட்டபழக்கம் எனக்கு வந்தது. கண்டக்டராக வேலைபார்த்த போது தினமும் இருவேளை அசைவம் அதுவும் மட்டன் தான் சாப்பிடுவேன்..

தினமும் மது குடிப்பேன், சிகரெட் எத்தனை பாக்கெட் என கணக்கில்லாமல் எத்தனை புகைப்பேன், கண்டக்டராக வேலைபார்த்தபோதே அப்படியென்றால், பணம், புகழ் வரும்போது எப்படி என்று நீங்களே நினைத்து பாருங்கள். காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65. தான் சாப்பிடுவேன். அப்போதெல்லாம் சைவம் சாப்பிடுகிறவர்களை பார்த்தால் எனக்கு பாவமாக தெரியும். எப்படி சைவத்தை இவர்கள் சாப்பிடுவார்கள் என நினைப்பேன்.

மது, சிகரெட், அசைவம் இந்த மூன்று காம்பினேஷன் மிக மோசம் என தெரிவித்த ரஜினிகாந்த், மது, சிகரெட், அசைவம் மூன்றையும் அளவுக்கு மீறி தொடர்ந்து பல வருஷங்கள் எடுத்துக்கொண்டவர்கள் எனக்கு தெரிந்து 60 வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்ந்தது இல்லை என பேசிய ரஜினிகாந்த், இதற்கு நிறைய பேரை என்னால் உதாரணம் சொல்ல முடியும்.

இது போன்று தவறான பழக்கம் கொண்ட என்னை என்னை அன்பால் திருத்தியவர் எனது மனைவி லதா. என்னை ஒழுக்கமிக்கவனாக மாற்றி, என்னை வாழவைத்தவர் அவர்தான்.என ரஜினிகாந்த் பேசியிருந்தார். மாமிசம் சாப்பிடுவது ஒழுக்கமற்ற செயலென்று ரஜினி எப்படி சொல்லலாம் என அசைவ பிரியர்கள் ஒரு பக்கம் ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள், மேலும் அசைவம் சாப்பிட்டால் நீண்ட நாள் வாழ முடியாதா என்கிற கேள்விகளுக்கு மருத்துவர்கள் தரப்பில் சில விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

சில முன்னுதாரங்களுடன் மருத்துவர்கள் தரப்பில் இருந்து கொடுத்துள்ள விளக்கத்தில், மது அருந்திவிட்டு கீரை வகைகளை சாப்பிட கூடாது அதிலும் ஆல்கஹால் அருந்திவிட்டு அகத்தி கீரை சாப்பிடவே கூடாது என அப்படி நீங்கள் மது அருந்தி விட்டு அகத்திக்கீரை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும். அதே போன்று வேர்க்கடலை மற்றும் வறுத்த முந்திரி பருப்பு வகைகளை ஆல்கஹால் உடன் சேர்த்து சாப்பிட கூடாது. இதில் அதிக அளவில கொலஸ்ட்ரால் இருப்பதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அந்த வகையில் சிலர் மது அருந்தும் பொழுது அளவுக்கு அதிகமாக இறைச்சி வகைகளை சாப்பிடுவார்கள். இப்படி நீங்கள் சாப்பிடும் பொழுது அது செரிமான பிரச்சனைங்களை அதிகமாகி விரைவில் செரிமானம் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் உங்களுக்கு ஏற்படும். மேலும் சரக்கடிக்கும் பலரும் முட்டை, இறைச்சி உணவு வகைகளில் அதிக அளவு காரத்தை சேர்த்து சாப்பிடுவார்கள். சிலர் காரமான மிளகாயை கூட சேர்த்து கடித்து சுவைப்பார்கள்.

இப்படி நீங்கள் செய்வது மிகவேகமாக செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அந்த வகையில் மது, புகையிலை, மாமிசம் முனையும் ஒருசேர தொடர்ந்து அளவுக்கு அதிகமா எடுத்துக்கிட்டா கெடுதல் என்று தான் ரஜினிகாந்த் பேசியுள்ளார்,அவர் பேசியது உண்மை தான் என மருத்துவர்கள் தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் ரஜினி அசைவம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு என்றும், அசைவம் சாப்பிடுவார்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்று தெரிவிக்கவில்லை. மது, புகையிலை, மாமிசம் முனையும் ஒருசேர தொடர்ந்து அளவுக்கு அதிகமா எடுத்துக்கிட்டா கெடுதல் என்று தான் ரஜினிகாந்த் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.