குறைவான வயசு பையனை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபு மகள்… எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாகத் திருமணம் நடந்து முடிந்தது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே, பிரபுவின் மகளுக்கு இது இரண்டாவது திருமணம் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்போது இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான “திரிஷா இல்லனா நயன்தாரா” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குநராகக் களமிறங்கியவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சிம்புவின் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்கின்ற திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு, சுமார் 6 ஆண்டுகள் கழித்து இந்த 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் உருவான பகீரா திரைப்படம் வெளியானது. ஆனால், அந்த படமும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கைகொடுக்கவில்லை. தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த இயக்குனர் ஆதிக், அடுத்ததாக மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார்.

எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்து வெளியான “மார்க் ஆண்டனி” திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட் ஆனது. மார்க் ஆண்டனிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்ததாக நடிகர் அஜித்தை வைத்து ஏகே 63 படத்தை இயக்கும் வாய்ப்பும் ஆதிக்கிற்கு கிடைத்துள்ளது. இவ்வாறு 2023 ஆம் ஆண்டு முழுவதும் அடுத்தடுத்த அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொண்ட ஆதிக், இதே ஆண்டில் தன் காதலியையும் பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடித்து அசத்தி விட்டார்.

ஆஹா ஓஹோன்னு நடந்த திருமண நிகழ்ச்சியில் ரஜினி, கமல், நாசர், துல்கர் சல்மான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும், மணமக்களின் ஜோடிப்பொருத்தம் குறித்தும் வயது வித்தியாசம் குறித்தும் பலர் விமர்சித்து வருகின்றனர். ஆம், பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு தனது அத்தை மகன் குணால் என்பவருடன் திருமணம் ஆனது.

பின்னர் சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தாரிடையே தகராறு ஏற்பட்டது. இந்தப் பிரச்சினையால் இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அதையடுத்து அப்பாவுடனே வசித்து வந்த ஐஸ்வர்யா, கேம் மேக்கிங் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். அப்போது, ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் ஆதிக்கிற்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த டிசம்பர் 15-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் ஆதிக்கை விட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர் என்கிற தகவல் தெரியவந்துள்ளது. ஆதிக்கிற்கு தற்போது 32 வயதாகும் நிலையில், அவரது மனைவி ஐஸ்வர்யா அவரை 3 வயது மூத்தவர் என கூறப்படுகிறது. தற்போது பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கு 35 வயது ஆகிறதாம்.