தமிழக மக்களும், தமிழ் திரையுலகமும் தலையில் தூக்கி கொண்டாடி வர கூடியவர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறவ மாட்டேன் ஏற்று பாபா படத்திலும், என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா, என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கு தமிழர்களுக்கு கொடுப்பது முறையல்லவா என படையப்பா படத்திலும் பாடி தமிழர்களை மயக்கிய ரஜினிகாந்த் தற்பொழுது தமிழர்கள் வயிற்றில் அடிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது, அதே போன்று ஹாச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் இடை விடாமல் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படமும் ஆந்திராவில் உள்ள பிரபல சினிமா படப்பிடிப்பு தளமான ராமோஜ் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. இதில் அஜித் படம் ஆந்திராவில் பிரமாண்ட செட் அமைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முன்னனி நடிகர்கள் தமிழ் நாட்டில் படப்பிடிப்பு நடத்தாமல் பிற மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்தி வருவருவது, தமிழகத்தை சேர்ந்த சினிமா தொழிலார்கள் மிக பெரிய பாதிப்பு அடைந்து வருவதாக பெப்சி சங்கத்தின் தலைவர் இயக்குனர் செல்வமணி வருத்தம் தெரிவித்து இருந்தார். மேலும் முன்னணி நடிகர்கள் தமிழகத்தில் படப்பிடிப்பு நடந்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார், இருந்தும் தொடர்ந்து ஆந்திராவில் விஜய் மற்றும் அஜித் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் சன் பிக்ச்சர் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த தயாராகும் புதிய படத்துக்கான செட் அமைக்கும் வேலை விறுவிறுப்பாக ஆந்திராவில் உள்ள ராமோஜ் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. இதற்கான வேலைகளில் ஆந்திராவை சேர்ந்த தொழிலார்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஒரு அதிரடி உத்தரவு ஓன்று சென்றுள்ளது.
அதில் படப்பிடிப்புக்கு எப்போது அழைத்தாலும் உடனே வர வேண்டும், வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாக சாக்கு போக்கு சொல்ல கூடாது என்றும், விரைவில் ஆந்திராவில் உள்ள ராமோஜ் படப்பிடிப்பு தளத்தில் செட் அமைக்கும் பனி முடிந்ததும் தொடர்ந்து 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிட்டிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜ் ஸ்டுடியோவில் நடைபெறுவதால்,
தமிழகத்தை சேர்ந்த சினிமா தொழிலாளர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்றால், தமிழகத்தை சேர்ந்த சினிமா துறையினரில், துணை நடிகர்கள், குருப் டான்சர்ஸ், வாகன உட்டுநர்கள், சமையல் மாஸ்டர்கள் என தமிழகத்தை சேந்தவர்கள் பலன் அடைவார்கள் ஆனால் ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்தினால் தமிழகத்தை சேர்ந்த சினிமா துறையினர் பாதிக்கப்படுவார்கள் என்று அறிந்து கொண்ட ரஜினிகாந்த்,
உப்பிட்ட தமிழ் மண்ணை மறந்து, ஆந்திராவில் உள்ள தொழிலாளர்களை வாழவைப்பதற்கு தமிழகத்தை சேர்ந்த சினிமா தொழிலார்கள் வயிற்றில் அடிப்பது என்பது நன்றி மறந்த செயல் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், விரைவில் நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து தமிழ் சினிமா தொழிலார்களின் சங்கமான பெப்சி உட்பட பல சங்கங்கள் குரல் கொடுக்க இருப்பதாகவும் போராட்டம் கூட நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.