ஆரம்பத்திலே ரஜினியை நம்பாதே சொன்னோம்.. இப்ப நடுதெருவில் நிற்கும் முக்கிய சினிமா பிரபலம்..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நம்ப வைத்து பல சினிமா முக்கிய புள்ளிகளுக்கு கல்தா கொடுப்பதில் வல்லவர் என ஏற்கனவே சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது அதே செயலை ரஜினிகாந்த் மீண்டும் அரங்கேற்றியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்தே, இந்த படம் வியாபார ரீதியில் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த லாபத்தை பெற்று தரவில்லை.

இதனால் அதே தயாரிப்பாளருக்கு ஒரு படம் நடித்து தர கால் சீட் தருவதாக ஒப்புக்கொண்டார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் அண்ணாத்தே படத்திற்கு பின்பு ரஜினி புதிய படத்தை இயக்குவதற்கு பல இயக்குனர்கள் கதை சொல்லி காத்திருந்தனர்.

அந்த வகையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்த ரஜினிகாந்த், மீண்டும் அண்ணாத்தே படத்தை முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து படம் நடிக்க அவரிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் மற்ற முன்னனி நடிகர்களை வைத்து இயக்கம் வாய்ப்பு கிடைத்தாலும், ரஜினி சார் பட வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது என மற்ற வாய்ப்புகளை புறக்கணித்து விட்டார்.

மேலும் ரஜினியின் படத்திற்கான திரைக்கதை மற்றும் ஸ்கிரிப்ட் என அனைத்தும் ஏற்பாடு செய்து அண்ணாத்தே படம் முடிந்தவுடன் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கலாம் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பில் இருந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ், இவரை போன்றே மற்ற இயக்குனர்களான கே எஸ் ரவிக்குமார், பி வாசு சிபி சக்கரவர்த்தி என அனைவரிடம் கதை கேட்ட ரஜினிகாந்த் அனைவருக்கும் கல்தா கொடுத்துவிட்டு இயக்குனர் நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இந்நிலையில் ரஜினியை நம்பி நீண்ட வருடமாக கதையை தயார் செய்து ரஜினியின் வாய்ப்புக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்த இயக்குனர்களில் கே எஸ் ரவிக்குமார் முதண்மையனவர், அதே போன்று சந்திரமுகி பார்ட் 2 படம் எடுக்க நடிகர் ரஜினிகாந்திடம் கதையை தெரிவித்து காத்திருந்து காத்திருந்து ஏமாற்றமடைந்த இயக்குனர் பி. வாசு தற்போது ராகவ லாரன்ஸ் வைத்து சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அண்ணாத்தே படத்தை முடித்துவிட்டு இயக்குனர் சிபி சக்கரவர்த்தியிடம் கதை கேட்டு காக்க வைத்து ஏமாற்றிய ரஜினிகாந்த், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் சிபி சக்கரவர்த்தியை அழைத்து ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு அடுத்த புதிய படத்தில் இணைவோம், படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் மற்ற வேலைகளை செய்யுங்கள் என ரஜினி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் உறுதி செய்ததை தொடர்ந்து இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி புதிய படத்திற்கான திரைக்கதை அமைப்பது மற்றும் ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளை தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் சிபி சக்கரவர்த்திக்கு நெருக்கமான சினிமா துறையைச் சேர்ந்தவர்கள், அவரிடம் ரஜினிகாந்திடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர், இதுபோன்றுதான் கார்த்திக் சுப்புராஜ்யிடம் கதை கேட்டு திரைக்கதை மற்றும் ஸ்கிரிப்ட் வேலையை தொடங்குகள் என தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்,

ரஜினிகாந்தின் பேச்சைக் நம்பி அதற்கான அனைத்து வேலைகளையும் செய்து முடித்து ரஜினிகாந்தின் கால் சீட்டுக்காக காத்திருந்து கடைசியில் கார்த்திக் சுப்புராஜ் ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம், மேலும் ரஜினிகாந்தை நம்பி மற்ற நடிகர்களை வைத்து இயக்கம் வாய்ப்பு வந்தும், அந்த படத்தை தவிர்த்து வந்தார் கார்த்திக் சுப்புராஜ். அது போன்று நீங்கள் ரஜினிகாந்தை முழுவதுமாக நம்பி மற்ற பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தால் இறுதியில் நீங்கள் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என சிபி சக்கரவர்த்தியை அவருக்கும் நெருக்கமான சினிமா துறையினர் ஏற்கனவே எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இருந்தும் ரஜினிகாந்த் புதிய படத்திற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சிபி சக்கரவர்த்திக்கு கல்தா கொடுத்துவிட்டு தற்பொழுது இயக்குனர் பி.வாசுவை அழைத்து கதை கேட்ட ரஜினிகாந்த் அடுத்த படம் சேர்ந்து செய்யலாம், அந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யுங்கள் என தெரிவிக்க, தற்பொழுது பி.வாசு இயக்கி வரும் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்திற்கான முழு ஸ்கிரிப்ட் எழுதுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.