இந்த வயசிலும் பல பேர் வாழ்க்கையில் சடுகுடு விளையாடும் ரஜினி… ஒரு பெரிய மனுஷன் இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தின் போதே ரஜினியை வைத்து சந்திரமுகி 2 படத்தை இயக்க ரஜினியின் பதிலுக்காக காத்திருந்தார் பி.வாசு, தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமான ரஜினிகாந்த், அடுத்த படத்தின் நமக்கு வாய்ப்பு கொடுப்பர் என தொடர்ந்து நம்பிக்கையுடன் காத்திருந்த இயக்குனர் பி.வாசுவுக்கு ஒவ்வொரு தடவையும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்தே.

இந்த படத்திற்கு பின்பு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் பட்டியலில் பி.வாசு பெயரும் பரிசீலனையில் இருந்துள்ளது. இதனால் நீண்ட நாள் காத்திருப்புக்கு பலனாக நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்து வந்துள்ளார் பி.வாசு, ஆனால் வழக்கம் போல் இம்முறையும் ஏமாற்றிவிட்டார் ரஜினிகாந்த்.

இதே போன்று நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா படத்துக்கும் பின்பு சுமார் கடந்த எட்டு வருடமாக தமிழில் எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்து வந்த கே.எஸ்.ரவிக்குமார், மீண்டும் ரஜினியை வைத்து படம் இயக்க ரஜினியை சந்தித்து கதை சொல்லியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்தே படத்திற்க்கு பின்பு அடுத்த படத்திற்கு கே.எஸ்.ரவிகுமரிடமும் கதை கேட்டுள்ளார் ரஜினி.

இந்த முறை எப்படியும் மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைத்து விடலாம் என்கிற எதிர்பார்ப்பில் இருந்து வந்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார், மேலும் ரஜினி குடும்ப உறுப்பினர்களிடம் தனது கதையை ரஜினியை ஓகே சொல்லி கே.எஸ் ரவிக்குமார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்த புதிய படத்துக்கு நெல்சனை ஓகே சொல்லி வழக்கம் போல் கே.எஸ்.ரவிக்குமாரை ஏமாற்றி விட்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் கடந்த எட்டு வருடமாக தமிழில் எந்த ஒரு படமும் இயக்காமல் ரஜினியை நம்பி சினிமா வாழ்க்கையை இழந்து நடு ரோட்டில் ரஜினியின் வாய்ப்புக்கு நிற்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.

இப்படி பெரிய இயக்குனர்களை ஏமாற்றியது மட்டுமில்லலாம், தற்பொழுது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு இயக்குனர் சிபி சக்கரவர்த்தியில் இயக்கத்தில் அடுத்த படம் நடிப்பதற்காக முழு கதைகளையும் கேட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்பது கதை கேட்கும்போதே ரஜினியிடம் தெரிவித்துள்ளார் சிபி சக்கரவர்த்தி.

இன்றைய இளம் தலைமுறையினர் ஆக்சன் படத்தை மட்டுமே விரும்புகிறார்கள், என்னுடைய நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்தே திரைப்படம் நன்றாக இருந்தாலும், குடும்ப செண்டிமெண்ட்டுகள் இந்த இளம் தலைமுறைகள் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது, இந்த கதையையும் திரைக்கதையையும் டெவலப் செய்யுங்கள் என ரஜினிகாந்த, சிபி சக்கரவர்த்திக்கு வலியுறுத்தி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து மிக தீவிரமாக இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகளில் இறங்கினார் சிபி சக்கரவர்த்தி, சுமார் மூன்று மாதம் மிக கடுமையாக உழைத்து, ரஜினி நடித்துவரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனே இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என திட்டமிடலுடன் காத்திருந்துள்ளார் சிபி சக்கரவர்த்தி. ஆனால் ரஜினிகாந்த் தற்பொழுது ஜெயிலர் படமும் ஆக்சன் படம் என்பதால், ஆக்சன் காட்சிகளில் அவரது உடல் ஒத்துழைப்பு தரவில்லை.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஆக்சன் படத்தில் நடிப்பது மிக சிரமம் என முடிவு செய்த ரஜினிகாந்த், அடுத்த தன்னுடைய படம் ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட்டாக இருக்க வேண்டும் என சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினிகாந்த்,புதிய படத்தை ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட்டாக மாற்றுங்கள் என தெரிவித்துள்ளார். அதற்கு சிபி சக்கரவர்த்தி, சார் ஒரு அனைத்து பணிகளையும் நான் முடித்து படபிடிப்பு தயாராக இருக்கும், இந்த கட்டத்தில் எப்படி என்னால் இதை ஃபேமிலி சப்ஜெக்ட்டாக மாற்ற முடியும் என சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆனால் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இதனால் தற்பொழுது ரஜினி படத்திலிருந்து சிபி சக்கரவர்த்தி விளக்கியுள்ளார். இதனால் சிபி சக்கரவர்த்தியை சுமார் மூன்று மாதம் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் ரஜினிகாந்த் என கூறப்படுகிறது ,இப்படி பல இயக்குனர்கள் வாழ்க்கையில் சடுகுடு விளையாடி வரும் ரஜினிகாந்த், இந்த வயதிலும் தன்னுடைய நேர்மையை கடைபிடிக்கலாமே என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.