சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான படம் லெஜன்ட். இந்த படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் பல கோடி விலை கொடுத்து வங்கியுள்ளதாக தற்பொழுது ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ஆனால் இதன் உண்மை என்ன என்பது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில். இதன் பின்னணியில் லெஜெண்ட் சரவணனின் தில்லாலங்கடி செயல் அம்பலப்பட்டுள்ளது.
சுமார் சுமார் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் லெஜெண்ட். இந்த படத்தின் தயாரிப்பாளர் அதில் நடித்த சரவணன். இந்நிலையில் இந்த படத்தின் மொத்த பிசினஸ் சுமார் 8 கோடிக்குள் தான் என்றும் அதில் சரவணனுக்கு கிடைத்தது சுமார் 6 கோடி வரை தான் என்றும் கூறப்படுகிறது. இதனால் லெஜெண்ட் சரவணன் நடித்த முதல் படமே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இதைத் தொடர்ந்து லெஜென் படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விலை பேசியுள்ளார் தயாரிப்பாளர் சரவணன். சுமார் ஐந்து கோடிக்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் விலைக்கு பேசப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் 1 கோடி ரூபாய்க்கு கேட்டுள்ளனர், அதுவும் உறுதி படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அமேசான் நிறுவனத்திடம் லெஜென் படத்தை சுமார் 5 கோடி ரூபாய்க்கு விற்று விடலாம் என்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
ஆனால் அவர்கள் வெறும் 30 லட்சத்திற்கு தான் கேட்டுள்ளார்கள், நெட்பிலிக்ஸ் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் இந்த படத்தை கேட்டதற்கு இந்த படம் எங்களுக்கு வேண்டாம் என்று நேரடியாக சொல்லமால், மறைமுகமாக புறக்கணிக்கும் நோக்கில் இந்த படத்தை மிகக் குறைந்த விலைக்கு கேட்டுள்ளார்கள்.
மேலும் ஒரு சில நிறுவனங்கள் படத்தை நாங்கள் வெளியிடுகிறோம், அதில் வரும் லாபத் தொகையை வைத்து உங்களுக்கு பணம் தருகிறோம் என்று போன்று பேசி உள்ளார்கள். அப்படி வெளியிட்டால் லெஜன்ட் படத்தில் தயாரிப்பாளருக்கு 10 லட்சம் போன்ற சொற்ப பணம் தான் வந்து சேரும் என தெரிகிறது. இந்நிலையில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு பதிலாக நேரடியாக யூ டியூப் சேனலில் லெஜன்ட் படத்தை வெளியிடலாம் என்கின்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இப்படி தொடர்ந்து லெஜன்ட் படத்தை பிரபல ஓடிபி நிறுவனங்கள் மிகக் குறைந்த விலைக்கு கேட்பதால், அந்த படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சரவணன் மிக பெரிய அவமானத்தை சந்தித்துள்ளார். தன்னுடைய அசிங்கத்தை மறைப்பதற்காக கடந்த சில நாட்களாக லெஜன்ட் படத்தை பல கோடிக்கு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கியதாக சில ஊடகங்களுக்கு பணம் கொடுத்து லெஜன்ட் தரப்பில் இருந்து செய்தி வெளியிட செய்து பித்தலாட்டம் செய்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.