மகனுக்காக 140 நாட்கள் பயணம் செய்யும் நெபோலியன்… எதற்காக தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் தசைவளக் குறைபாடு நோய் காரணமாக பாதிக்கப்பட்டு பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். மகன் அமெரிக்காவில் தாங்கி மருத்துவ சிகிச்சை செய்து வருவதால், மகனுக்காக அமெரிக்காவில் டென்னிஸ் மாகாணத்தில் குடும்பத்துடன் குடியேறினார் நெப்போலியன்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் குடியேறிய நெப்போலியன் சினிமாவில் கவனம் செலுத்துவதை குறைத்து கொண்டு அங்கே சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றை தொடங்கியவர் அந்த கம்பெனியில் சுமார் 1500 பேர் வேலை செய்யும் அளவுக்கு தன்னுடைய ஐடி கம்பெனியை வளர்ச்சி அடைய செய்துள்ளார்.பல முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு போட்டியாக நெப்போலியன் ஐடி கம்பெனி செயல்பட்டு வருகிறது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளித்து வருகிறார் நெப்போலியன். சினிமா துறையில் இருந்து தொழிலதிபராக தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டவர்களில் பலர் தங்களின் தொழிலில் வீழ்ச்சி அடைந்து மீண்டும் சினிமாவுக்கு வந்தனர். அந்த வகையில் நடிகர் நெப்போலியன் மிகப் பெரிய வெற்றியை தொழில்துறையில் பெற்று தொழில் அதிபராக வலம் வருகிறார்.

அமெரிக்காவில் ஐடி கம்பெனி மட்டுமின்றி சுமார் பல நூறு ஏக்கரில் விவசாயமும் செய்து வருகிறார் நெப்போலியன். இந்த நிலையில் அமெரிக்காவில் நிரந்தரமாக செட்டிலாகி உள்ள நெப்போலியன்.அவர் சினிமா துறையில் பணியாற்றியபோது அவருடைய அலுவலகத்தில் வேலை செய்தவர்களுக்கு தற்பொழுது வேலை இல்லை என்றாலும் கூட மாதம் ரூ. 25000 ரூபாய் தொடர்ந்து சம்பளம் கொடுத்து கொண்டிருக்கிறார் நெப்போலியன்.

இப்படி தன்னுடைய மகனுக்காக தன்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக மாற்றி கொண்ட நெபோலியன், மகன் தனுஷ் என்ன ஆசைப்டுகிறாரோ அதை உடனே நிறைவேற்றி தந்து, அதில் மகன் அடையும் மகிழ்ச்சியை பார்த்து தான் சந்தோசம் அடைந்து கொண்டு வாழ்ந்து வருகின்றவர் நெபோலியன், நெப்போலியனின் மகன் தனுஷ், யூடியூப்பர் இர்பானின் மிக பெரிய ரசிகராக, அவருடைய வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வர கூடியவர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இர்பான் அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்த நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக அமெரிக்காவில் பிரம்மாண்ட மாளிகை போன்ற வீட்டை கட்டியுள்ளதை இர்பானிடம் காண்பித்தார், இதை இர்பான் வீடியோவாக வெளியிட்டதோடு, அதில் தன் மகனுக்காக அவர் என்னென்ன வசதியெல்லாம் செய்துள்ளார் என தெரிவித்தது, எந்த அளவுக்கு மகனை நெபோலியன் நேசிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த இர்பான், நெப்போலியன் குடும்பத்தினருடன் கப்பலில் 7 நாள் சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போது கடல் வழியாக அமெரிக்கா முழுவதையும் சுற்றுலா சென்ற பயணத்தின் போது தன் மகனுக்காக தான் இந்த பயணத்தையே ஏற்பாடு செய்ததாக கூறி இருக்கிறார் நெப்போலியன். அதாவது பல வருடமாக அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியனின் மகன் தனுஷுக்கு இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்று ஆசை.

அவரை இந்தியாவுக்கு விமானத்தில் அழைத்து சென்றால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்ததால், மகனை கடல் வழியாக இந்தியா அழைத்து செல்ல முடிவெடுத்த நெப்போலியன். கடல் வழியாக இந்தியா வர 70 நாட்கள் ஆகும் என்பதால், அதற்கு ஒத்திகை பார்க்கும் விதமாக சமீபத்தில் 7 நாள் பயணமாக அமெரிக்காவை கப்பலில் மகனை அழைத்து கொண்டு சுற்றிப்பார்த்துள்ளார் நெப்போலியன் என கூறப்படும் நிலையில். மகனுக்கு தன்னையே அர்பணித்துள்ள நெப்போலியன், இந்தியா வருவதற்கு 70 நாள், மீண்டும் அமெரிக்கா செல்ல 70 நாட்கள் என 140 நாட்கள் கப்பலில் பயணம் செய்ய இருக்கிறார் நெபோலியன்.