லெஜெண்ட் படத்தை வாங்க ஆட்கள் இல்லை… அண்ணாச்சி கொடுத்த பில்டப் எல்லாம் போலி தானா.?

0
Follow on Google News

சரவணா ஸ்டார் உரிமையாளர் அருள் சரவணன் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகும் படம் லெஜெண்ட். வியாபாரத்தில் வெற்றி அடைந்து, தமிழக முழுவதும் பல கிளைகளை திறந்து வியாபாரத்தில் வெற்றி கொடி நாட்டியவர் லெஜெண்ட் சரவணா. சினிமா மீது மோகம் கொண்ட இவர் பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று பல தருணங்களில் உணர்த்தியவர், அதே போன்று பணத்தால் அனைத்தையும் சாதிக்க முடியாது என்று சினிமாவில் நுழைந்த பின்பு சில தருணங்களில் உணர்ந்துள்ளார்.

முன்னனி நடிகைகள் விளம்பர படங்களில் நடிக்க தயங்கிய போது, அதிக சம்பளம் கொடுத்து தனது கடை விளம்பரத்தில் நடிக்க வைத்தவர் லெஜெண்ட் சரவணன். ஒரு கட்டத்தில் அவரே விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார், ஒரே நேரத்தில் பல முன்னணி நடிகைகள் மத்தியில் தன்னுடைய கடை விளம்பர படங்களில் செம்ம ஆட்டம் போட்டவர் லெஜெண்ட் சரவணன் விளம்பரத்தை பார்ப்பவர்கள், பண்டிகை நாள் வந்தால் அண்ணாச்சியை பிடிக்க முடியாது என பொறாமையில் பொங்கியவர்களும் உண்டு.

விளம்பர படங்களில் நடித்த அண்ணாச்சி ஒரு படத்தில் சினிமாவில் நடித்துவிட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அவருடைய ஆசையை நிறைவேற்றும் வகையில், அவருடைய விளம்பர படங்களை இயக்கிய இயக்குனர்கள் தான் அண்ணாச்சி நடிக்கும் லெஜெண்ட் படத்தையும் இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் ட்ரைலர், டீசர் அதிக வியூஸ் கடந்து யூ டுயூப்பில் சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து அண்ணாச்சி தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆசையும் வந்துள்ளது.

மேலும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு தனது சினிமா ஆசையை நிறைவேற்றிவிட்டு சென்று விடுவோம், தனது ஆசைக்காக இந்த படத்தில் லாபம் கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை என்று ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தார் அண்ணாச்சி. டீசர் மற்றும் ட்ரைலர் அதிக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் வியாபார தொகையை அதிகமாக உயர்த்தி. இந்த படத்திலும் பெரும் தொகையை பார்த்து விடலாம் என முடிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து இதற்கு முன்பு அண்ணாச்சி படத்தை வாங்க போட்டி போட்ட பலர் விலையை உயர்த்திய பின்பு பின் வாங்கியுள்ளார். படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் டீசராக அல்லது ட்ரைலராக இரண்டு நிமிடத்தில் வெளியானதை அதிக நபர்கள் பார்த்ததை வைத்து படத்தின் விலையை உயர்த்தியது நியாயம் இல்லை. என்றும் மேலும் 2.30 நேரம் அண்ணாச்சி முகத்தை தொடர்ந்து பார்க்க மக்கள் விரும்ப மாட்டார்கள்.

மேலும் ட்ரைலரை பார்த்து இந்த படத்தை வாங்கி ஏமாற்றம் அடைய தயாராக இல்லை என யாரும் அதிக விலை கொடுத்து அண்ணாச்சி படத்தை வாங்க முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் அண்ணாச்சி சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையை நிறைவு செய்யுமே தவிர, வெற்றி அடைந்து வசூல் சாதனை படைக்கும் என்பதெல்லாம் அண்ணாச்சி பேராசை என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தை வியாபாரம் செய்த நயன்தார – விக்னேஷ் சிவன்.. அட..கடவுளே.. என்ன செய்துள்ளார்கள் தெரியுமா.?