ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படம் லால் சலாம். இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக கடந்த வாரம் நடைபெற்றிருக்கிறது. விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், காக்கா- கழுகு கதை, விஜய் குறித்த காக்கா- முற்றுப்புள்ளி வைத்திருந்தார். மேலும், இந்த படத்தின் ரிலீஸாக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க குழு சோசியல் மீடியா பதிவுகளை காமிப்பாங்க. அதுல என் காதுல அடிக்கடி ஒரு வார்த்தை விழுகுது. எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. ஒரு அரசியலை சார்ந்தவங்களை சங்கின்னு சொல்லுவாங்கன்னு சொன்னாங்க. அவர் சங்கி இல்ல. ரஜினிகாந்த் சங்கி கிடையாது. இந்தப் படத்தைப் பார்த்தா உங்களுக்கு அது புரியும். இதுக்கு பிறகு இந்த படம் உங்க லிஸ்ட்ல இருக்கும். ஒரு சங்கி இந்தப் படத்தைப் பண்ண முடியாது.
ஒரு மனிதநேயவாதிதான் இந்தப் படத்தை பண்ண முடியும். அந்த தைரியம் அவருக்குமட்டும் தான் இருக்கு. நான் கர்வமாகச் சொல்றேன். யாரும் அதை பண்ணமாட்டாங்க. நீங்க இந்து, கிறிஸ்டியனா இருக்கலாம். ஆனால், ரஜினிகாந்த் ரசிகராகத்தான் இந்த படத்தை பார்ப்பீங்க.” என கூறினார். அவரின் பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஜினிகாந்த்தின் சமீபகால செயல்பாடுகள் காரணமாக, சமூக வலைதளங்களில் அவரைப் பலரும் சங்கி என அழைத்து வந்தனர்.
குறிப்பாக, காலா படத்தில் ஒருவர் இன்னொருவர் காலில் விழுவதை எதிர்த்து நடித்திருக்கும் ரஜினிகாந்த், ஜெயிலர் படம் வெளியான சமயத்தில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததிலிருந்து பரவலாக இவ்வாறு சமூக வலைத்தளங்களில் சில எதிர் கருத்துகளை எதிர்கொண்டார். அதோடு, சமீபத்தில் நடந்த அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 500 ஆண்டுகால பிரச்னை தீர்ந்ததாக ரஜினிகாந்த் கூறியதையும், அவர் நடித்த வள்ளி படத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை பற்றி அவர் கூறிய வசனத்தையும், இணையதளவாசிகள் சமூக வலைத்தளங்களில் ஒன்றாகப் பதிவிட்டு பலர் அவரை சங்கி என விமர்சித்துவந்தனர்.
இது பேசுபொருளான நிலையில், சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா சொல்லவில்லை என ரஜினிகாந்த் விளக்கமளித்திருக்கிறார். ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்தார். விஜயவாடாவுக்கு சென்று அங்கிருந்து ஹைதராபாத்திற்கு படப்பிடிப்பிற்கு செல்ல இருப்பதாக ரஜினிகாந்த் கூறினார்.
லால் சலாம் படம் குறித்து கேட்டதற்கு, “லால் சலாம் படம் நன்றாக வந்திருக்கிறது. மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்” என தெரிவித்தார். அவரது மகள் ஐஸ்வர்யா ‘எனது அப்பா சங்கி அல்ல’ எனக் கூறியது குறித்து கேட்டபோது, “சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கும் கூறப்படவில்லை.