தமிழகத்தில் தற்பொழுது மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, ரஜினி – விஜய் இருவருக்கும் இடையிலான சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த மோதல். நடிகர் விஜய் நேரடியாக அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்று வெளிப்படையாக பேச வில்லை என்றாலும் கூட, விஜயை சுற்றி இருப்பவர்கள் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என கூச்சலிட்டு வருவதற்கு எந்த ஒரு எதிப்பு தெரிவிக்காமல் விஜய் மௌனமாக இருந்து வருவது, விஜயின் அனுமதியுடன் தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று 70 வயதை கடந்தும் மிக பெரிய உச்சத்தில் இருக்கும் ரஜினி, அவரை பார்த்து வளர்ந்த விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடந்து கொண்டது, ரஜினிக்கு வயதுக்கு ஏற்ற பக்குவம் இல்லை என்றும், அந்த வகையில் தமிழக முதல்வர் இதற்கு முன்பு விஜய் விவகாரத்தில் எப்படி கையாண்டார் என்பதை பார்த்து ரஜினி கற்று கொள்ள வேண்டும் என பலர் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
தமிழக அரசியல் களத்தில் தளபதி என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தான், நடிகர் விஜய் சினிமாவில் பிரபலமாக அறியப்படுவதற்கு முன்பே அரசியல் களத்தில் திமுகவினரால் தளபதி என அழைக்கப்பட்டவர் முதல்வராக இருக்கும் மு க ஸ்டாலின். ஆனால் இளைய தளபதியாக இருந்த நடிகர் விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய அடைமொழியை தளபதியாக மாற்றிக் கொண்ட போது திமுகவின் கடும் எதிப்புக்கு விஜய் உள்ளாகுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தரப்பிலிருந்து விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றியிருந்தால் கூட, திமுகவினர் நடிகர் விஜய்க்கு கடுமையான நெருக்கடியை கொடுத்து அந்த தளபதி என்கின்ற பட்டத்தை போட விடாமல் செய்திருக்க முடியும், அந்த வகையில் 1 கோடிக்கு மேல் தொண்டர்கள் பலத்துடன் தமிழகத்தில் அரை நூற்றாண்டு கண்ட கட்சியின் தலைவர் மட்டுமல்லாமல் தற்பொழுது பலம் பொருந்திய ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய நிலையில்.
ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலினை தளபதி என அவர்கள் கட்சியினர் அழைத்து வந்த நிலையில், விஜய் தளபதி என்கிற பட்டத்தை சேர்த்து கொண்ட போது, அந்த விஷயத்தை கண்டும் காணாமல் பெருத்தனமையாக விட்டுச் சென்று விட்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின்,அந்த அரசியல் பக்குவம் தான் இன்று அவரை தளபதி என்று அழைத்த அவர்களுடைய தொடர்களை தலைவர் என்று அழைக்க வைத்துள்ளது.
ஆனால் அந்தப் பெருந்தன்மை ஏன் நடிகர் ரஜினிக்கு இல்லை என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது, உனக்கு என்ன.? சூப்பர் ஸ்டார் பட்டம் தான எடுத்தா எடுத்துக்கோ என்று பெருந்தன்மையுடன் இந்த விவகாரத்தை ரஜினி கையாண்டிருக்க வேண்டும். அப்படி கையாண்டு இருந்தால், அடிக்கடி அவர் சொல்வது போன்று எனக்கு இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீதெல்லாம் விருப்பம் இல்லை என்று பேசி வருவதர்க்கும் முன்னுதாரணமாக இருந்திருக்கும்.
ஆனால் ஒரு பக்கம் எனக்கு பட்டங்கள் மீது விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டு, தன்னுடைய சினிமா படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் மூலமாகவும், தன்னுடைய படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் பேசும் போதும் நடிகர் விஜய் மறைமுகமாக தாக்கி ரஜினி பேசி உள்ளது இன்னும் ரஜினி பக்குவ பட வேண்டும் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இன்று மூத்த நடிகர்களில் உச்ச நடிகர்களில் முதன்மையானவராக விளங்கக்கூடிய நடிகர் ரஜினிகாந்த், பல விஷயங்களை முதல்வர் மு க ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமும் கூட என அறிவுறுத்தி வருகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.