உலகில் மூன்றில் ஒரு பகுதியை ஆண்ட தமிழ் மன்னன் ராஜா ராஜா சோழன், உலகில் முதல் முதலில் முப்படைகளை கட்டியமைத்து எதிரிகளை குலை நடுங்க செய்த்தவர் சோழ மன்னன், கடல் கடந்து இந்தோனீசியா வரை சென்று ஆட்சி புரிந்ததற்காக வரலாற்று சான்றுக்கு ஆதாரமாக, இன்றும் சோழ மன்னனின் கட்டிட கலை கம்பிரமாக இந்தோனீசியாவில் இருப்பதே சாட்சி, சோழ மன்னர்களில் போர் வரலாற்றில் தோல்வி என்பதே கிடையாது.
அதே போன்று கட்டிட கலைகளிலும் கை தேர்ந்தவர்கள் சோழ மன்னர்கள், 1000 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் இன்றும் கம்பிரமாக காட்சியளிப்பது ஒவ்வொரு தமிழனும் தலைநிமிர செய்துள்ளது. தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பு அம்சங்கள் ஒவ்வொன்றும் உலக ஆராய்ச்சியாளர்கள் வியந்து பார்க்கும் வண்ணம் இருக்கிறது. 1000 வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு டெக்னலாஜியும் இல்லாமல் தஞ்சை பெரிய கோவிலை எப்படி ராஜா ராஜா சோழன் காட்டியிருப்பார் என்பது ஆச்சரியப்பட வேண்டிய ஓன்று.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சோழ மன்னர்களின் வரலாற்று கதை களம் கொண்ட, ஒவ்வொரு தமிழனும் பெருமை படும் விதத்தில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் , திரிஷா என பெரிய சினிமா பட்டாளமே நடித்து வருகின்ற்றனர். மிக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் பாகுபாலி போன்று வெற்றியை கொடுக்கும் என படக்குழுவினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழா தஞ்சை பெரிய கோவிலில் நடந்த இயக்குனர் மணிரத்தினம் முடிவு செய்துள்ளார், இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரை அழைத்து வருவதற்காக ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். கமல்ஹாசன் வெளியூரில் இருப்பதால் அவர் சென்னை வந்ததும் நேரில் சந்தித்து அழைப்பு விடலாம் என்றும், அதற்கு முன் சென்னையில் உள்ள ரஜினியை நேரில் சந்தித்துள்ளார் மணிரத்தினம்.
தஞ்சையில் உள்ள பெரிய கோவிலில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை வெளியிட இருப்பதாக அதற்காக தாங்கள் கலந்து கொள்ள வேண்டும் என மணிரத்தினம் அழைப்பு விடுத்துள்ளார். விரைவில் பதில் சொல்கிறேன் என ரஜினி பதில் அளித்துள்ளார். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் டீசர் வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்கிற தகவல் மணிரத்தினத்துக்கு சென்றுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது.
தஞ்சை பெரிய கோவில் பற்றி கடந்த 50 ஆண்டுகளாக ஒரு தவறான தகவல் ஓன்று பரவி வருகிறது. அதாவது தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வந்த அமைச்சர்கள் பதவிகள் இதற்கு முன்பு பறி போனதும் என்றும், இதனால் தான் தஞ்சை பெரிய கோவில் முன் வாசல் வழியாக செல்லாமல் பின்வாசல் வழியாக ஒருமுறை முதல்வராக இருந்த கருணாநிதி சென்றுள்ளார் என்கிற தகவலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் பல முக்கிய பிரமுகர்கள் தஞ்சை கோவிலுக்கு வருவதர்க்கு தயங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் மிக பெரிய சிக்கலை சந்திக்க வேண்டும் என குடும்பத்தினர் அறிவுறுத்தல் படி தஞ்சை பெரிய கோவிலில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்வதில்லை என ரஜினிகாந்த் புறக்கணித்ததாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளும் வகையில், மணிரத்தினம் தற்பொழுது தன்னுடைய முடிவில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
அதாவது தஞ்சையில் நிகழ்ச்சி நடைபெற்றால் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவதால், சென்னையில் இந்த நிகழ்ச்சியை நடந்த இயக்குனர் மணிரத்தினம் முடிவு செய்துள்ளார், இந்நிலையில் சென்னையில் நடைபெறும் பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழாவில்ரஜினி, கமல் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது,
ஆனால் தஞ்சை பெரிய கோவில் பற்றி தவறான தகவல் பரவி கிடப்பதை உடைத்து இது போன்ற தகவல்களில் உண்மையில்லை என்பதை உலகுக்கு உணர்த்துவது ஒவ்வொரு தமிழனுக்கும் விடுக்கப்பட்ட சவால் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.