ரஜினிகாந்த் கட்ட இருக்கும் பிரமாண்ட மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சையா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஸ்பீடான டயலாக் டெலிவரி, மாஸ் காட்டும் ஸ்டைல் என இந்த வயதிலும் சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கிறார். பொதுவாகவே சினிமா நடிகர்கள் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பணத்தை வெவ்வேறு பிசினஸ்களில் முதலீடு செய்து சம்பாதிப்பது வழக்கமான ஒன்றுதான்.

அதேபோல ரஜினிகாந்த் சினிமா தவிர்த்து நிறைய பிசினஸ் செய்து வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் சென்னை அருகில் 12 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாகவும் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி பத்திரப்பதிவு நடைமுறைகள் முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த 12 ஏக்கர் நிலத்தை ரஜினி வாங்கியதற்கு காரணம் என்ன, அங்கு என்ன தொழில் நடத்தப் போகிறார் என்பது பற்றிய செய்திகளும் பரவி வருகிறது. அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலை வாரி குவித்தது. நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினிகாந்த் 80 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக சொல்லப்படுகிறது. அனிருத்தின் அனல் தெறிக்கும் பிஜிஎம்மில் ரஜினி நடந்து வரும் ஒவ்வொரு காட்சிகளும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் கூஸ்பம்ப்பாக இருந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினிக்கு ஒரு சிறந்த படமாகவும் ஜெயிலர் அமைந்தது.

ஜெய்லர் படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை தொடர்ந்து, ரஜினி அடுத்தடுத்த படத்தில் உற்சாகத்துடன் நடிக்க தொடங்கி விட்டார். இவர் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பு வழித்து வருகிறது.

வேட்டையான் வருகின்ற மே அல்லது ஜூனில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வரும் ரஜினிகாந்த், திடீரென ஓஎம்ஆர் சாலையில் தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாகவும், அந்த இடத்தில் மருத்துவமனை ஒன்றை கட்டப் போவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இதற்கான பத்திரப்பதிவு திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்ததாகவும், ரஜினி வருவதை அறிந்த ரசிகர்கள் அந்தப் பகுதியில் திரண்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ரஜினி வாங்கிய நிலத்தில் மருத்துவமனை கட்ட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இந்த மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவசமாகவும் பணக்காரர்களிடம் கட்டணம் வசூலித்தும் சிகிச்சை அளிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

ரஜினி கட்டும் மருத்துவமனையை அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் நிர்வகிக்க போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இதுவரை இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், வெகு விரைவில் ரஜினிகாந்த் கட்ட இருக்கும் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுமா, அல்லது அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையா.? என்பது குறித்த உண்மை என்ன என்பது, ரஜினிகாந்த் கட்ட இருக்கும் மருத்துவமனை திறப்பு விழாவின் போது தான் தெரியவரும்.