நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, தொழில் அதிபர் என பல முகங்களை கொண்ட நெப்போலியன் 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ் மற்றும் குனால் என்ற மகன்களும் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளதால்,
கடந்த பல வருடங்களாக தனது மகன் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கும் சூழல் ஏற்படவும் தனது தொழிலை அமெரிக்காவில் தொடங்கினர். தற்போது அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியனுக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் சுமார் 1500 பேர் வரை வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. பல முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் இந்த நிறுவனத்தில் பனி புரிய தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் நெப்போலியன்,
இந்நிலையில் ஐடி தொழிலில் சாதித்து அமெரிக்காவில் செட்டிலான நெபோலியன், அங்கே சொந்தமாக இடம் ஒன்றை வாங்கி, விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நெப்போலியனின் மகன் தனுஷ் என்பவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு 10 வயதுக்கு மேல் தனுஷால் நடக்க முடியாமல் போனது, உலகில் பல்வேறு இடங்களில் தேடியும் மகனின் நோயை குணப்படுத்த முடியமால் இருந்த நெபோலியன்.
திருநெல்வேலி அருகில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் ஒருவர் இதற்காக பாரம்பரிய வைத்தியம் செய்து வருவதை அறிந்து அங்கு தனது மகனை அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார் நெப்போலியன். அங்கே நன்றாக சிகிச்சை அளித்தாலும் தங்குவதற்கு போதிய இட வசதி இல்லாததன் காரணமாக அருகில் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து அவருடைய மகனுக்கு அங்கேயே தங்கி சிகிச்சை கொடுத்து வந்துள்ளார் நெப்போலியன்.
தன்னுடைய மகன் போன்று பாதிக்கப்பட்டவர்கள் அங்கே வந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்கிற நல்ல உள்ளத்தில், உடனே அங்கு மருத்துவமனை ஒன்றை கட்டிக்கொடுத்துள்ள நெப்போலியன், கடந்த 12 ஆண்டுகளாக அந்த மருத்துவமனையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் நெப்போலியன். தன்னுடைய மகனுக்கு கிடைத்த நல்ல உயர்தர சிகிச்சை ஏழை குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற நல் எண்ணத்தோடு, இந்த மருத்துவமனையை நடத்தி வரும் நெப்போலியன். இங்கு வருபவர்களிடம் சிகிச்சைக்காக பணம் எதுவும் வாங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் போக்கிரி படத்தில் விஜய் உடன் நடித்த போது அமெரிக்காவில் இருந்து வந்த தன்னுடைய நண்பர்களை விஜயிடம் ஆறுமுக படுத்த படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருக்கும் கேரவனுக்கு அழைத்து சென்ற போது அங்கே நெபோலியன் அனுமதிக்கப்படவில்லை இதனால் அங்கே பாதுகாப்புக்கு இருந்தவர்களுக்கும் நெபோலியனுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திடீரென கேரவன் கதவை திறந்து வெளியே வந்த விஜய், அவர் தான் என்னை பார்க்க முடியாது என்று சொல்கிறார், பிறகு ஏன் இங்க மேனஸ் இல்லாமல் சத்தம் போட்டு தொந்தரவு செய்யிறீங்க என நெபோலியனை பார்த்து கோபத்துடன் பேசிவிட்டு, மீண்டும் கேரவன் உள்ளே சென்றுவிட்டார் விஜய். இதன் பின்பு விஜய் மற்றும் நெபோலியேன் இருவரும் பேசி கொள்வதில்லை.
இந்நிலையில் தன்னுடைய சொகுசு காருக்கு வரி செலுத்தாமல் நீதிமன்றம் செல்லும் விஜய் எங்கே.? தன்னுடைய மகன் போன்று பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் சிகிச்சை பெரும் வகையில் மருத்துவமனை கட்டி கொடுத்து சுமார் 12 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வரும் நெபோலியேன் எங்கே.? உண்மையில் கடவுளாக கும்பிட கூடிய நெபோலியனை அவமான படுத்திய விஜய்க்கு தான் மேனஸ் இல்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.