கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த ரஜினிகாந்த்.. யாருடன் தெரியுமா.? இந்த வயதிலும் என்ன வேகம்..

0
Follow on Google News

சென்னை : வருடத்திற்கு ஒருமுறை இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போதெல்லாம் ஆன்மீகம் பேச இசைஞானி இளையராஜாவை தேடி செல்கிறார். அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்துவிட்டு கடந்த தேர்தலையொட்டி வரப்போவதில்லை என அறிவித்தார் ரஜினி. அவரின் எண்ண ஓட்டங்களை புரிந்துகொள்ள முடியாமல் ரசிகர்கள் குழம்பியிருந்த நிலையில் இனி வருடம் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரஜினி முடிவெடுத்துள்ளார்.

டாக்டர் எனும் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பீஸ்ட் எனும் திரைப்படத்தை நெல்சன் இயக்கினார். அந்த திரைப்படம் வெளியாகுமுன்னரே நெல்சன் படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் ஒப்பந்தமானார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. பீஸ்ட் திரைப்பட தோல்வியால் நெல்சனின் படத்தில் நடிக்கமாட்டார் என கருதப்பட்ட நிலையில் தலைவர் 69 திரைப்படம் உறுதியாகியுள்ளது.

மேலும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் பிரிவு ரஜினியை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வயது மூப்பின் காரணமாக இமயமலைக்கு ஆன்மீக பயணமும் மேற்கொள்ள முடியவில்லை என்பதால் மிகவும் ரஜினி சோர்வடைந்துள்ளார் என கருதப்படுகிறது.

இதனிடையே ஆன்மீகத்திற்க்காகவும் மன நிம்மதிக்காகவும் இசைஞானி இளையராஜாவை தேடி சூப்பர்ஸ்டார் செல்வதாக கூறப்படுகிறது. மேலும் இசைஞானியுடன் மனம்விட்டு பேசுவதால் தனக்கு நிம்மதியாகஇருப்பதாக கூறி அடிக்கடி தொலைபேசியில் பேசுவதாகவுஎன்ன ம் கூறப்படுகிறது. இந்நிலையில் இசைஞானியை சந்திக்க ரஜினி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் கார்த்திக் ராஜாவின் மகனான யதீஸ்வர் அங்கிள் என்னோட விளையாட வாங்க என அழைத்துள்ளார். இதோ வரேன் கண்ணா என தனது ஸ்டைலில் சொல்லி கிரிக்கெட் விளையாண்டுள்ளார். இதைக்கண்ட இசைஞானி வியந்துபோய் பார்த்துள்ளார். எவ்வளவு பெரிய ஆளுமை மிக சாதாரணமாக நடந்துகொள்வதை நினைத்து இளையராஜா மட்டுமல்லாமல் ரசிகர்களும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

திரிஷா வீட்டுக்கே சென்று கரெட் செய்த கமல்…தப்பித்த சமந்தா.. இந்த வயசிலும் கமல்ஹாசன் என்ன செய்தார் தெரியுமா.?