ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம், கிரிக்கெட்டையும் அதில் நடக்கும் அரசியலையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் லால் சலாம் எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை.
மேலும், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் லால் சலாம் பலத்த அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் லால் சலாம் படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அனிருத் போட்ட பாடல்களினால் அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இதை அடுத்து வை ராஜா வை படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. அதன் பிறகு நமக்கு டைரக்ஷன் செட் ஆகவில்லை என்று எண்ணிய ஐஸ்வர்யா சில வருடங்களாக படம் எடுப்பதில் இருந்து விலகி இருந்தார். சமீபத்தில் தனுஷ் விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தின் மூலம் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறார். மேலும் மகளின் முயற்சிக்கு ஆதரவாக ஊக்கமளிக்கும் வகையில் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்கு ரஜினியும் ஒப்புக் கொண்டர். ரஜினி நடிப்பதால் கண்டிப்பாக லால் சலாம் படத்திற்கு நல்ல ரீச் கிடைக்கும் என்று மனதில் ஆசையுடன் காத்திருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் க்கு, தற்போது ஏமாற்றமே கிடைத்துள்ளது.
ஐஸ்வர்யா போட்ட கணக்குப்படி படத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பதால், முதல் நாள் தியேட்டரில் ஓரளவு கூட்டம் இருந்தது. ஆனால் அதன் பிறகு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வந்ததால் அடுத்தடுத்த நாட்களில் தியேட்டருக்கு மக்கள் செல்லவில்லை. லால் சலாம் வெளியான தியேட்டர் முழுவதும் காலியாக இருந்தது. அதே சமயம், சோசியல் மீடியாவில் ஆல் சலாம் படத்தை ரோஸ்ட் செய்திருந்தனர்.
இதனால் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பயங்கரமாக அடி வாங்கியது. மேலும் எதிர்பார்த்தபடி வசூல் செய்யாததால் படக்குழுவினர் முற்றிலும் ஏமாற்றமடைந்தனர். அதாவது படம் வெளியான முதல் நாளில் 3.55 கோடியும், இரண்டாவது நாளில் 3.25 கோடியும் மட்டுமே வசூல் செய்துள்ளது. முதல் இரண்டு நாட்களிலேயே மோசமான வசூலை கண்டலால் சலாம் அடுத்த இரண்டு நாட்களும் சரியாக வசூல் செய்யவில்லை. குறிப்பாக நான்காவது நாளான நேற்று படத்தின் வசூல் ஒரு கோடி மட்டும் தான். ஆகவே படம் வெளியான 4 நாட்களிலேயே பலத்த அடி வாங்கி படுத்தே விட்டது.
இந்நிலையில் இந்தியா முழுவதுமே கடந்த சில வருடங்களாகவே மத மோதல் இல்லாமல் இருந்து வருவதற்கு, சமீபத்தில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா அன்று, இந்தியாவில் எந்த ஒரு இடங்களிலும் சிறு அசம்பாவிதம் கூட நடை பெறவில்லை, அந்த வகையில் அணைத்து மதத்தினரும் பழைய சம்பவங்களை மறந்து ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவில், என்னமோ இங்கே மத மோதல் தலைவிரித்து ஆடுவது போன்று இன்றைய காலத்துக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு படத்தை எஎடுத்துள்ள ஐஸ்வர்யா, இதில் எங்க அப்பா சங்கி இல்லை, மனித நேயம் கொண்டவர் என்று உருட்டியது எல்லாம் வீணாபோய்விட்டது என்று சொல்லும் அளவுக்கு , லால் சலாம் படத்தின் போஸ்டர் அடித்த செலவு கூட தேறாது போல அந்த படத்தின் வசூல் என சொல்லும் அளவுக்கு மண்ணை கவ்வியுள்ளது லால் சலாம்.