பல கோடி செலவில் பேஷியல் சிகிச்சை செய்யும் லெஜெண்ட் சரவணன்..அஜித், விஜய்க்கு டப் கொடுக்க தயார்..

0
Follow on Google News

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி லெஜெண்ட் சரவணன் அவர்களை தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய திறமையான நபர் என்றும் கூறலாம். 2022 ஆம் ஆண்டு வெளியான தி லெஜன்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவான அறிமுகமான இவர், இப்போது அடுத்த படத்தில் நடிப்பதற்காக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருச்செந்தூர் பூர்வீகமாகக் கொண்ட அருள் சரவணன் தமிழ்நாடு முழுவதும் லெஜெண்ட் சரவணா, சரவணா செல்வரத்தினம் ,சூப்பர் சரவணா ஸ்டோர், நியூ சரவணா ஸ்டோர்ஸ், எலைட் சரவணா என பல்வேறு வணிகங்களை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராகவும் முதலீட்டாளராகவும் வலம் வந்த இவர், தன்னுடைய கடை விளம்பரத்தில் தானே நடித்திருந்தார். பிரபல நடிகைகளான தமன்னா, ஹன்சிகா ஆகியோருடன் “பெஸ்ட் பெஸ்ட் லெஜெண்ட் சரவணா பெஸ்ட் ” என்று டான்ஸ் ஆடிய விளம்பரம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

அதேசமயம், “எப்படி தைரியமா விளம்பரத்துல நடிக்கிறாங்க” “காசு இருந்தா போதும் தமன்னா ஹன்சிகா என்று நானும் டான்ஸ் ஆடலாம் போலயே” என்று பலரும் அவரை விமர்சித்து வந்தனர். அவரது நிறத்தையும் தோற்றத்தையும் வைத்து உருவ கேலி செய்தனர். ஆனால் எதையும் காதில் போட்டுக் கொள்ளாத சரவணன், அடுத்தடுத்து தனது கடை விளம்பரங்களில் தானே உற்சாகமாக நடித்து வந்தார். இருப்பினும், உருவ கேலி, கடுமையான விமர்சனம் என அவரை தாக்கிக் கொண்டே இருந்தனர்.

தொடர்ந்து தனது கடை விளம்பரத்தில் நடித்து வந்த அண்ணாச்சிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வரவே, உடனடியாக களத்தில் குதித்து விட்டார். “யார் என்ன வேணாலும் சொல்லுங்க, எனக்கு புடிச்சிருக்கு நான் பண்றேன் என்னால முடியும் ” என்று தைரியமாக தனது சினிமா ஆசையை நிறைவேற்ற, தி லெஜன்ட் படத்தில் நடித்து முடித்தார்.

இயக்குனர் ஜெர்ரி, கதாநாயகி ஊர்வசி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், காமெடிக்கு விவேக் என பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படம் ஐந்து மொழிகளில் 2500 திரையரங்குகளில் வெளியானது.வெளியான முதல் நாளில் இரண்டு கோடி வசூல் செய்ததாகவும் செய்திகள் உள்ளன.
இந்த படத்திற்கு ஓரளவு பாசிடிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக படம் வெற்றி பெறவில்லை.

சோசியல் மீடியா முழுவதும் இணையவாசிகள் படத்தையும் அண்ணாசியையும் கேலி கிண்டல் செய்து வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் துவண்டு விடக்கூடாது என்று உறுதியாக இருக்கும் அண்ணாச்சி ஒரு பக்கம் பிசினஸ் மற்றொரு பக்கம் சினிமா என்று பிஸியாக வேலை பார்த்து வருகிறார்.
இப்படியான நிலையில், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று குழந்தைகளுடன் இரண்டாவது படத்தின் அப்டேட்டை பகிர்ந்ததாக வீடியோ ஒன்றையும் அண்ணாச்சியே ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்.

அதில் தாடி மீசை என முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் பங்கேற்று இருந்தார். தொடர்ந்து ஆயுத பூஜைக்கு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆட்டோ ஓட்டுவது, அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி ட்விட்டரில் போட்டோக்களை வெளியிடுவது என்று அடுத்த படத்திற்கான தனது கெட்டப்பை இணையத்தில் பகிர்ந்து வந்தார்.

அடுத்ததாக, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இலக்கிய இயக்குனர் துரை செந்தில்குமாரின் படத்தில் அண்ணாச்சி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதுமட்டுமின்றி தி லெஜன்ட் படத்தில் உருவ கேலிக்கு ஆளான மாதிரி இந்தப் படத்திலும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக முகத்தை இன்னும் இளமையாக காட்டுவதற்காக பல்வேறு பேசியல் சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.எனவே இரண்டாவது படம் விரைவில் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.