அசிங்கப்பட்டும் திருந்தாத ரஜினி ரசிகர்கள்… அய்யோ பாவம் … திருந்தவே மாட்டார்களா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வரும் ஜெயிலர் படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் அவருடைய பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற குட்டிச்சுவரை எட்டி பார்த்தால் உசுர குடுக்க கோடி பேரு என்ற வரிகள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் ஏதோ வேல வெட்டி இல்லாமல் குட்டி சுவறில் உட்கார்ந்து காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பது போன்றும்.

அவர்கள் ரஜினிக்காக உயிரை கூட கொடுக்க தயாராக இருப்பது போன்ற அர்த்தத்தில் அந்த பாடலில் இடம் பெற்ற வரிகள் ரஜினி தன்னுடைய ரசிகர்களை அவரே தன்னுடைய பாடல் வரிகள் மூலம் அசிங்கப்படுத்தலாமா என்கின்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பாடலாசிரியர் பாடல் வரிகளை எழுதி இருந்தாலும் கூட, ரஜினி தன்னை இந்த அளவுக்கு மிகப்பெரிய உயரத்தில் வைத்த ரசிகர்களை கீழ்த்தரமான இழிவு படுத்து வகையில் இடம் பெற்ற அந்த வரியை நீக்கி இருக்க வேண்டும்.

ஆனால் இதை கண்டுகொள்ளமால் விட்டது ரஜினியின் பெறுப்பின்மையை காட்டுகிறது என என்கின்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய பாடல் வரிகளில் அவருடைய ரசிகர்களை இழிவு படுத்தி இருந்தாலும் கூட, அதற்கும் அவருடைய ரசிகர்கள் வித்தியாசமான முறையில் முட்டுக் கொடுப்பது, ஐயோ இவர்களெல்லாம் எங்கே திருந்த போகிறார் என்கின்ற பரிதாப நிலையும் ஏற்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து அவருடைய ரசிகர்களை பார்ப்பதற்கு அவருடைய வீட்டின் காம்பௌண்ட் சுவரை எட்டிப் பார்த்து கையசைப்பார். அந்த காம்பௌண்ட் குட்டி சுவருக்கு வெளியே இருக்கும் ரசிகர்கள் விசில் அடித்து தலைவா தலைவா என ஆரவாரம் செய்வார்கள் ரசிகர்கள், அதை தான் குட்டிச் சுவரை தலைவர் எட்டிப் பார்த்தால் உசுர குடுக்க கோடி ரசிகர்கள் என்று அந்த பாடல் வழியில் இடம் பெற்றுள்ளது என்று,

தங்களை இழிவு படுத்திய பாடல் வரிகளுக்கு வித்தியசமான முறையில் முட்டுக் கொடுத்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள். இது ஒருபுறம் இருக்க, அந்த பாடலை எழுதிய பாடல் ஆசிரியர் பாடல் வரிகளில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்ற வரிகளுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அளித்த பேட்டியில், தான் குட்டி சுவர் என்று குறிப்பிட்டது சமூக வலைதளத்தை தான் என்றும்.

சமூக தளத்தில் ரஜினிக்கு எதிராக அதிக கருத்துக்கள் பகிரப்படுகிறது, ஆனாலும் அந்த சமூக வலைத்தளத்தை தாண்டி, அதாவது சமூக வலைத்தளம் என்கிற குட்டிச்சுவரை தாண்டி பார்த்தால் உசுர கொடுக்க கோடி ரசிகர்கள் என்கின்ற அர்த்தத்தில் தான் நான் இந்தப் பாடலை எழுதினேன் என்று அப்பாடலை எழுதிய பாடல் ஆசிரியர் விளக்கம் கொடுத்து உள்ளார்.

இந்த நிலையில் புதிதாக பாடல் எழுதிய பாடல் ஆசிரியர்கள் எழுதத் தெரியாமல், ஏதோ ஒரு கோர்வையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு வரியை எழுதிவிட்டு, அவர் கொடுத்து விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. குட்டிச்சுவர் என்று சமூக வலைதளத்தை அந்த பாடல் ஆசிரியர் குறிப்பிட்டு இருந்தால் குட்டி சுவறில் இருந்து எட்டிப் பார்த்தால் உசுர கொடுக்க கோடி ரசிகர்கள் என்று தான் எழுதியிருக்க வேண்டும்.

அதாவது குட்டிச்சுவரில் இருந்து என்கின்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்க வேண்டும் ஆனால் இவர் குறிப்பிட்டது குட்டிச்சுவரை எட்டிப் பார்த்தால் என்று குறிப்பிட்டு இருப்பது குட்டிச்சுவரில் இருப்பவர்களைத்தான் குறிக்கிறது என தெரிவிக்கும் தமிழ் எழுத்தாளர்கள். அந்த வகையில் இந்த பாடல் ஆசிரியர் முதலில் தமிழை நன்கு கற்றுக் கொண்டு விட்டு பிறகு பாடல் எழுத வரட்டும் என்றும் அறிவுரை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.