தொடர்ந்து புதிய படங்களை கேலி கிண்டலுடன் விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் சமீப காலமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவரையும் தாறு மாறாக விமர்சனம் செய்து வருகிறார், இந்த நிலையில் ரஜினிகாந்த் , விஜய் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமைகளை பட்டியலிட்டுள்ளார், அதில் இருவரும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு மோதுவது. அவர் நடித்த படம் தளபதி. இவரது பட்டப்பெயர் தளபதி. முருகதாஸ், நெல்சன், லோகேஷ் படங்களில் நடிப்பது.டோப்பா வைத்து நடிப்பது.
இண்ட்ரோ பாடலில் இளைஞர்களுக்கு பூமர்தனமாக புத்தி சொல்வது. அதே பாடலில் அரசியலுக்கு வரப்போவதாக காமடி செய்வது. ப்ளாக் டிக்கட், கட் அவுட் பாலாபிஷேகம் பற்றி பதில் சொல்லாமல் கள்ள மௌனம் காப்பது. மேடைகளில் க்ரிஞ்சான குட்டிக்கதைகள் சொல்வது. மேடைகளில்..தொகுப்பாளர் ‘அரசியலுக்கு வருவீங்களா?’ என ஸ்க்ரிப்டில் எழுதி வைத்ததை கேட்பது. ‘வருவேன், வரமாட்டேன்’ என பளிச்சென பதில் சொல்லாமல் ஈயம் பூசுவது.
‘சீக்கிரம் அரசியலுக்கு வாங்க. மக்கள் ரொம்ப எதிர்பார்க்கறாங்க சார்’ என அல்லக்கை நடிகர்கள் அல்லது இயக்குனர்களை மேடையில் பேச சொல்வது.ஒரு காலத்தில் இவர்களுக்கு சூப்பர் ஹிட் படங்களை தந்த இயக்குனர்களுக்கு.. தற்போது வாய்ப்பு தராமல் கழட்டி விடுவது.மேடையில் இயல்பாக பேசாமல்.. நான்கு நாட்கள்.. ஸ்க்ரிப்டை மாங்கு மாங்கென்று மனப்பாடம் செய்துவிட்டு வந்து பேசுவது.
எஸ்.ஜே.சூர்யாவை வில்லனாக போட்டால் நம்மை விட பயங்கரமாக ஸ்கோர் செய்து விடுவார். படம் ஓடினால் அவரால்தான் ஓடியது என பேசுவார்கள் என பயந்து அவரை தங்கள் படங்களில் வில்லனாக நடிக்க விடாதது.எல்லா போஸ்டர்களிலும் சிகரெட், ரத்தம், கத்தி அல்லது துப்பாக்கியுடன் முகத்தை விரைப்பாக வைத்து கொள்வது.
மீடியாவை பார்த்தால் தலை சுற்றுவது. ப்ரெஸ் மீட் தராமல் காலத்தை ஓட்டுவது. களப்பணியே செய்யாமல், கொள்கை எதுவும் இல்லாமல் அரசியல் வருகை, கட்சி, சி.எம் என வெத்து பில்ட் அப் மட்டும் தருவது.அடிக்கடி மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு.. அரசியலுக்கு வரப்போவது போல சீன் போடுவது.
படத்திற்கும், கருப்பு பணத்திற்கும் பிரச்னை வந்தால்.. தமிழக மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் வரை.. காலில் விழுவது. மக்களாகிய நீங்கள் அல்லது ஆண்டவன் சொன்னால் அரசியலுக்கு வருவேன் என பழியை அவர்கள் மேல் போடுவது. ரெண்டு தரப்புலயும் அப்படி சொல்லப்போறதே இல்லை. அதுதான் உண்மை.