லெஜெண்ட் சரவணன் ஜோடியாகிறார் கீர்த்தி சுரேஷ்… சம்பளம் எத்தனை கோடி தெரியுமா.?

0
Follow on Google News

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லெஜன்ட், சுமார் 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது. பணம் இருக்கும் என்கிற ஒரே காரணத்திற்காக தெரியாத நடிப்பு தொழிலை ஆசைக்காக செய்து, தமிழ்நாட்டில் ஒரு தொழில் அதிபராக மரியாதையுடன் பார்க்க பட்ட லெஜெண்ட் சரவணன் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.

இருந்தும் தன்னிடம் பணம் இருக்கின்ற ஒரே காரணத்தினால் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவா நடிக்க தயாராகி வருகிறார் லெஜெண்ட் சரவணன். இதற்கு முன்பு இவருடைய நடிப்பில் வெளியான லெஜன்ட் படத்தில் முதலில் சரவணனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது, ஆனால் நயன்தாரா மறுத்து விட்டார், இருந்தும் பல கோடி சம்பளம் தருவதாக நடந்த பேச்சுவார்த்தையில்,

நீங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் சரவணனுடன் ஜோடியாக நடித்து என்னுடைய தகுதியை நான் இழக்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார் நயன்தாரா என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த புதிய படத்தில் எத்தனை கோடி சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை முன்னணி நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஆக வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார் லெஜெண்ட் சரவணன் என கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது முன்னாடி நடிகையாகவும் இருக்கும் கீர்த்தி சுரேஷிடம் புதிய படத்தில் லெஜென் சரவணன் ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது, ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து எந்த ஒரு உறுதியான தகவலும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகம் தருவதாக லெஜெண்ட் சரவணன் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இருந்தும் லெஜெண்ட் சரவணன் உடன் கீர்த்தி சுரேஷ் நடிக்க தயக்கம் காட்டி வருவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் போன்று பல முன்னனி நடிகையுடன் லெஜெண்ட் நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிளாட்பாரம் டூ சினிமா பைனான்சியர்… எப்படி வந்தது இத்தனை கோடி.? யார் இந்த அன்பு செழியன்.?