சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு நாளை ஜெயிலர் படம் வெளியாக உள்ளது இந்தப் படத்திற்கு எந்த அளவு எதிர்பார்த்து உள்ளதோ அந்த அளவிற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பும் தருகின்றனர். ஏனெனில் யார் சூப்பர் ஸ்டார் என்பதற்கான சண்டை ஒன்று போய்க் கொண்டுள்ளது. விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று அவரின் ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகின்றன. மறுபக்கம் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தான் அது ரஜினிகாந்த் தான் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கூறி வருகின்றன.
இவர்களை எல்லோரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், ரஜினிகாந்த் இமயமலை செல்லப் போகிறார் என்ற தகவல் வெளியானது. இதற்கு பலரும் ரஜினிகாந்த் பயந்துவிட்டார், ஜெயிலர் படம் நன்றாக போகாது என்று முன்னரே அவருக்கு தோன்றி விட்டது அதனால் தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இமயமலை செல்ல முடிவெடுத்துள்ளார் என்றெல்லாம் கூறி வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். 2010 ஆம் ஆண்டு வரை அவர்க்கு எந்த ஒரு படம் ரிலீஸ் ஆனாலும் அப்போது அவர் இமயமலைக்கு செல்வது அவரின் பழக்கமாக தொடர்ந்து வந்திருந்தது. ஆனால் கடந்த இரு வருடமாக அவர் இமயமலை செல்லவே இல்லை காரணம் அவரின் உடலில் ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக மருத்துவர்கள் நீண்ட பயணம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் திடீரென இமயமலை சென்றதால் அதற்கு பல்வேறு காரணங்கள் எழுந்துள்ளது. தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வி ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலியை ஆட்டம் காண வைத்திருப்பதாக பலர் கூறுகின்றனர். அதேசமயம் விஜய்யின் படங்கள் அதிக கோடி வசூலிப்பதால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சையும் ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் தான் ரஜினி நொந்து போய் இமயமலை சென்றுள்ளார் என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் இமயமலை செல்வதற்கு முன்பு செய்தியாளர்களை கண்ட ரஜினி, இமயமலைக்கு சென்றுகொண்டிருக்கிறேன். கொரோனாலாம் வந்ததால் நான்கு வருடங்களாக அங்கு செல்ல முடியவில்லை. நான்கு வருடங்களுக்கு பிறகு இப்போது செல்கிறேன். ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
ஜெயிலர் படத்தின் ரிலீஸை திருவிழா போல் கொண்டாட தயாராகியிருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.அதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் மிகத்தீவிரமாக செய்துவருகின்றனர். நாளை தலைவர் தரிசனத்தை பார்த்துவிட்டு அவர் மட்டும்தான் ஒரே சூப்பர் ஸ்டார் என நாங்கள் பேசுவோம். அந்த அளவுக்கு படம் இருக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் தங்களது மனதுக்குள் விதைத்திருக்கின்றனர்.
படத்துக்கான டிக்கெட் புக்கிங் மாஸாக நடந்துவருகிறது. தமிழ்நாட்டில் ஏகப்பட்ட திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் டிக்கெட் புக்கிங்கில் ஜெயிலர் சாதனை படைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பெங்களூரில் ப்ரீ புக்கிங்கில் கேஜிஎஃப் 2 சாதனையை ஜெயிலர் முறியடித்துவிட்டதாக பேச்சு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெயிலர் படம் வெளியாக இருக்கும் இந்த சூழலில் படம் வெளியாகட்டும் வெச்சு செய்யுறோம், ஆடியோ வெளியிட்டு விழாவில் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க என விஜய் ரசிகர்கள் வெறி கொண்டு காத்து கொண்டிருக்கையில், ஆடியோ வெளியிட்டு விழாவில் ரசிகர்களுக்கு இடையில் சண்டையை ஏற்ப்படுத்தும் விதத்தில் கொளுத்தி போட்டுவிட்டு அமைதியை தேடி இமயமலை சென்று விட்டார் ரஜினிகாந்த் என்கிறது சினிமா வட்டாரங்கள்..