காக்காவை அடித்து துவம்சம் செய்த கழுகு…. ரஜினி கிட்ட கூட நெருங்க முடியாத விஜய்…

0
Follow on Google News

விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை கொடுத்த கையோடு சூப்பர் ஸ்டாரை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். தலைவரே இந்த நெல்சன் திலீப்குமார் வேண்டாமே, ஆளை மாத்திடலாம் என ரஜினியிடம் சிலர் தெரிவித்தனர். ஆனால் அவரோ நெல்சன் மீது நம்பிக்கை வைத்து அவரை மாற்றவில்லை. ரஜினி தன் மீது நம்பிக்கை வைத்தது வீண் போகவில்லை என்பதை ஜெயிலர் படத்தில் காட்டிவிட்டார் நெல்சன். டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினி நடித்த ஜெயிலர் படம் உலக அளவில் சுமார் ரூ. 620 கோடி வசூல் செய்தது.

மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, சுனில் என மல்டி ஸ்டார்களின் கூட்டணி வியக்க வைத்தது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மேடையில் ரஜினி கூட, ‘காக்கா – கழுகு’ கதையைச் சொல்லி, சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விவாதத்தைக் கிளம்பினார். இதையெல்லாம் தாண்டி, படத்தின் விறுவிறுப்பும், இசையும் படத்தை வேறு கட்டத்திற்கு நகர்த்திச் சென்றதில் சாதனை படைத்தது.

கடந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது ஜெயிலர். அதே சமயம் இந்த ஆண்டு ரிலீஸான இந்திய படங்களில் எந்த படமும் செய்யாத ஒரு சாதனையை செய்திருக்கிறது ஜெயிலர். மேலும் கடந்த ஆண்டு ரிலீஸான இந்திய படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உலக அளவில் தலா ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த ஒரே படம் ஜெயிலர் தான். தமிழ்நாட்டில் மட்டும் அல்ல ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ரஜினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ‘ஜெயிலர் 2’ படம் விரைவில் உருவாகும் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் சிலை கடத்தல் காரர்களிடம் தனது மகன் சிக்கி இருந்த நிலையில் அவரை மீட்டு அதன் பின் மகனையே கொலை செய்வதுடன் படம் முடிந்திருக்கும்.

இந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் சிலை கடத்தல்காரர்களிடம் ரஜினிகாந்த் மோதும் காட்சிகளும் அவர்களை முழுவதுமாக அழிக்கும் கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. மேலும், அதற்கான ஜெயிலர் 2 ஆரம்ப பணிகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மக்கள் மத்தியில் கிடைத்த பேராதரவினால் நெல்சனின் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் என கூறப்பட்டது. நயன்தாரா படம், பிசினஸ், குடும்பம் என படு பிஸியாக இருப்பதால் சில மாதங்களுக்கு பிறகு கோலமாவு கோகிலா தொடங்கப்படும் என கூறப்பட்டது.

தமிழ் சினிமாவில் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற விதமான படத்தை அறிமுகம் செய்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவரை தொடர்ந்து தற்போது நெல்சன் ஜெயிலர் திரைப்படத்தில் கோலமாவு கோகிலா கதாபாத்திரத்தை நுழைத்து தனது சினிமாட்டிக் யுனிவெர்சை உருவாக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து போதைப் பொருட்களை அறவே தகர்த்தெறியும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி. அவருக்கு உதவும் வகையில் கோகிலா எவ்வாறு செயல்படுகிறார் என்பதே ஜெயிலர் 2 படத்தின் கதையாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.

ஜெயிலர் 2 படத்தில் நயன்தாரா முழுநீள கதாநாயகியாக இல்லாமல் ஒரு சிறிய போர்ஷனில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் சந்திரமுகி, குசேலன், சிவாஜி, தர்பார், அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஆறாவது முறையாக ரஜினிகாந்துடன் இணைகிறார் நயன்தாரா. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் வரும் அந்த ட்ரக் சீன் உருவான விதம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அந்த வீடியோவில், நெல்சன் திலீப் குமார், அந்த காட்சியை விளக்கும் நேரத்தில் அதை ஆச்சரியமாக கேட்டு அவரை பாராட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகின்றது. மேலும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக தெலுங்கு திரையுலக நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பிளான் செய்துள்ளாராம் நெல்சன்.