என் தலைவரையே கொச்சை படுத்துறியா.. ஆர்.ஜே.பாலாஜியை வெளுத்து வாங்கிய ரஜினி ரசிகர்கள்..

0
Follow on Google News

சென்னை : பிரபலமாக வேண்டுமெனில் பிரபலமானவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை கூறினால் பிரபலமாகலாம் என்ற மோசமான சூழல் தமிழகத்தில் நிலவிவருவது கவலையளிப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஒரு தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஆர்.ஜெ பாலாஜி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி விமர்சித்திருந்தார். அது தற்போது ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மன்னன் மற்றும் படையப்பா படங்களில் பெண்களை மோசமாக சித்தரித்திருக்கிறார் என கூறியுள்ளார்.

அதையடுத்து ஆத்திரமடைந்த ரசிகர்கள் நீ மட்டும் ஒழுங்கா. முதலில் நீ நடிக்கும் படங்களில் உனக்கு இணையாக கதாநாயகிக்கும் சம்பளத்தை பெற்றுக்கொடு. அப்புறம் ரஜினி பற்றி பேசு என ஒருவர் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். இன்னொருவர் நீங்கள் நடித்து வெளிவந்த எல்.கே.ஜி திரைப்படத்தில் ப்ரியா ஆனந்த் கதாபாத்திரத்தை எப்படி சித்தரித்திருக்கிறீர்கள்.

அதில் வரும் திமிரு காட்டாதடி என்ற பாடலை எதற்கு வைத்தீர்கள். பெண்களை ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடிக்கவவைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் மன்னன் படத்தில் விஜயசாந்தி ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரஜினியை அடிப்பதுபோல கூட காட்சி இருந்தது. அதேபோல படையப்பா படம் என சொன்னால் ரம்யா கிருஷ்ணன் தான் நினைவுக்கு வருவார்.

இதேபோல எத்தனை படங்கள் பெண்களை உயர்த்தி எடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். நீ பிரபலமாக எங்கள் தலைவரை கொசைப்படுத்துவது நன்றாக இல்லை. உன் உயரம் என்ன எங்கள் தலைவர் தகுதி என்ன என்பதை நினைத்துப்பார் என ஆர்.ஜெ.பாலாஜிக்கு தரமான பதிலடியை ரஜினி ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

டென்ஷனான கமல்ஹாசன்… மன்னிப்பு கேட்ட கவுண்டமணி..! பொது இடத்தில் இருவருக்கும் நடந்த மோதல் தெரியுமா.?