ரஜினி மகளின் பினாமியே நான் தான்… நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..

0
Follow on Google News

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரின் மனைவி தான் ஈஸ்வரி, கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டில் வேலைக்கு சேர்த்துள்ளார், ஈஸ்வரியின் நடவடிக்கைகள் ஐஸ்வர்யாவை மிகவும் கவர்ந்துள்ளதை தொடர்ந்து அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார் ஐஸ்வர்யா, ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யாவின் நம்பிக்கையை பெற்ற ஈஸ்வரி, வீட்டில் உள்ள அணைத்து அறைகளுக்கும் தன்னுடையை சொந்த வீட்டில் நுழையும் அளவுக்கு செல்லும் உரிமையை பெற்றுள்ளார் ஈஸ்வரி.

இதனால் வேலைக்காரி என்பதை தாண்டி நகை வைக்கும் லாக்கர் பெட்டியின் சாவி இருக்கும் இடம் வரை நன்கு அறிந்தவர் ஈஸ்வரி. இந்நிலையில் கடந்த பிப்ரவரி நீண்ட நாட்களுக்கு பிறகு தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை ஐஸ்வர்யா திறந்து பார்த்த போது, அதில் இருந்த நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ரகசியமாக விசாரித்து வந்தார்கள். ஆனால் வீட்டில் இருந்த நகை திருட்டு போனது என்கிற புகார் வந்ததுமே, போலீசாருக்கு ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்யும் ஈஸ்வரி மீது சந்தேகம் வந்துள்ளது. இருந்தும் ஐஸ்வர்யா நகை திருட்டு தொடர்பான வழக்கை வெளியில் சொல்லாமல் ரகசியமாக போலீசார் வைத்திருந்தனர்.

இதில் ஈஸ்வரியின் வங்கி கணக்கை ஆராய்ந்த போது தான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வேலைக்கார பெண் ஈஸ்வரி தான் நகைகளை திருடி சொகுசு பங்களா வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் வேலைக்கார பெண் ஈஸ்வரியும், கார் டிரைவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டார்கள்.

60 பவுன் தங்க, வைர நகைகள் மட்டும் திருட்டு போனதாக புகாரில் கூறி இருந்தாலும், 100 பவுனுக்கு மேல் தங்க நகைகளும், 30 கிராம் வைரமும், 4 கிலோ வெள்ளி பொருட்களும் மற்றும் திருடிய நகைகளை விற்றது தெரியவந்தது. அதில் கிடைத்த பணத்தில் சோழிங்கநல்லூரில் ஈஸ்வரி நிலம் வாங்கி கட்டிய 2 மாடி வீட்டின் பத்திரங்களையும் போலீசார் மீட்டனர். இந்நிலையில் ஈஸ்வரியின் திருட்டு சம்பவத்துக்கு அவரது கணவர் அங்கமுத்து உதவி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் ஈஸ்வரி திருடியது மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது என எதுவும் அங்கமுத்துக்கு தெரியாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது குறித்து ஈஸ்வரி தனது வீட்டில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அதில் சோழிங்கநல்லூரில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில்
பினாமியாக வாங்கியதாக ஈஸ்வரி அவரது கணவரிடம் தெரிவித்தவர்.

மேலும் வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும், உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சொந்தமானது எனவும் கூறி இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டு, நகை திருட்டு சம்பவத்தில் கணவருக்கே விபூதி அடிக்கும் வகையில் ஒரு கதையை குடும்பத்தினர் மத்தியில் அரங்கேற்றியுள்ளார் ஈஸ்வரி என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் தன்னுடைய நகையை வீட்டின் வேலைக்கார பெண் சிறுக சிறுக திருடி சென்னையில் புதியதாக இடம் வாங்கி, அதில் இரண்டு மாடி வீடு கட்டி முடிக்கும் வரை வீட்டில் இருந்த நகைகள் ஒவொன்றாக திருடு போவதை கூட அறியாமல் ஐஸ்வர்யா இருந்து வந்துள்ளதை பார்த்து பரிதாப படுவதா.? அல்லது ஐஸ்வர்யா வீட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத அளவுக்கு பொறுப்பில்லாம் இருக்கிறாரா.? என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.